உன்னை கண்டவுடன் காலையில் பூத்தது காதல் பூவா
கன்னியே என் கண்களில் தோன்றிய நோவா!
நிலவொளியில் தோன்றி மறைந்த கன்னியே
மறைந்த தாமரையோ தோன்றிய அல்லியோ நீ
அன்பால் என்னோடு உருவாகி
பண்பால் என் உள்ளத்தில் பயிராகி
பெண்பால் உன் மீது காதல்
கொள்ள செய்த கன்னியே
நீ வரும் போது பூங்காற்று என்னிடம்
நீ திரும்பும் போது கொடும் தீ காற்று என்னிடம்
காதல் என்னும் பெயரால் கனவுகள் கொடுத்தவளே
கண்கள் இரண்டால் பல காட்சிகள் காட்டியவளே!
நீ தேவதையோ மோகினியோ நான் அறியேன்
ஆனால் என் இதயம் என்னிடம் இல்லை
உன் இதயம் எனக்குறியதா என்றும்
தெரியவில்லை பதில் சொல்வாய் பசுங்கிளியே!
நான் உன்மீது கொண்ட காதலே ஒரு கேள்வியா?
எழுதியது ஜெய்கணேஷ் காலம் (1997)