நிலவே! நீ ஒரு பக்கம் !
நான் ஒரு பக்கம்!
ஆனால் என் ஞாபகம் எல்லாம்
உன் ஒளியின் பக்கம்!
காற்றே! நீ தோன்றுவது எங்கோ!
நான் தோன்றுவது எங்கோ!
ஆனால் என் மூச்சு எல்லாம்
நீ வீசும் திசையான இங்கே!
தண்ணீரே நீ உருவானதும் இப்பூமி!
நான் உருவானதும் இப்பூமி!
ஆனால் என் கவனம் எல்லாம்
நீ வரும் பாதையில் உள்ள
உற்சாக பசுமைகளின் பக்கம்!
பகலே! நீ கதிரவனால் பிறந்தாய்
நான் அன்னைதந்தையால் பிறந்தான்
ஆனால் என் விழிகள் எல்லாம்
நீ பிறக்கும் வழியைப் பார்க்கின்றன
இரவே! நீ நிலவால் அழகானாய்
நான் நிலவொளியால் அழகானேனன்
ஆனால் என் உடல்கள் எல்லாம்
உன் வருகையை எதிர்பார்கின்றேன
என்னவளே! எது எப்படியிருந்தாலும் உன்ந்தன்
ஞாபகம் என் மேல் இல்லாமிலிருந்தாலும்
உன்ந்தன் உயிரும் உடலும்
உடலோடு நிழலும் வேறுபக்கமாயிருந்தாலும்
என் வாழ்க்கையில் நான் கொள்ளும் வெற்றி
அதனால் நான் அடையும் நன்மைகள்
எல்லாம் போக நான் கொண்ட காதல் எல்லாம்
என்னவளே உன் பக்கம்!.
எழுதியது ஜெய்கணேஷ் காலம் (1997)