Eye Twitching : வலது கண், இடது கண் எது துடிச்சாலும் காரணம் இதுதானாம், அலர்ட்டா இருங்க!

கண் இமை அல்லதுகண் தசைகளின் இயக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலையே கண் துடிப்பது. இதில் ஒவ்வொரு வகை துடிப்புக்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இது சில நொடிகள், சில நிமிடங்கள், சில மணி நேரம் அல்லது சில நாட்கள் வரை இருக்கலாம். பொதுவாக இரண்டு தசைகள் கண் சிமிட்டுவதை கட்டுப்படுத்துகிறது. ஒரு தசை கண் இமை மூடுவதையும்,. மற்றொன்று கண் இமை திறப்பதையும் கட்டுப்படுத்துகிறது. இந்த இரண்டு தசைகளில் ஏதேனும் பிரச்சனை வந்தால் கண் துடிப்பு பொதுவானது. இந்த துடிக்கும் கண்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

​துடிக்கும் கண்கள் என்றால் என்ன?​

துடிக்கும் கண்கள் சிறிய அசெளகரியமானது. சமயங்களில் இது உடனடியாக சரியாகிவிடும். அப்படி கண்கள் துடித்தால் உங்கள் மன அழுத்தம் குறைக்க வேண்டும் என்று உணர்த்தும் அறிகுறிகளாக கொள்ளலாம்.
இது தீவிரமான நிலை அல்ல ஆனால் வண்டி ஓட்டும் போது முக்கியமான வேலையில் இருக்கும் நிலையில் கடுமையான சிரமம் அல்லது முற்றிலும் எரிச்சலூட்ட செய்யலாம். உடலில் மற்ற இடங்களில் பிடிப்புகள் பொதுவானவை. கண்கள் ஏன் துடிக்கின்றன. துடிக்கும் கண்களில் முக்கியமானதாக மூன்று விதமாக பார்க்கப்படுகிறது. அது குறித்து தெரிந்துகொள்வோம்.https://navbharattimes.indiatimes.com/dmp_orion.cms?msid=100180505&sec=health&secmsid=48909418&wapCode=tamil&apikey=tamilweba5ec97054033e061&rvMsid=96563569&isXpVdo=tml_xp&isAmp=false

​கண் நரம்புத்தசை Hemifacial Spasm​

இது நரம்புத்தசை கோளாறு ஆகும். இதில் கண் தன்னிச்சையாக மூடுவது வாய், கன்னம் மறும் கழுத்தில் உள்ள தசைகளுடன் சேர்ந்து நிகழ்கிறது. முகத்தின் ஒரு பக்கம் மட்டுமே இந்த நிலையில் இருக்கும். இந்நிலை நடுத்தர வயதான பெண்களிடம் மட்டுமே பார்க்கப்படுகிறது. இது கண் இமைகளின் தசைகளை இழுக்க செய்கிறது. இந்நிலையில் படிப்படியாக கண்கள் முழுவதுமாக துடிக்க செய்யும். இதற்கு காரணம் முக நரம்புகளின் எரிச்சலாக இருக்கலாம்.

​கண் இமை மயோக்கிமியா Eyelid myokymia​

கண்ணை உள்ளடக்கிய மற்றொரு நிலை இது. இது அவ்வபோது உண்டாகும். இதற்கு பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படாது.

​துடிக்கும் கண்களில் Blepharospasm​

ஒரு நரம்பு மண்டல நிலை. இது அதிகரித்த கண் சிமிட்டுதல் மற்றும் இரு கண்களையும் மூட காரணமாகிறது. சில நேரங்களில் மூளையின் ஒரு பகுதியான பாசல் கேங்க்லியா எனப்படும் குறைபாட்டுடன் இணைக்கப்படுகிறது. இது அரிதானது. இது டிஸ்டோனியா எனப்படும் ஒரு வகை இயக்க கோளாறு ஆகும். இங்கு தன்னிச்சையான இயக்கங்கள் தொடர்ந்து நீடிக்கும். நாளடைவில் மோசமாகும்.

முதலில் கண் சிமிட்டுதல் விகிதம் அதிகரிக்கிறது. மேலும் கண் இமைகள் மூடப்படுவதற்கு
கண்களை சுற்றியுள்ள தசைகள் அழுத்துவதற்கும் வழிவகுக்கிறது. இது குறிப்பிடத்தக்க செயல்பாட்டுக்கு வழிவகுக்கலாம். இதற்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படலாம். இது கடுமையான பார்வை குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

​துடிக்கும் கண்களில் Meige syndrome​

தீங்கற்ற அத்தியாவசிய Blepharospasm உள்ளவர்கள் சமயங்களில் இந்த மீஜ் அறிகுறியை உண்டாக்குகிறார்கள். இது கண்கள், கீழ் முகம் மற்றும் தாடையை நகர்த்தும் தசைகளின் வலிமையான அடிக்கடி வலிமிகுந்த பிடிப்புகளால் உண்டாகிறது. இவர்களுக்கு நாக்கு மற்றும் தாடை மற்றும் கண் இமைகளில் பிடிப்பு இருக்கும். மூளையின் கேங்கிலியாவில் தவறு இருப்பதாக சொல்லப்படுகிறது.

துடிக்கும் கண்களை கொண்டுள்ள மக்கள் நாள்பட்ட சமயங்களில் மோசமான நிலைமையை எதிர்கொள்ளலாம்.

வீங்கிய கண் இமைகள்
இளஞ்சிவப்பு கண்கள்
வறண்ட கண்கள்
சிவப்பு கண்
எரிச்சலூட்டும் கண்
வீக்கம்.

​துடிக்கும் கண்களுக்கு என்ன காரணம்?​

துடிக்கும் கண்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
மருத்துவ காரணங்கள் தவிர சொல்லப்படும் காரணங்கள்.

  • பிரகாசமான விளக்குகள் அல்லது சூரியன்.
  • கண் சிரமம்
  • தூக்கம் இல்லாமை
  • ஒளி உணர்திறன்
  • அதிக உடல் உழைப்பு
  • சில மருந்துகளின் பக்கவிளைவுகள்
  • புகைத்தல் அல்லது புகையிலை பொருள்கள் பயன்படுத்துதல்
  • மது
  • காஃபின்
  • மன அழுத்தம்

Comments are closed.

© 2020 Spirituality