காதல்

காதல் உயிரோடு உறவாடும் தென்றல்
கனவுகளின் அற்புதத்தை உணர்த்தும் அதிசயம்

ஆசை நரம்புகளின் இனிய இசை நாதம்
காலங்களின் சுகங்களை உணர்த்தும் கருவி

சிரு துறும்பையும் இரும்பாக மாற்றும் மந்திரம்
காதலர்கள் பிரிந்தாலும் வாழ்விக்கும் அற்புதம்

முடியாது

முள்ளைக் கையால் மடக்க
காலால் மிதிக்க முடியாது!

காற்றை கண்ணால் பார்க்க
கையால் பிடிக்க முடியாது!
Read the rest of this entry »

அம்மாவாசை

ஒசையிடாமல் போகும் வெண்நிலவே
என்ந்தன் நிழல்கூட உன்னைப் பார்க்கவில்லையாம்

ஏனென்றால் இன்று உனக்கு
அல்லியோடு முதலிரவாம்!

தைத்திருநாள்

பழசை மறந்து புதுசை
நினைவுட்டும் நன்னாளை

கசப்பை மறந்து இனிப்பை
புகட்டும் பொன்னாளை

வானை முட்டுகின்ற வரைக்கும்
வாழ்த்து கூறும் தைத்திருநாளை

வாழ்க வாழ்க
என்று வரவேற்க்கின்றேன்.

காற்று

மாலை நேரப் பூங்காற்று
மனசுக்குள்ளே தாலாட்டுது

கண்கள் தூங்கிப் போகத்தான்
இமைகளோடு போர் தொடுக்குது

உல்லாசத் தொன்றலிலே உற்சாகம் பிறக்குது
உள்ளத்தில் உணர்ச்சி நரம்புகள் தானக துடிக்குது

என் தேகச் சூடு குறையத்தான்
தென்றல் வந்து தண்ணீராகப் பாயுது
Read the rest of this entry »

அழகு குறிப்பு

பொன்வானிலே வண்ண மேகங்கள்
வட்டமேடை கட்டி ஆட!

அதைப் பார்த்துதான் தரைமீதினிலே
வண்ண தாமரைகள் பூத்துக் குலுங்கி ஆட!

நடு இரவில் தென்றல்
வந்து ஜாதகங்கள் பார்த்து
Read the rest of this entry »

நான் எழுதிய முதல் கவிதை

இயற்கை அன்னையே !
உன்னை நான் வரைந்தேன்
என்னை நான் மறந்தேன்

இந்த உலகின் அழகுகள் எல்லாம்
என்ந்தன் கவிதைக்குள்ளே
உன்னால் கொண்டு வந்தேன்!

இதுவே நான் எழுதிய முதல் கவிதை!
Read the rest of this entry »

பள்ளி வாழ்க்கை

கல்வி என்னும் பூந்தோட்டத்தில்
காற்றோடு காற்றாக கலந்து இருந்தோம்

பாடம் என்னும் பூவுக்குள்ளே
தேனோடு தேனாக கலந்திருந்தோம்

தேர்வு என்னும் காட்டுக்குள்ளே
மானோடு மானாக இணைந்திருந்தோம்

வெற்றி என்னும் இளந்தென்றலின்னுள்ளே பூங்காற்றாக மாறி
வாழ்க்கை என்னும் சோலையில் இணைந்துவிட்டோம்.

எழுதியது ஜெய்கணேஷ் காலம் (1997)

ஒரு தலைக் காதல்

கண்ணே! இரவினுள் நிலவொளியில்
சிறு போராட்டம் நடக்குது
அல்லிக்கும் நிலவுக்கும் இது இயற்கையின் காதல்!

கண்ணே! மனதினுள் உன் நினைவொளியில்
பெரும் போராட்டம் நடக்குது
என் மனசாட்சிக்கும் இதயத்திற்கும் இது ஒரு தலைக் காதல்!

-ஜெய்கணேஷ்

காதலே கேள்வியா?

உன்னை கண்டவுடன் காலையில் பூத்தது காதல் பூவா
கன்னியே என் கண்களில் தோன்றிய நோவா!

நிலவொளியில் தோன்றி மறைந்த கன்னியே
மறைந்த தாமரையோ தோன்றிய அல்லியோ நீ

அன்பால் என்னோடு உருவாகி
பண்பால் என் உள்ளத்தில் பயிராகி

பெண்பால் உன் மீது காதல்
கொள்ள செய்த கன்னியே

நீ வரும் போது பூங்காற்று என்னிடம்
நீ திரும்பும் போது கொடும் தீ காற்று என்னிடம்

காதல் என்னும் பெயரால் கனவுகள் கொடுத்தவளே
கண்கள் இரண்டால் பல காட்சிகள் காட்டியவளே!

நீ தேவதையோ மோகினியோ நான் அறியேன்
ஆனால் என் இதயம் என்னிடம் இல்லை

உன் இதயம் எனக்குறியதா என்றும்
தெரியவில்லை பதில் சொல்வாய் பசுங்கிளியே!

நான் உன்மீது கொண்ட காதலே ஒரு கேள்வியா?

எழுதியது ஜெய்கணேஷ் காலம் (1997)

© 2020 Spirituality