முன் கூறியது போல் யோகத்தைப் பெற விரும்புபவர்கள் சூரிய சந்திரகலைகளில் பிராணவாயுவைச் செலுத்தவேண்டும். அப்போது பிருதிவி (மண்), அப்பு (நீர்), தேயு (அக்கினி), வாயு (காற்று) என்னும் நான்கு தத்துவங்களும் விலகும். அப்போது
அப்பிராணவாயு தத்துவமாகிய வெட்டவெளியை அடையும். அச்சமயம் சுவாசம் குறைந்து விடும். அக்காலத்தில் அமைதி (பந்தனம்) செய்யக்கூடும்.
அதாவது, பன்னிரண்டு அங்குல சுவாசத்தில் ஓர் அங்குல சுவாசம் நிறுத்தி, பதினோர் அங்குலம் ஆடச் செய்தால் இவ்வுலக இச்சையானது நீங்கிவிடும். இரண்டாம் அங்குலம் நிறுத்திப்பத்து அங்குலம் ஆடச்செய்தால், மனம் ஆனந்ததத்திற்கு ஆட்பட்டு ஞானமும், செல்வமும் பெருக்கும். மூன்றாம் அங்குலம் நிறுத்தி ஒன்பது அங்குலம் ஆடச் செய்தால் விவேகியாவான்.
நான்கு அங்குலம் நிறுத்தி எட்டு அங்குலம் ஆடச்செய்தால் தூர தேசத்தில் நடக்கும் விசேடங்களைச் சொல்வான். ஆறு அங்குலம் ஆடச் செய்தால் ஆகாயத்தில்
நடக்கும் அனைத்தையும் அறிந்து கொள்வான். ஏழு அங்குலம் நிறுத்தி ஐந்து அங்குலம் ஆடச்செய்தால், சரீரம் காயசித்தி அடையும். எட்டு அங்குலம் நிறுத்தி நான்கு அங்குலம்
ஆடச்செய்தால், அணிமாதி சித்திகள் அடைவான்.
ஒன்பது அங்குலம் நிறுத்தி மூன்று அங்குலம் ஆடச்செய்தால், நவ கண்டங்களில் சஞ்சரிப்பான். பத்து அங்குலம் நிறுத்தி இரண்டு அங்குலம் ஆடச்செய்தால், ஓர் உடலை விட்டு மற்றொரு உடலுக்குள் பிரவேசிப்பான். பதினோர் அங்குலம் நிறுத்தி ஒரு அங்குலம் ஆடச்செய்தால், தனது ஆத்மாவில் ஐக்கியமாவான். பன்னிரண்டு அங்குலச் சுவாசமும் வெளியிடாமல் நிறுத்தினால் அந்தச் சுவாசம் உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்படிப்பட்ட பரமயோகி இறப்பினை வென்று அன்னபானாங்கள் இல்லாமல் நீடுழிக்
காலம் சமாதியில் நின்று ஆனந்தமாக இருப்பான். நல்ல இராச்சியமும், தர்மமுடைய தேசமும் என்று சொல்லக் கூடிய கோயில்களில் வசித்து, சத்திய நாடியைப் பிராணயத்தில் சொல்லியது போல், பிரம்மத்தண்டின் (முதுகெலும்பின்) மத்தியிலிருக்கும். வெள்ளை நரம்பிலுள்ள சிறிய துவாரங்களின் வழியாகப் பிராணவாயுவைப் போகும்படிச் செய்து பிரம்ம மந்திரத்தில் நிறுத்தவேண்டும்.
அப்படி நிறுத்தினால் பிராணனுடைய அசைவிற்கு அழிவு ஏற்படுகின்றபோது, மனம் மிகவும் சாந்தியடைகிறது. அப்போது ஆகாயம் ஒன்றுமில்லாத இருப்பிடமாக இருக்கும்
என்று சொல்லப்பட்டிருக்கின்றது. பிராணவாயு, மனோவாயு இவ்விரண்டும் வசமானபோது எண்ணங்களெல்லாம் சமாதியில் அடங்கிவிடும். அப்போது மனம் புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக் கரணங்களுடன் அழிந்துவிடுகின்றன.
இவையெல்லாம் அழிந்தவுடன் ஆத்மா அமைதியை அடைகின்றது. அப்போது உயிர் சீவசொரூபியாக இருந்து முக்தியை அடைகின்றது. வாயு பிரம்ம மந்திரத்தில் எப்போது
போகின்றதோ அப்பொழுது அல்லும் பகலும் நல்ல நிலையில் இல்லாமல் இருந்தால் காலத்தை அனுசரித்துச் செல்ல வேண்டும்.
எதுவரை தலையின் உச்சிக்கு வாயு செல்கின்றதோ அதுவரையில் யோகிகளுக்கு ஆயுள் விருத்தியாகின்றது. தீர்க்கக் காலம் சமாதியை அடைந்து சித்தயோகி ஆகின்றான்.
பூர்வ மரணகாலத்தைத் தெரிந்து கொண்டு தலை உச்சியில் பிராணவாயுவை நிறுத்திக் காலனை வெல்லுகின்றான். தனக்குத் தேவைப்படும் போது பிராணனை விட்டு
விடுகின்றான்.
நமது சரிரத்திலுள்ள எழுபத்தாறாயிரம் நாடிகளும் வாயு பிரவேசிக்கும் மார்க்கமுண்டு. அவற்றில் சுழிமுனை என்னும் மத்தியநாடி சாம்பவி சத்தியாகும். மற்ற இடை, பிங்கலை, குஹ் சரசுவதி, யசசுவினி, பூஷ, விசுவோதர, வர்ண, அஸ்தி, சிங்குவை, பயசுவினி, சங்குனி, காந்தாரி, அலம்புச என்னும் பதினான்கு நாடிகள் சிரேசுபட்டமானவை. அவற்றிலும் சுழிமுனை, பிங்கலை, இடைகலை என்னும் மூன்று நாடிகளும்
பிரதானமானவைகள். இவற்றில் சுழிமுனை நாடியே சிரேசம் பட்டவையாகும்.
இதுவே பரமநாடி எனவும் சொல்லப்படுகிறது. சுழிமுனை நாடிக்கு இடது பக்கத்திலிருப்பது இடைநாடி. இது இடதுநாடியில் பரவியிருக்கும். சுழிமுனை நாடிக்கு வலது பக்கத்திலிருப்பது பிங்கலைநாடி. இது வலது நாடியில் பரவியிருக்கும். நாடிகளில்
அரசயிலையில் ஓடிக் கொண்டிருக்கும் நரம்புகளைப் போல் நமது சரீரத்தில் கிளைகிளையாய் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நாடிகளின் வழியாய் வாயு யோக அப்பியாசத்தால் கட்டப்பட்டிருக்கும்.
மனம் எங்கெங்கு உண்டோ ? அங்கங்கு வாயுவும் உண்டு. மனம் எங்கெங்கு இல்லையோ அங்கங்கு வாயுவுமில்லை என்பது போல் எந்த யோகியினால் பிராண வாயு
கட்டப் படுகின்றதோ யாரால் மனம் கட்டப்படுகின்றதோ அவனாலே பிராணன் கட்டப்படுகின்றது. அமம், பிராணன் என்னும் இவ்விரண்டும் ஒன்றைக் கட்டினால் மற்றொன்றும் தானாகக் கட்டப்படுவது உறுதியாகும். மனத்திற்குப் பிராணசலனம் வாசனை. அவற்றில் ஒன்று நட்டமானாலும், இரண்டாவதும் உடனே நட்டமாகும் என்பது உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.
உலகில் அனைத்துப் பிறவிகளும் சிரத்தை எனும் பக்தியுடன் செய்யக் கூடிய பிராணயாம அப்பியாசத்தினால் அநாதியாய் வந்து கொண்டிருக்கும் எல்லா வாசனைகளும் நசித்து முக்தி பெறும் மார்க்கத்தை உண்டாக்கும். யோகநிலையில் எண்ணம் கொண்ட ஒருவன் தினக் கணக்குகளினாலும், மாதக்கணக்குகளினாலும் யோக சித்தியை அடைய வேண்டுமானால் எண்ணம் கொண்டால் சித்தியாகும்.
தத்துவ ஞானமுடைய யோகி ஆத்மாவிற்கு எப்படிப்பட்ட செயல்களுக்கும் புத்தியை ஒடும்படிச் செய்யமாட்டான். சர்வ காலத்திலும் அதிக திருப்தி உடையவனாகவும்,
பரமாத்மாவிலேயே நிட்டை உடையவனாகவும் இருப்பான். அஞ்ஞானியாகிய மனிதர்கள் மாயையால் ஆட்பட்டுக் கேவல சொரூபத்தில் பிரகாசித்துப் பரப்பிரம்மமே ஓழிய “பிரம்ம வேதம்’ என்று சொல்லமாட்டான்.
தத்துவ ஞானம் உடைய யோகிகள் பரமாத்மாவையும், கிரக சேத்திராதிகளையும், திரவியங்களையும், புத்திரர்களையும் கிரகிக்கின்றார்கள். அன்னபானாங்கள் முறையில் வழிபடும் ஞானிகள் ஆதரிக்கும் உத்தமர்கள், ஞானிகளின் புண்ணியத்தைப் பெறுகின்றார்கள். அவர்களைத் தூடித்துப் (தூடனம் செய்து) அரிய செயல்களையும் செய்பவர்கள். அவர்களின் பாபகர்மங்களைப் பங்கிட்டுக் கொள்கின்றார்கள். பரம தத்துவ ஞான வசிட்டனுக்கு அநேகப் பிறவிகளாக வந்து கொண்டிருக்கும் குடும்பப் பந்தத்தில் ஈடுபடுவதனால் காம, குரோதத் தோசங்களும், மோக லோபாதித் தோசங்களும்
தினந்தினம் சந்திப்பது பழக்கத்திற்குட்பட்டதாகிறது.
மனம், கண்கள் முதலாகிய உறுப்புகள் ஒரு நிலையில் நிறுத்துவதே சிரேட்டமான தியானநிலை என்று முனிவர்கள் கூறுகின்றனர். இந்தத் தத்துவத்தில் மரணம் என்பதில்லை. மரணம் வரும்வரையில் வாசனை நம்மை விட்டுப் போகாது. வாசனை நம்மைவிட்டுப் போகும் வரை சித்தம் அணுகாது. சித்தம் அணுகும் வரையில் தத்துவ ஞானத்தை அடைய முடியாது.
தத்துவ ஞானம் உண்டாகும் வரையில் வாசனாசியம் என்னும் மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை என்ற மூன்று ஆசைகளும் நம்மை விட்டு நீங்காது.
தத்துவ ஞானம், மனோ நாசம், வாசனாட்சயம் என்னும் இம்மூன்றும் ஒன்றையொன்று காரணத் தன்மையை அடைந்து சாதிப்பதற்கு எதுவரை சாதிக்க முடியுமோ அதுவரையில்
தத்துவ ஞானமும் கைகூடும்.