இதனடியில் உபதேசிக்கும் “உபதேசம்: – இதுவரையில் உபதேசித்திருந்த போதிலும் மாயைக்குள் அகப்பட்டிருக்கும் பெண்களும், ஆண்களும் அந்த மாயையிலிருந்து விடுபட
அவர்கள் மனத்திற்கு நன்றாக விளங்கும்படி, மறுபடியும் மூன்றாம் முறையும் விளக்கப்படுகிறது. முன்பே கூறியது போல் ஒருநாள் சுவாசத்தை அடக்கிப் பார்ப்பார்களேயானால் இதன் அனுபவம் உங்களுக்கு உயர்வானதாக அறியமுடியும்.
மானிடப்பிறவி கடைத்தேற எல்லா உபதேசங்களும் இந்நூலில் எழுதப்பட்டிருக்கின்றன. கடைத்தேறுபவர்களுக்கு இந்நூல் ஒன்றே போதுமானதாக இருக்கின்றது என உறுதியாகக் கூறமுடியும்.
நாம் ஒரு காரியம் நினைத்து வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுப் போகும்போது, எந்த எண்ணங்களும் இல்லாமல் வழிநடந்து குறித்த நேரத்திற்குள் போய்ச் சேர்ந்து அவ்விடத்திலுள்ள வேலைகளைப் பார்க்கும் போது மட்டும் மனத்தை அக்காரியங்களில் கவனமாக வைத்து இருப்போம். பின் அதற்கு வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடித்து மறுபடியும் வீட்டிற்குத் திரும்பி வருவோம்.
அப்பொழுது என்ன வேலை செய்து முடித்தோமோ அல்லது அவ்வேலைகளைச் செய்யாமல் திரும்பி வந்தோமோ, அல்லது வேறு எந்த வேலையாவது அறிந்து கொண்டோமோ அதனை நினைக்காமல் இருக்கவேண்டும். மேலும் இரண்டாம்
மந்திரங்களையும் சுவாசத்துடன் சேர்த்து உள்ளுக்குள் இழுக்கும்போது, வெற்றி கொண்டு வருவதே இராஜயோகம் என்று சொல்லப்படுகிறது. உபநிடதங்களும், பெரியோர்களும்
சொல்லுவதும் இதுவேயாகும். இப்படிப்பட்ட மகா இரகசியத்தை உங்களுக்கு இதன் மூலம் தெளிவாக்குகிறோம்.
பிரபஞ்சத்திலுள்ள உயிர்களின் மனத்தை எல்லாம் எதுவும் நினையாமல் அமைதியாக இருக்கச் செய்யவேண்டும், அவ்வாறு இருக்காமல் அதற்கு நேர்மாறாக இருந்து, மனத்தின் போக்கிற்கு ஏற்றபடி நடக்கின்றது. எவ்வாறு எனில், ஏதாவது ஒரு காரியத்தை வீட்டை விட்டு வெளியில் கிளம்பியவுடன் தண்ணீரில் நீர்க்குமிழிகள் தோன்றித் தோன்றி எவ்வளவு சீக்கிரமாக மறைகின்றனவோ அதுபோல், நிமிடத்திற்குள் கணக்கற்ற எண்ணங்கள் தோன்றித் தோன்றி அப்போதே இமைக் கொட்டுவதற்குள் மறைந்து, மனம் வேறு காரியத்தில் ஈடுபட்டு ஓடி, அதையும் மறந்து மறுபடியும் வெவ்வேறு
காரியங்களில் யோசனை செய்து கொண்டே இருக்கும். இவ்வாறு தான் குறித்த இடம்போய் சேர்வதற்குள் பலவிதமான யோசனைகள் தோன்றித்தோன்றி அக்கணமே மறைந்து மறுபடியும் அந்த ஞாபகம் இல்லாமல் பூர்த்தியாக மறந்து விடுகிறது.
பிரபஞ்சத்திலுள்ள உயிர்களின் மனத்தை எல்லாம் இந்நிலையே எப்பொழுதும் உண்டாகிக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட மனத்தை எப்பொழுதும் அடக்கியிருக்க
வேண்டுமென்றால், சாதாரணமான மக்கள் அவரவர்களின் வேலைகளை முடித்து,
நிம்மதியடைய இரவு பதினொரு மணியாகும்.
அதற்குமேல் விழித்து மூன்று மணிக்குள் எழுந்திருக்க வேண்டும். இதனிடையே நித்திரையில் இருக்கும் போது நாலுமணி நேரம் மட்டுமே இந்தப்பாழான மனம் நித்திரையில் அடங்கியிருக்கும். அச்சமயத்திலும் மனம் கனவினைக் காணத்
தொடங்கும்.
கனவில் தன் வீட்டில் திருடர்கள் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு போனாலும், தன் மீது பாம்பு ஏறினாலும், தன் உடலில் துணிகள் இல்லாமல் போனாலும், தனக்குத் தெரியாமல் தன்னைத்தான் மறந்து நித்திரை செய்கின்றான். அப்படிப்பட்ட சமயத்தில் மனக்கண் நினைவுகளின் மூலமாக அறிந்து எதையும் பார்ப்பதில்லை.
அப்படியிருக்கும்போது இரவு நித்திரையில் மனம் வெளியில் சென்று திரிந்து தான் இரவு நித்திரையில் கண்ட பொருட்களை எல்லாம் காலையில் அம்மனம் எவ்விதமாகச்
சொல்லுகின்றதோ, அதனையே நினைத்துக் கனவில் கண்டவற்றை மறுபடியும் ஞாபகத்திற்குக் கொண்டு வரும்படிச் செய்கின்றான். அதனால் மனமும் தான் கண்டவற்றை எல்லாம் எடுத்துக் காட்டுகின்றது.
ம்மனம் ஒவ்வொரு சமயத்தில் கனவே இல்லாமல் அடங்கியிருக்கும். அப்படி அடங்கியிருப்பதே “சுழுத்தி” – என்பர். அதாவது மனத்திற்கு இந்தச் சுழுத்திய தன்மையை அடைந்து இருப்பதே “சமாதிநிலை” – என்று சொல்லப்படுகிறது. இந்தச் சமாதிநிலையில் காணப்படும் தன்மையே யோக திருட்டி எனவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சமாதியில் மனம் ஈடுபடாமல் இருப்பது, “பிரளயகாலம்* வந்தபோது பிரபஞ்சம் எல்லாம் எவ்விதமாகத் தண்ணீரில் மூழ்கி விடுகின்றனவோ, அதுபோல்
பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிர்களின் மனத்தில் எல்லாம் இரவு நித்திரையில் நாலுமணி நேரம் நித்திரையில் இருந்து நித்திரை விட்டு எழுந்தவுடன் மறுபடியும் இரவு நித்திரை செய்யும் வரையில் மனமானது எத்தனை எண்ணங்களை எண்ணிக்
கொண்டிருக்கும். அப்படி எண்ணிய எண்ணங்கள் எல்லாம் ஞாபகத்தில் இருக்காது. ஆனால் அவர்களுக்கு எது முக்கியமான தகவலோ, அதுமட்டுமே ஞாபகமிருக்கும்.
மற்றவற்றை மறந்துவிடும்.
மனம் எப்படி நிமிடத்திற்குள் நினைத்து உடனே மறந்து விடுகின்றதோ, அதேபோல் பிரபஞ்சத்திலுள்ள உயிர்களின் மனத்தை எல்லாம் மாயையால் கட்டுப்பட்டு அவை
நிமிடத்திற்குள் அழிந்து போகும் தேகமாகும். வெகுகாலங்கள் இருப்பதாக எண்ணி, அதிகத் துன்பங்களை அடைந்து, நல்வழியிலும், துன்மார்க்க விருத்தியிலும் திரவியம் சம்பாதித்து இப்போதுள்ள ஆண், பெண் பிள்ளைகளுக்குச் சொத்துகளைச் சேகரித்துக் கொண்டே வரவர, ஆயுத்தமாக இருக்கின்றனர்.
இவ்வாறு இருந்தபோதிலும் திடீரென ஏதோ வியாதிக்கு ஆட்பட்டு, இவ்வுயிர் இவ்வுடலை வட்டுப் பிரிந்து வேறொரு உடலுக்குப் போய் பிரவேசித்து மறுபிறப்பை
எடுக்கின்றது. அங்குச் சிலநாட்களிலிருந்து அந்தப் பிறப்பில் புதியதாய் வரும் ஆண், பெண்பிள்ளைகளுக்கு மறுபடியும் தினம் சம்பாதித்து வைத்து, மறுபடியும் மரணமடைந்து வேறு உடலுக்குப் போய் மறுபடியும் அங்குள்ள ஆண், பெண்பிள்ளை
களுக்குச் சொத்துச் சேர்த்து வைத்து இப்படியாகப் பல பிறவிகளை எடுத்து பெண்பிள்ளைகளின் மேல் அதிகப் பற்றுக் கொள்வதனால் பிறவி அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
கடவுள் ஆண், பெண்களை இப்படிப்பட்ட ஆசையைத் தூண்டி அவர்களைச் சூத்திரதாரியைப் போல் இருந்து ஆட்டி அவர்களின் கூத்துகளை எல்லாம் பார்த்துக் கொண்டு வருகின்றான். ஆதலால் இந்தக் கடவுள் மாயைக்கு உட்படாமல்
தப்பித்துக் கொள்ளும் பொருட்டே இந்நூல் எழுதப்பட்டது. ஆண், பெண்களுக்குக் கடவுளால் மறைக்கப் பட்டிருக்கும் மாயையை நீக்க, இந்நூல் ஒன்றே போதுமானதாக இருக்கின்றது.
இந்நூலைப் படித்து இதில் கூறிய உபதேசத்தைச் சதாகாலமும் அப்படியே யோசித்து வந்தால், மேலான ஞானத்தைப் பெறப் பாத்திரமாவார்கள். ஆதலால் இதனடியில்
சொல்லப் போகும் இரண்டு மந்திரங்களைப் பரிசீலித்து வந்தால் உங்கள் மனம் வெளியில் ஒடாமல் நின்றால், இச்சுவாசப் பயிற்சியை எக்காலமும் செய்து கொண்டே வரவேண்டும்.
ஒரு காரியமாக வெளியே செல்லும்போது அங்குமிங்கும் பார்க்காமல் சாலையில் வண்டிகளின் பயமில்லாமல் இருக்க வேண்டும். அதற்காக வலக்கை ஓரமாகச் சென்று
தலைகுனிந்து தன்பாத பெருவிரலிலிருந்து மூன்றடி தூரத்தில் பார்வையை வைத்துப் பார்த்துக் கொண்டே செல்லவேண்டும். அச்சமயம் சுவாசம் மூக்குத் துவாரங்களின் வழியாகப் பிரவேசிக்கும்போது, அந்தச் சுவாசத்துடன் கூடவே ‘ஸோ”
என்று சொல்லாமல் மனத்தினால் நினைத்து சுவாசத்தை உள்ளிழுத்து மறுபடியும் சுவாசம் வெளியே வரும்போது அதனுடன் கூடவே ‘ஹம்’ என்ற மந்திரத்தைச் சேர்த்து
வெளியில் விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மூச்சு உள் செல்லும்போதும், வெளிவரும்போதும் இவ்விரண்டு மந்திரங்களைச் சேர்த்துச் செய்து கொண்டே வழியில் நடக்க வேண்டும்.
இவ்விதமாக எப்பொழுதும் அதாவது நடக்கும் போதும், இருக்கும் போதும், படுக்கும் போதும், மலசலம் கழிக்கும் போதும், பேசுகின்ற போதும், எந்த நேரமும் இதை அனுசரித்து வந்தால் மனம் வசமாகும். இந்தச் சுவாசம் நிமிடத்திற்கு 15 முறை
நடக்கின்றது. இப்படி நாள் ஒன்றிற்கு 24 மணி நேரத்திற்குள் இருபத்தோராயிரத்து அறுநூறு முறை சுவாசங்கள் நடந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்ட மகாரகசியத்தின் அம்சமான சூத்திரமாகிய சுவாசத்தை வீணாகச் செலவழிக்காமல் மேற்சொல்லிய இரண்டு மந்திரங்களைச் சேர்த்து நடத்தவேண்டும். இப்படி நடத்தும்போது அதனை
“இராஜயோகம்” – என்று சொல்வார்கள்.
இந்த இராஜயோகத்தை எல்லாச் சாதியினரும், குடும்பத்திலுள்ள ஆண், பெண் அனைவரும் அனுசரித்து வர, இந்நூல் வழிகாட்டியாக எழுதப்பட்டுள்ளது.