சர நூல்‌ சாத்திரம்‌ -1

மனிதனுடைய நாசியிலிருந்து வரும்‌ சுவாசம்‌ இடகலை, பிங்கலை, சுழுமுனை என மூன்று வகைப்படும்‌. இவற்றுள்‌, இடகலை என்பது சந்திரகலை. இது பெண்‌. இடது
பக்கநாசியிலிருந்து வருவதாகும்‌. பிங்கலை என்பது சூரியகலை. இது ஆண்‌. வலப்பக்கத்து நாசியிலிருந்து வருவதாகும்‌.

சுழிமுனை என்பது அலி. அக்கினி என்றும்‌ பெயர்பெறும்‌. இது சுவாசம்‌ ஒரு பக்கத்திலிருந்து அடி. மூலத்தில்‌ பறந்து மறு பக்கத்திற்கு வரும்போதே இப்பெயர்‌ பெறும்‌. எருதுக்கு மூக்கணாங்‌ கயிற்றிலிருந்து இயங்குவது போல சரமும்‌ மனிதனுடைய நாசியின்‌ வழியே நின்று நல்வழிவினை, தீ வழி வினைக்குத்‌ தக்கவாறு பிறந்து, இறந்து, இயங்குமாறு செய்யும்‌. இதைக்‌ குரு முகூர்த்தத்தில்‌ அறிந்து அறநெறியில்‌ நிற்பவரே பெரியோர்‌ ஆவார்‌. அதனை அறியாதவர்‌ ஊமையாவர்‌.

எப்போதும்‌ சூரியன்‌ உதிக்கும்‌ முன்‌ ஐந்து நாழிகை தொடங்கி நாசியிலிருந்து சுவாசம்‌ வந்து பன்னிரண்டு அங்குலம்‌ வெளியே செல்லும்‌. அதிலே நான்கு அங்குலம்‌ வெளியே நின்று விட, மிஞ்சிய எட்டு அங்குலம்‌ உள்ளே போய்விடும்‌. இப்படியே அறுபது நாழிகை அதாவது 24 மணி கொண்ட ஒருநாளில்‌ இருபத்தியோராயிரத்து அறுநூறு சுவாசம்‌ விடப்படும்‌. அதிலே ஏழாயிரத்து இருநூறு சுவாசம்‌ வெளியிலே செல்ல எஞ்சிய
பதினான்காயிரத்து நானூறு சுவாசமும்‌ உள்ளே சென்று விடும்‌. இந்தச்‌ சுவாசம்‌ ஒவ்வொரு நாசியிலும்‌ ஐந்து நாழிகைக்கு ஒரு முறை மாறிமாறி ஒடும்‌.

ஞாயிறு, செவ்வாய்‌, சனி என்னும்‌ நாட்களிலே உதயத்துக்கு ஐந்து நாழிகைக்கு முன்னே தொடங்கிய பிங்கலக்கலை சூரியகலை ஓட வேண்டும்‌. திங்கள்‌, புதன்‌, வெள்ளி என்னும்‌ நாட்களிலே இடகலை என்னும்‌ சந்திரகலை அப்படியே ஓடவேண்டும்‌. வியாழக் கிழமையிலே வளர்‌பிறைக்குச்‌ சந்திரகலையும்‌, தேய்பிறைக்குச்‌ சூரியகலையும்‌
தொடங்கி ஓடவேண்டும்‌. இம்முறை தவறியோடினால்‌ துயரமும்‌, மரணமும்‌ சம்பவிக்கும்‌.

காலை 4 மணி முதல்‌ 6 மணி வரையில்‌ மேற்கூறிய தினங்களில்‌ இடதுவலது நாசிகளில்‌ சுவாசத்தை நிறுத்தி அப்பியாசம்‌ செய்து வந்தால்‌ மோட்சம்‌, வீடுபேறு, செல்வம்‌.
குறைவில்லாமல்‌ கிடைக்கும்‌. சுவாசத்தைச்‌ சூரியநாடியில்‌ நிறுத்தி எல்லாக்‌ காரியங்களையும்‌ செய்யும்போது எல்லாமே கைகூடும்‌.

சுவாசம்‌ – இது வலது, இடது நாசிகளில்‌ ரேசக பூரகமாய்‌ நடந்து கொண்டிருக்கும்‌. இதற்குச்‌ சூரியநாடி, சந்திரநாடி என்றும்‌, சிவன்‌ சத்தி என்றும்‌, இடைப்பிங்கலை என்றும்‌ பெயர்‌.
வலது நாசியிலிருந்து வரும்‌ சுவாசம்‌ சூரியநாடி சிவன்‌. இடது நாடியிலிருந்து வரும்‌ சுவாசம்‌ சந்திரநாடி சத்தி இடநாடி என்றும்‌ சொல்லுவர்‌. சுழிமுனை நாடியென்றால்‌ மூலாதாரம்‌ முதல்‌ பிரம்ம கபாலம்‌ (மஸ்தகர்‌ வரையிலும்‌ திரிந்து கொண்டிருக்கும்‌
நாடியாகும்‌.

சுவாசத்தைச்‌ சூரியநாடியில்‌ வைத்துக் கொண்டு சென்றால்‌ சகல காரியங்களும்‌ சித்தியாகும்‌. யோகியானவர்கள்‌ சிறிதும்‌ இடைவிடாமல்‌ யோக மார்க்கத்தைச்‌ செய்து கொண்டு இரவும்‌ பகலும்‌ சுவாசத்தைச்‌ சூரிய நாடியிலேயே வைத்துக்‌ கொண்டிருப்பதால்‌
அவர்களுக்கு சில காலத்திலேயே யோகம் சித்திக்கின்றது.

சுவாசத்தைச்‌ சூரிய நாடியிலேயே வைத்துக்‌ கொண்டிருந்தால்‌ ஆயுள்‌ விருத்தியாகும்‌. இதற்குக்‌ காரணம்‌ யாதெனில்‌ வலது நாசியிலிருந்து வரும்‌ மூச்சுச்‌ சுவாசம்‌ எட்டு
அங்குலமும்‌, இடது நாசியிலிருந்து வரும்‌ மூச்சுச்‌ சுவாசம்‌ பன்னிரண்டு அங்குலமும்‌ வெளியில்‌ வரும்‌. வலது நாசியில்‌ எட்டு அங்குலம்‌ சுவாசம்‌ வெளியில்‌ வருவதால்‌ ஒவ்வொரு மூச்சிலும்‌ நான்கு அங்குலம்‌ சுவாசம்‌ கூடி வருகின்றது. அதனால்‌ ஆயுள்‌ விருத்தியாகிறது.

அதாவது, நிமிடத்திற்குப்‌ பதினைந்து மூச்சாக, பிரதிதினம்‌ இருபத்து நான்கு மணி நேரத்திற்குள்‌ மூக்குத்‌ துவாரங்களின்‌ வழியாக நடந்து நடந்து கழிந்து கொண்டே
வரும்‌. இருபத்தி ஓராயிரத்து அறுநூறு மூச்சுகளும்‌ இந்தச்‌ சரீரத்திலிருந்து ஒவ்வொன்றாக அறுபட்டு இறந்து கொண்டே வந்தால்‌ உண்மைப்‌ பொருளைக்‌ கண்டறிந்து கொள்ளலாம்‌. மறவாதபடி இமைச்‌ சிமிட்டும்‌ நேரங்கூட ஓயாமல்‌ ஆடி
மூலாதாரத்தின்‌ வழியாக நடக்கும்‌ சுவாசம்‌ என்னும்‌ வாசியை முதுகெலும்பின்‌ வெள்ளை நரம்பின்‌ சிறிய துவாரத்தின்‌ வழியாகப்‌ பிரம்ம கபாலமான உச்சிக்கேற்றி உயர்வாயிருந்து தானாக நடந்து கொண்டிருக்கும்‌ மெய்ப்பொருளை அறியமுடியும்‌.

ஆதலால்‌ சுவாசம்‌ என்னும்‌ நூல்‌ நமது சரீரத்திலிருந்து அறுபடும்‌ முன்பே நாமெல்லோரும்‌ கவனமாக இருந்து யோக சித்தி பெறவேண்டும்‌.





சிவகாமங்களின் பங்களிப்பு வாசியில் பயணித்து சரத்தை உருவாக்குகிறது – சரபயிற்ச்சி – 1

கீழே கொடுக்கப்படும் தகவல்கள் சரநூலிருந்து நான் படித்து மகிழ்ந்ததை பகிர்ந்துள்ளேன். தாங்கள் சரநூலை பெற்று நீங்களும் படித்து மகிழுங்கள். சரநூல் ஆன்லைன் புத்தகத்தை தேடினீர்கள் என்றால் கிடைக்கும். நன்றி சர நூல் எழுதி என்னைப் படிக்க வைத்து உணர வைத்த அனைத்து குருமார்களுக்கும் நன்றி! (பதிப்பாசிரியர்‌ : முனைவர்‌ ஜெ.ஜெயவாணிஸ்ரீ, வெளியிடுபவர்‌ : இயக்குநர்‌, சரசுவதி மகால்‌ நூலகம்‌)

சிவாகமங்களில்‌ விதித்துள்ள சரியை, கிரியை, யோகம்‌, ஞானம்‌ என்னும்‌ நான்கு பாதங்களை அடைவதற்கான மார்க்கமாக இந்நூல்கள்‌ வழங்கப்பட்டுள்ளன.

அதிலும்‌ யோகமே ஞானம்‌ அடைவதற்கான சிறந்த வழியாகும்‌. யோகமின்றி ஞானத்தை
அடையமுடியாது. இத்தகைய யோகசாதனையை அடைவதற்கு வாசி(மூச்சு)யை வயப்படுத்தவேண்டும்‌. பொதுவாக நாசியை, வாமகதியான இடைநாசி சந்திரன்‌ அதுவே யமுனாநதியாகவும்‌, தட்சிணகதிய2ன பிங்களநாடி சூரியன்‌ அதுவே கங்காநதியாகவும்‌,.
மத்திமகதியான சுழிமுனைநாடி அக்கினி அதுவே சரசுவதி நதியாகவும்‌ ஒப்பிடுவர்‌.

இந்த மூன்றும்‌ கூடிய சங்கமமே திரிவேணி சங்கமம்‌ என்றும்‌, திரிகூடம்‌ என்றும்‌ அழைப்பர்‌. உசுவாச, நிசுவாச, ரூபவாயுவும்‌ மனத்தோடு கூடி திரிகூட தேசத்திலே செறிந்து திடப்படுத்தி அதன்‌ மேல்‌ திரிகோண வழியாகின்ற சுழிமுனை நாடி
மார்க்கத்திலே பிரவேசிக்க வேண்டும்‌.

வாமகதி என்றால் வலமிருந்து இடமாக எழுதுவது என்று பொருள். அதாவது இடகலை நாசியை வாமகதி என்று அழைப்பார்கள். வாமகதி என்பது உற்பத்தியாவது வலப்பக்கம். அது வலமிருந்து இடமாக ஓடும். யமுனை நதி வடக்கு பக்கத்திலிருந்து உருவாகிறது.

ஒரு கதை வழங்குகிறது. சில காலங்களுக்கு முன்‌ பாண்டிய நாட்டில்‌ ஒரு வேளாளன்‌ தன்‌ சிறுவயதிலேயே தன்‌ தாய்தந்தையரால்‌ கல்விக்‌ கற்க அனுப்பப்பட்டான்‌. கல்வியில்‌ போதிய அறிவுத்திறன்‌ பெறாமல்‌ இருப்பதைக்‌ கண்ட அவனின்‌ தந்தையார்‌ ‘அட துட்டனே!

பள்ளிக்குப்‌ போவது பிள்ளைக்கு அழகு” என்பது அறிந்த உனக்கு ஆசிரியரின்‌ ஒரு மொழியேனும்‌ மனத்தில்‌ பதியவில்லையா ?” என மன சஞ்சலித்துக் கொண்டார். இவனும் மன உறுதியுடன் தந்தையின் இசைவிற்காகப்‌ பள்ளிக்குச்‌ சென்று குருவின்‌ துணையால்‌ அவர்‌ உபதேசிக்கும்‌ அனைத்தையும்‌ கைவிடாமல்‌ கற்று அதனைச்‌ சாதிக்க வேண்டுமென்று தனக்குள்‌ தீர்மானித்தான்‌.

அப்போது ஆசிரியர்‌ எப்போதும் போல்‌ பிள்ளைகளை வாசிக்கச்‌ செய்வார்‌. அத்தினம்‌ இப்பிள்ளையைப்‌ பார்த்துக்‌ கொண்டே கணேசா! என்று கூறி தன்‌ ஆசனத்தில்‌ அமர்ந்தார்‌.

அவ்வாக்கியத்தையே தனக்கு உபதேசமாகக்‌ கொண்டு இரவும்‌, பகலும்‌, நினைவிலும்‌, கனவிலும்‌, வைராக்கியமான மனத்தால்‌ தியானித்து வந்தான்‌. ஸ்ரீ விநாயகப்‌ பெருமான்‌ மனமிரங்கி சன்னியாசி வேடம்‌ தரித்து இப்பிள்ளையைத்‌ தன்னருகில்‌ அழைத்து,
“பிள்ளாய்‌! உனக்கு என்னவேண்டு”*மென்று வினவினார்‌.

அப்பிள்ளை நீ யார்‌? உமக்கு என்‌ மீது இவ்வளவு கருணை உண்டாவதற்குக்‌ காரணம்‌ யாதென வினவினான்‌. அதற்கு ஸ்ரீ விநாயகப்‌ பெருமான்‌ தன்‌ உருவம்‌ பூண்டு யான்‌ கணநாதன்‌. என்னையே உன்‌ திருவாக்கினால்‌ அருளினாய்‌ என்றார்‌. அப்படியானால்‌ எனக்கு, ‘அழியாக்கலை” வேண்டுமெனக்‌ கேட்ட கணநாதனும்‌ மிகுந்த அன்புகூர்ந்து, உமையை நோக்கி தியானித்துக்‌ கொண்டிருந்ததால்‌ உனக்கு அருளுவார்‌! எனஉரைத்து மறைந்தார்‌.

அதுமுதல்‌ அப்பிள்ளையார்‌ உமையம்மையை நோக்கி அரிய தவம்‌ புரிய, அப்பிள்ளைக்கு முன்தோன்றி, வேண்டுவதைக்‌ கேள்‌ என உரைத்தார்‌. தனக்கு ஞானக்கலையை அருளுமாறு கேட்க, அக்கணமே யான்‌ சொல்லும்‌ நூல்‌ முழுவதும்‌ கேட்பாயாயின்‌ நீ
விரும்பிய ஞானக்கலை கிடைக்கும்‌ என உபதேசித்து அருளினார்‌. அதனைத்‌ திருவுளம்‌ பற்றக்‌. கேட்டு நின்றார்‌. இவ்வடிப்படையில்‌ சரநூல் ஆக்கம்‌ பெற்றள்ளது என்ற வழக்குமுள்ளது என்பதை இந்தக் கதையின் (இந்தக் கதை ஒரு சுவடியில் இருந்ததாக கூறுவர்) குறிப்பினால்‌ அறியமுடிகிறது.

சர நூல்‌ சாத்திரத்துடன்‌ (சுவடி எண்‌ 1684)
அகத்தியர்‌ ஞான சரநூல்‌, (சுவடி எண்‌ 1879)
ஒளவையார்‌ திருவாய்‌ மலர்ந்தருளிய உயர்ஞான சரநூல்‌, பீர்முகம்மது அருளிய. “திரு மெய்ஞ்ஞான சரதநால்‌, இதனுடன்‌ சென்னையைச்‌ சேர்ந்த டாக்டர்‌ வீ. இராமலிங்க
தேவரவர்கள்‌ அருளிய ‘தினக்கிரமாலங்காரச்‌ சுருக்கம்‌”என்னும்‌ சாத்திரங்கள்‌ அதிகளவில்‌ பயன்படும்‌ என்பதால்‌ இந்நூலில்‌ அதனையும்‌ இணைத்துள்ளேன்‌.

அவனி என்றால் பூமி என்று பொருள். சரியை என்பது அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும்.

கிரியை என்பது மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். இந்நெறி சிவனுக்கு அருகில் இருக்கும் சற்புத்திர மார்க்கமாகும். இந்நெறி நின்றோர் சாமீபமுத்தியைப் பெறுவர்.

யோகக் கலை, அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி. யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது சீவாத்மாபரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.

சரியைத் தொண்டுகள் :
ஆலயங்களில் இறைவனை வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், பூசைத் திரவியம் கொடுத்தல், பூசைக்குரிய பொருட்களைத் துலக்கிச்சுத்தம் செய்தல், தீவர்த்தி, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், வாகனம் துடைத்தல், கழுவுதல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவை சரியைத் தொண்டுகளாகும்.

சரியையின் வகைகள்
சரியையில் ஞானம் – சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுவது.
சரியையிற் சரியை – சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.
சரியையிற் கிரியை – ஒருமூர்த்தியை வழிபடல்.
சரியையில் யோகம் – வழிபடும் கடவுளையும் சிவனையும் தியானித்தல்.

கிரியைத் தொண்டுகள்
கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். மந்திரங்களை ஓதுவது கிரியை என்று முரு பழ இரத்தினம் செட்டியார் குறிப்பிடுகிறார் [1]

திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல்(பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும்.

கிரியையின் வகைகள்

கிரியையிற் சரியை – பூசைப் பொருட்களைத் திரட்டல்.
கிரியையிற் கிரியை – புறத்தில் பூசித்தல்.
கிரியையில் யோகம் – அகத்தில் பூசித்தல்.
கிரியையில் ஞானம் – மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.

யோகத்தின் எட்டு அங்கங்கள் : அட்டாங்க யோகம்
1. சமாதி (பதஞ்சலி) (விட்டு விடுதலை ஆதல்) உணர்வுகளை தியானிக்கும் பொருளுடன் இணைத்துவிடுதல்
2. இயமம் ( 5′ பின்பற்றவேண்டியவை /எடுத்துக்கொள்ளத் தக்கவை) மிதவாதம், சாராதிருத்தல், பேராசை அற்ற தன்மை ,விவேக மற்ற தன்மை மற்றும் உரிமை கொண்டாடாதிருத்தல் .
3. நியமம் (5 கவனிக்கவேண்டியவை) புனிதம், போதுமென்ற மனம் / திருப்தி, கண்டிப்பு/ எளிமை, கற்றல் மற்றும் கடவுளிடம் சரணாகதி.
4. ஆசனம், இதன் பொருள் அமர்தல் அல்லது உடலின் நிலை.
5. பிராணாயாமம் (மூச்சை அடக்குதல்)ப்ராணா , மூச்சு, அயமா, அடக்குதல் அல்லது நிறுத்துதல்.மேலும் வாழ்க்கை ஓட்டத்தைக் கட்டுபடுத்துதல் எனவும் பொருள்படும்.
6. ப்ரத்யாஹரம்(தனியாக நீக்குதல்) புற உலக பொருள்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல்.
7. தாரானை( மன ஒருமைப்பாடு/மனதை ஒரு நிலைப் படுத்துதல்) ஒரே பொருளின் மீது கவனத்தை நிலைப் படுத்துதல்.
8. தியானம்(தியானம்) தியானதிற்கு எடுத்துக்கொண்ட பொருளின் உண்மைத்தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்.

யோகாவும் பகவத் கீதையும் :
கர்ம யோகம் : செயல்களின் யோகம்.
பக்தி யோகம்: அர்ப்பணித்தல் யோகம்
ஞான யோகம்: அறிவு யோகம்

கீதையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து , முதல் 6 பாகங்ககள் கர்ம யோகமாகவும், நடுவில் 6 பக்தி யோகமாகவும், மற்றும் கடைசி 6 ஞானமாகவும் வகைப்படுத்தியுள்ளார்.
ஆசனம் என்றால் உடலின் நிலை அல்லது தோரணை என்று பொருள். அஷ்டாங்க யோகாசனா செய்ய நான்கு வகையான நிலைகள் உள்ளன.

ஞானம் 
ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.

ஞானம் கைகூடுவதற்குச் சற்குருவின் அருள் இன்றியமையாதது. ஆன்மாவின் பரிபக்குவ நிலையிற் சிவனே மானுட வடிவிற் குருவாக வந்து தீட்சை கொடுத்து முத்தி அருளுவான். இவ்வாறு சற்குருவின் அருள் பெற்ற சாதகன், அக்குருவைச் சிவனாகவே காணுவான்; சற்குரு வழிபாடே சன்மார்க்கம் என்று திருமந்திரம் கூறுகிறது.

குருவைக் காணலும், பூசித்தலும், நினைத்தலும், தொட்டுக் கும்பிடுதலும், குருவின் புகழ் பாடுதலும், திருவடிகளைச் சிரத்திற் சூடுதலும் ஆகிய குருபக்தி செய்யும் நெறியே சன்மார்கம். இது உலகத்தவர்க்கு உலகச் சார்பினை ஒழித்து முத்திச் சார்பினைத் தந்து பேரின்பத்தை ஊட்டும் என்பது இப்பாடலின் பொருள்.

ஆன்மா சாந்ததன் வண்ணமாவது; பாசத்தோடு சார்ந்திருக்கும் நிலையிலே அசத்தைச் சார்ந்து அசத்தையே காணும். தன்னையும் அசத்தாகவே காணும். இந்தச் சரீரமே தான் என்று எண்ணும். இவ்வாறிருந்த ஆன்மா முத்தி நிலையிலே சத்தைச் சார்ந்து, சத்தையே காணும். அது இந்த உயிர்நிலையடைந்து, உடலோடு கூடியிருக்கும் நிலை ‘சீவன் முத்தி்’ எனப்படும். ‘சீவன்முத்தர்’ உடம்பு பிரியும் போது சிவத்துடன் இரண்டறக் கலந்து பேரின்பம் அனுபவிப்பர்.

ஞானத்தின் வகைகள்
ஞானத்தில் ஞானம் – ஞான நிட்டை கூடல்.
ஞானத்திற் சரியை – ஞானநூல்களைக் கேட்டல்.
ஞானத்திற் கிரியை – ஞானநூல்களைச் சிந்தித்தல்.
ஞானத்தில் யோகம் – ஞானநூல்களைத் தெளிதல்.

படிக்கட்டுகள் வாஸ்து சாஸ்திரம்: படிக்கட்டுகளின் திசை, அமைவு, மற்றும் படிகளின் எண்ணிக்கைக்கான விளக்கம்

உள்ளக அல்லது வெளிப்புற படிக்கட்டுகளுக்கு வாஸ்து சாஸ்திரத்தின் படி, செங்கோணமாக வளைந்திருக்கும் சதுர மற்றும் செவ்வக வடிவங்களில் அமைந்துள்ள படிக்கட்டுகள் சிறந்தவையாகும்..

படிக்கட்டுகள் வாஸ்து என்றால் என்ன?
பண்டைய இந்து கட்டிடக்கலை வாஸ்து சாஸ்திரம் படிக்கட்டுகளைக் கட்டுவதில் பல விதிகளைப் பரிந்துரைக்கிறது. கட்டுமானத்தின்போது படிக்கட்டு வாஸ்து சாஸ்திரத்தைப் பயன்படுத்துவது பொதுவாக எளிதான நடமாட்டத்திற்கும், குறிப்பாக வீட்டில் நேர்மறையான ஆற்றல் பாய்வதற்கும் வழிவகுக்கிறது. இது பெரிய அல்லது சிறிய அசம்பாவிதங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.

வாஸ்து விதிகளின்படி ஒரு படிக்கட்டு அமைப்பில் இருக்க வேண்டிய படிகளின் எண்ணிக்கை
படிக்கட்டு அமைப்பில் உள்ள படிகளின் எண்ணிக்கை எப்போதும் ஒற்றைப்படையாக இருக்க வேண்டும்: 15, 17, 19, அல்லது 21 போன்ற ஒற்றைப்படை எண்களையே தேர்ந்தெடுக்கவும். எண்ணிக்கை ஒருபோதும் ‘0’வில் முடிவடையக் கூடாது. ஏன் என்றால், ஒரு சராசரி மனிதர் படிக்கட்டுகளில் ஏறும்போது முதலில் தனது வலது காலைக் வைக்க முனைவார். படிக்கட்டுகளின் இறுதியில் அவர் தனது வலது காலைக் கீழே வைப்பதில் முடிவடைய வேண்டும். இது படிக்கட்டுகளில் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான படிகள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

வாஸ்துவில் படிக்கட்டு அமைப்பின் திசை
வாஸ்துவின் படி, படிக்கட்டுகள் அமைக்க தென்மேற்கு திசை சிறந்தது.

வீட்டின் உள்ளே அமைக்கப்படும் படிக்கட்டுகளுக்கான வாஸ்து
வீட்டின் உள்ளே அமைக்கப்படும் படிக்கட்டுகளுக்கு, தென்மேற்கு பகுதி சிறந்த தேர்வாக இருக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் நம்புகின்றனர். தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் அடுத்த சிறந்த தேர்வுகளாக இருக்கும். இந்த நிலையில், படிக்கட்டுகள் வடக்கிலிருந்து தெற்குநோக்கி அல்லது கிழக்கிலிருந்து மேற்குநோக்கி அமைக்கப்பட வேண்டும். உள்ளக படிக்கட்டுகள் இடத்தின் மையத்தில் இருக்கக் கூடாது.


வீட்டின் வெளிப்புறத்தில் அமைக்கப்படும் படிக்கட்டுகளுக்கான வாஸ்து
வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கும்போது, வாஸ்துவின்படி சிறந்த திசைகள் பின்வருமாறு:

வடமேற்கு, வடக்கு நோக்கி.

தென்கிழக்கு, கிழக்கு நோக்கி.

தென்மேற்கு, மேற்கு நோக்கி.

தென்மேற்கு, தெற்கு நோக்கி.

வெளிப்புறமாகவோ அல்லது உட்புறமாகவோ, வடக்கிழக்கு மூலையில் படிக்கட்டு அமைக்கக் கூடாது. மேலும், நுழைவாயிலுக்கு முன் அதன் அருகில் ஒட்டி அமைக்கப்படும் படிக்கட்டுகள் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.

படிக்கட்டுகள் வாஸ்துவை பாதிக்கக்கூடிய மற்ற காரணிகள்:

  1. படிக்கட்டுகளின் அளவு: படிக்கட்டுகள் மிக பெரிய அல்லது மிகச் சிறிய அளவினால் வாஸ்துவை பாதிக்கக்கூடும். அதற்குப் பதிலாக, நடுத்தர அளவினுடைய படிக்கட்டுகள் நல்லதாகக் கருதப்படுகின்றன.
  2. படிக்கட்டுகளின் வடிவம்: படிக்கட்டுகள் சதுர அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும். மற்ற வடிவங்களில் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் வாஸ்துவுக்கு எதிராக இருக்கக்கூடும்.
  3. படிக்கட்டுகளின் எண்ணிக்கை: படிக்கட்டுகளில் ஒற்றைப்படை எண்கள் (15, 17, 19, 21) மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். ஜோடிக் எண்கள் வாஸ்து சாஸ்திரத்தில் பரவலாக துறுக்கப்பட்டு வருகின்றன.
  4. வண்ணம் மற்றும் பொருள்: படிக்கட்டுகள் எந்த வகையான வண்ணம் அல்லது பொருளில் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் வாஸ்துவுக்கு முக்கியமாக இருக்கலாம். பழைய அல்லது மரபணு கலவைகள் வாஸ்துவிற்கு ஏற்றதாக கருதப்படுகின்றன.
  5. சூழலியல் காரணிகள்: படிக்கட்டுகள் அமைக்கப்படும் இடத்தில் சூழலியல் காரணிகள் (பருவநிலை, நிலப்பரப்பின் வகை) முக்கியமானவை. அதற்கேற்ப அமைக்கப்படாத படிக்கட்டுகள் சிரமங்களை உருவாக்கலாம்.
  6. திசை மற்றும் இடம்: படிக்கட்டுகள் அமைக்கப்படும் திசை மற்றும் இடம் வாஸ்துவின்படி சரியானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தவறான திசைகளில் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் தவிர்க்கப்படும்.
  7. சாதனங்கள் மற்றும் பொருட்கள்: படிக்கட்டுகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் மற்றும் பொருட்கள் வாஸ்துவுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

இந்த காரணிகள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தின் படி படிக்கட்டுகளின் செயல்திறனைப் பாதிக்கக்கூடும்.

படிக்கட்டுகள் வாஸ்து நெறிமுறைகளைச் செயல்படுத்தும் போது, கீழ்க்காணும் காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்:

வாஸ்துவிற்கு இணக்கமான படிக்கட்டுகளின் பார்வைத் தெளிவு: உங்கள் விருந்தினர்களின் நேரடி பார்வைக்கு புலப்படாத வகையில் உள்ளக படிக்கட்டுகள் அமைக்கப்பட வேண்டும். படிக்கட்டுகளின் தொடக்கத்திலும் முடிவிலும் கதவுகளை அமைப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது.

வாஸ்துவிற்கு இணக்கமான படிக்கட்டு அமைவிடம்: மேல் தளத்தை குத்தகைதாரருக்கு வாடகைக்கு விட்டுவிட்டு கீழ் தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள், பிரதான நுழைவாயிலுக்கு முன்பாகப் படிக்கட்டுகள் இல்லாமல் இருக்க வேண்டும். இதனால் நிதி இழப்பு ஏற்படும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

படிக்கட்டு தொடங்கும் இடம்: வீட்டிற்குள் உள்ள படிக்கட்டுகள் சமையலறை, ஸ்டோர் ரூம் அல்லது பூஜை அறையிலிருந்து தொடங்கவோ அல்லது முடிவடையவோ கூடாது. அடித்தளம் அல்லது நிலவறைக்குச் செல்லும் படிக்கட்டுகள் மேல்தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளுடன் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது.

படிக்கட்டு வாஸ்துவின் படி படிகளின் திசையமைவு

உங்கள் படிக்கட்டு அமைப்பில் உள்ள படிகள் செல்லும் திசை உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆகையால், படிக்கட்டுகளின் திசையமைவு மிக முக்கியமாக கருதப்படுகிறது மற்றும் படிக்கட்டு வாஸ்து விதிகளை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.

வாஸ்து விதிகளின்படி, படிக்கட்டுகள் மேலேறிக்கொள்ளும் போது அது எப்போதும் கடிகார இயக்கத் திசையில் செல்ல வேண்டும். வேறு வார்த்தைகளில், படிக்கட்டுகளைப் பயன்படுத்துபவர் வடக்கிலிருந்து தெற்கே அல்லது கிழக்கிலிருந்து மேற்கோச் செல்ல வேண்டும். கடிகார திசைக்கு எதிராக அமைக்கப்படும் படிக்கட்டுகள் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடியதாகக் கருதப்படுகின்றன.

வாஸ்துவின் படி படிக்கட்டு வடிவம்
வாஸ்து படி, உள்ளக அல்லது வெளிப்புற படிக்கட்டுகளுக்கு செங்கோணமாக வளைவுடன் கூடிய சதுர மற்றும் செவ்வக வடிவங்கள் மிகவும் சிறந்தது. மிகவும் செங்குத்தான அல்லது மிக உயரமான படிக்கட்டுகள், ஒவ்வொரு முறையும் அதைப் பயன்படுத்தும்போதும், ஒருவர் மிகவும் களைப்பாக உணரக்கூடும். இதற்காகவே, சுழல் படிக்கட்டுகளைத் தவிர்க்குமாறு நிபுணர்கள் வீட்டு உரிமையாளர்களை கேட்டுக்கொள்கிறார்கள்.

வாஸ்து படி படிக்கட்டுகளுக்கான வண்ணங்கள்
நாளின் எந்த நேரத்திலும் ஏறுவதும் இறங்குவதும் சுலபமாக இருக்க, உங்கள் படிக்கட்டுகள் நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். படிக்கட்டுகளுக்கான வண்ணம் அல்லது அலங்காரத்துக்காக இருண்ட அடர்த்தியான வண்ணச்சாயல்களை தேர்ந்தெடுப்பதால், அது இயற்கையாகவே ஒரு இருண்ட தோற்றத்தை ஏற்படுத்தும். அதற்காக, படிக்கட்டுகள் மற்றும் கைப்பிடிகளுக்குப் பளபளப்பாக இருக்கும் வெளிர் வண்ணச்சாயல்களைத் தேர்ந்தெடுக்கவும். அடர்த்தியான வண்ணங்களை, குறிப்பாக சிவப்பு மற்றும் கருப்பு, தவிர்க்கவும், ஏனெனில் இவை எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். படிக்கட்டுகளை ஒட்டிய சுவர்களை நீங்கள் விரும்பும் சுவர் படத்தாள்களுடன் அலங்கரிக்கலாம், ஆனால் அவை மிகவும் அடர்த்தியான இருண்ட வண்ணங்களில் இல்லாமல் இருக்க வேண்டும்.

படிக்கட்டுகளின் கீழேயுள்ள இடத்தைப் பயன்படுத்துதல்
சிறிய வீடுகளில் படிக்கட்டுக்குக் கீழே உள்ள இடத்தைச் சிறிய சமையலறை, குளியலறை அல்லது பூஜை அறை கட்டுவதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில், அந்தப் பகுதியை உகந்த வகையில் பயன்படுத்த ஒரு சிறிய வேலையிடம் உருவாக்கப்படுகிறது, இதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். படிக்கட்டுக்குக் கீழேயுள்ள இடத்தை சாதாரண வீட்டுப் பொருட்களைச் சேமிக்க மட்டும் பயன்படுத்த வேண்டும். பணம் அல்லது நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைக் கொண்ட அலமாரிகளை அந்த இடத்தில் வைக்கக்கூடாது. தேய்ந்து போன காலணிகள் அல்லது தேவையில்லாத பொருட்களை அங்கு வைக்க வேண்டாம்.

படிக்கட்டு அலங்காரத்திற்கான வாஸ்து விதிகள்
வாஸ்து விதிகளின்படி, படிக்கட்டுச் சுவர்களைக் குடும்ப புகைப்படங்களால் அலங்கரிக்கக் கூடாது, ஏனெனில் இது குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மலர்ந்த பூக்கள், செழிப்பான பசுமை நிற இயற்கை காட்சிகள், மலைகள் அல்லது அருவமான கலை வடிவங்கள் போன்றவற்றால் படிக்கட்டுச் சுவர்களை அலங்கரிக்கவும். படிக்கட்டுக்குக் கீழேயுள்ள பகுதியில் செடிகளுக்கான செராமிக் பானைகளை வைக்கவும். வாஸ்து படி, கண்ணாடியை படிக்கட்டுகளுக்கு முன்பாக அல்லது அதற்கு அடியில் தொங்கவிடுவது எதிர்மறை சக்தியை ஈர்க்கும். நீரூற்று அல்லது மீன்தொட்டியை படிக்கட்டுக்கு அடியில் வைக்க வேண்டாம். படிக்கட்டு பகுதி நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும்.

படிக்கட்டு கைப்பிடிக்கான வாஸ்து விதிகள்
படிகளைப் பயன்படுத்தும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், படிக்கட்டு கைப்பிடிகள் அல்லது கைப்பிடிகள் மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும். மேலே ஏறும் அல்லது கீழே இறங்கும் போது வசதியளிக்கும் வகையில் இருக்க வேண்டும். வாஸ்துவின் படி, தென்மேற்கு திசை படிக்கட்டுகளுக்குப் பளிங்கு அல்லது கற்களால் ஆன கைப்பிடிகளை தேர்ந்தெடுக்கவும். மேற்கில் உள்ள படிக்கட்டுகளுக்கு உலோக கைப்பிடிகளை, கிழக்கு மற்றும் தெற்கு திசை படிக்கட்டுகளுக்கு மரத்தால் ஆன கைப்பிடிகளைப் பயன்படுத்தவும்.

பார்வைக்கு அழகாகத் தோற்றமளித்தாலும், கைப்பிடிகள் இல்லாத படிக்கட்டு அமைப்புகள் மிகவும் ஆபத்தானவை.

படிக்கட்டுகளை ஒட்டிய இடத்தைப் பயன்படுத்துவதற்கான வாஸ்து விதிகள்
வாஸ்து வல்லுநர்கள், படிக்கட்டுகளை ஒட்டிய சுவரில் தெய்வங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். சிறந்த கலைப்படைப்புகளை காட்சிப்படுத்த படிக்கட்டுகளை ஒட்டிய சுவர் பகுதிகளைப் பயன்படுத்தலாம். வால்பேப்பர்களால் அலங்கரிக்க விரும்பினால், வெளிர் நிறங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. உங்கள் படிக்கட்டு பிரகாசமாகவும், நன்கு வெளிச்சத்துடனும் இருக்க வேண்டும். வெளிர் வண்ணச் சுவர் காகிதங்கள், எல்லா நேரங்களிலும் வெளிச்சமாக இருப்பதை உறுதி செய்யும்.

தீவிர படிக்கட்டுக் குறைபாடுகள்

  • வடகிழக்கு பகுதியில் படிக்கட்டு
  • சுழல் படிக்கட்டுகள்
  • கட்டிடத்தைச் சுற்றி வரும் படிக்கட்டுகள்
  • வட்ட மற்றும் சுற்றுப் படிக்கட்டுகள்
  • உடைந்த படிகள்
  • இருண்ட அடர்த்தியான வண்ணம் கொண்ட படிக்கட்டு
  • கட்டுக் குலைந்த அல்லது கிரீச் ஒலி எழுப்பும் படிக்கட்டு

படிக்கட்டு வாஸ்து தோஷம்

படிக்கட்டுகளில் வாஸ்து தோஷம் இருந்தால், அந்த வீட்டில் வசிக்கும் உறுப்பினர்கள் உடல், மன மற்றும் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடலாம். எடுத்துக்காட்டாக, வடகிழக்கு மூலையில் அல்லது ‘ஈஷன் கோனா’வில் அமைக்கப்படும் படிக்கட்டு மிகப்பெரிய வாஸ்து குறைபாடாகக் கருதப்படுகிறது. இந்த மூலையில் அமைக்கப்படும் படிக்கட்டுகளால், குடியிருப்பாளர்களுக்கு மூளை, சிறுநீரகம் அல்லது இதயம் தொடர்பான கடுமையான நோய்கள் ஏற்படலாம்.

படிக்கட்டு வடிவமைப்பு பற்றிய முக்கியமான உண்மைகள்

  • படிக்கட்டில் ஏற்றம்: ஒரு படிக்கட்டில், ஏற்றம் என்பது மிதிக்கும் இடத்தின் மேலிருந்து அடுத்த மிதிக்கும் இடத்திற்கு செல்லும் செங்குத்து தூரத்தை குறிக்கிறது. சர்வதேச குடியிருப்பு குறியீடு, அதிகபட்சமாக 7 ¾ அங்குல உயர்வை பரிந்துரைக்கிறது.
  • படிக்கட்டில் ரன்: ரன் என்பது ஒரு ஏறுபடியின் முகப்பிலிருந்து அடுத்த ஏறுபடியின் முகப்புக்கான கிடைமட்ட தூரம். இது மிதிக்கும் இடத்தின் (ரைசர்) அளவுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. சர்வதேச குடியிருப்பு குறியீடு குறைந்தபட்சம் 10 அங்குல ரனைப் பரிந்துரைக்கிறது.
  • படிக்கட்டுக்கான வாஸ்து படி பரிந்துரைக்கப்பட்ட ஏற்றம் மற்றும் ரன் உயரம்: பயனர்களின் அதிகபட்ச வசதியை உறுதிப்படுத்த, ஏற்றம் மற்றும் ரன் அளவு சரிசமமாக 18 அங்குலங்கள் இருக்க வேண்டும்.

படிக்கட்டு வாஸ்து: நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

  • ஒரு படிக்கட்டின் ஏற்றம் 4 அங்குலம் முதல் 75 அங்குலம்வரை இருக்க வேண்டும், அதே சமயம் படியின் பாதை அகலம் 10 முதல் 11.25 அங்குலம் வரை இருக்க வேண்டும்.
  • வீட்டிற்குள், படிக்கட்டுகளின் அகலம் மிக அதிகமாக இருக்கும்போது கைப்பிடிகள் இல்லாத படிக்கட்டுகளை அமைக்கலாம். ஆனால், வீட்டிற்குப் புறமாக கட்டப்படும் படிக்கட்டுகளுக்கு, ஐந்து படிகளுக்கு மேல் இருந்தால் கைப்பிடிகள் அமைப்பது கட்டாயமாகும்.
  • முற்றிலும் உடன்படாத நிலையில், தற்காலிக பயன்பாட்டுப் படிக்கட்டுகளை வைத்திருப்பது நல்ல யோசனையாக இருக்காது. அவை கவனத்தை சிதறடிக்கும் மற்றும் மிகவும் ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியவை.

வாஸ்து படி மோசமான படிக்கட்டு வடிவமைப்பு

படிக்கட்டுகள் ஒரு வீடுகளில் மேலும் கீழும் நடக்க உதவும் கருவியாகக் கருதப்பட்டு, அது பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. இன்று, படிக்கட்டுகள் நவீன வீடுகளின் சிறப்பான பாணியாக அமைந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக, சில நேரங்களில், உரிமையாளர்கள் பார்வையாளர்களைக் கவரும் நோக்கத்துடன் பெரும் திட்டமிடல்களுக்கிடையே விரிவான படிக்கட்டு வடிவமைப்புகளை உருவாக்கி, அதன் அடிப்படை பயன்பாட்டு விதிகளை புறக்கணிக்கிறார்கள். இது, சில சமயம், அதை ஒரு வேதனையான அல்லது சிக்கலான செயலாக்கமாக மாற்றி விடுகிறது. கீழே உள்ள படிக்கட்டு இதற்கான ஒரு எடுத்துக்காட்டு.

வாஸ்து விதிகள்: வீட்டில் படிக்கட்டுகள்

ஒரு மோசமான படிக்கட்டு வடிவமைப்பு வாஸ்து கொள்கைகளைப் பின்பற்றாதது வீட்டின் மற்ற பகுதிகளில் உருவாகும் நேர்மறை விளைவுகளைப் போக்கக்கூடும். வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு வீட்டின் மையத்தில் படிக்கட்டு அமைப்பது, கர்ப்ப காலத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

படிக்கட்டுகளின் மீதான வாஸ்து குறைபாட்டின் தாக்கம்

வாஸ்து கொள்கைகளை புறக்கணித்து உங்கள் வீட்டில் படிக்கட்டுகளை கட்டுவது நல்லதல்ல. இது, ஒட்டுமொத்த கட்டுமான திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடும், ஆனால் பெரும்பாலும் இதற்கு அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை.

ஒரு வீட்டிற்குள் வசிக்கும் மக்களின் நடமாட்டத்துடன் தொடர்புடைய எதுவும், ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் அன்றாட நடவடிக்கைகளை வெகுவாகப் பாதிக்கலாம். எனவே, படிக்கட்டுகள் குடும்பத்தின் செயல்திறனில் முக்கிய பங்கு வகிக்கின்றன. படிக்கட்டு தொடர்பான கட்டமைப்பு அல்லது பிற குறைபாடுகள் பெரிய அல்லது சிறிய விபத்துகளை உருவாக்கக் கூடும். வடிவமைப்புக் குறைபாடுகள் வீட்டில் வசிப்பவர்களின் நடமாட்டத்தை மிகவும் சிரமமுள்ளதாக்கி இடையூறாகவும் விளங்கலாம்.

“நீங்கள் வாஸ்துவின் மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டாலும், படிக்கட்டுகள் அமைப்பதை கவனமாகத் திட்டமிடாமல் இருந்தால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்,” என்று டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான ரஜத் காத்ரி குறிப்பிடுகிறார்.

மிக முக்கியமான பகுதிகளாக, வீட்டின் மற்ற பகுதிகளுடன் சேர்த்து, படிக்கட்டுகள் வாஸ்து விதிகளின் மீதும் உரிய கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் பாய்வது, படிக்கட்டும், வீட்டின் பல்வேறு பகுதிகளின் கூட்டியக்கத்தைப் பொறுத்தது.

நான் படித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன் – சிவ மந்திரங்கள் பஞ்சாட்சரம்

சிவ மந்திரங்கள் — பஞ்சாட்சரம்

பஞ்சாட்சரம் இருவகைப்படும். அவை தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம்.

‘ந’ காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் ‘நம சிவாய’ என்பது ‘தூல பஞ்சாட்சரம்.’

அதைப் போன்று ‘சி’காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் ‘சிவாய நம’ என்பது ‘சூட்சும பஞ்சாட்சரம்’ எனப்படும்.

தூல பஞ்சாட்சரம்மான ‘நம சிவாய’ என்பது பொதுவாக இகபர இன்பங்களை வேண்டி வழிபடுபவர்களுக்கு பொருத்தமானது. இது ‘சிவனுக்கு வணக்கம்’ எனப் பொருள்படும்.

சரியை நெறியில் நிற்போர் தூல பஞ்சாட்சரத்தையும், கிரியை யோக நெறியில் நிற்போர் சூட்சும பஞ்சாட்சரமான ‘சிவாய நம’ என்பதையும்,

ஞானநிலையில் நிற்போர் முத்தி பஞ்சாட்சரமான ‘ம’காரம் ‘ந’காரம் ஆகிய இரண்டும் நீக்கிய ‘சிவாய’ என்ற மூன்று அட்சரங்களைக் கொண்ட ‘முத்தி பஞ்சாட்சரம்’; உட்சரிப்பதற்கு உகந்தது.

அதாவது நிருவான திக்கை பெற்றவர்கள், பஞ்சாட்சரத்தை உச்சாடணம் செய்யும் போது மூன்று முறையாக பின்பற்றுவர் அவை மானதம், மந்தம், உரை என்பனவாகும்.

  1. இதில் வெளியில் ஒலி எழுப்பாது மனத்தினுள் தியானித்தலைக் குறிக்கும் இது உத்தம மாகும் இதனை ‘மானதம்’ என்பர்.
  2. தானது காதுகளுக்கு மட்டும் கேட்கக் கூடியதாக உச்சரித்தல் ‘மந்தம்’ எனப்படும்.
  3. பிறர் கேட்க்கக் கூடியதாக சத்தமாக உச்சரித்தல் ‘உரை’ எனப்படும்.

‘மானதம்’ கோடி மடங்கு பலனும், ‘மந்தம்’ பத்தாயிரம் மடங்கு பலனும். ‘உரை’ யில் நூறு மடங்கு பலனும் கிடைக்கும் என ஸ்மிருதிகள் கூறுகின்றன்.

திருவைந் தெழுத்தின் பொருமையை திருமந்திரம் குறிக்கையில்

‘அஞ்ந்தெழத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்ந்தெழத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்ந்தெழத் தாலிவ் வகலிடந் தாங்கினன்
அஞ்ந்தெழத் தாலே மெர்ந்துநின் றானே’குறிப்பிடுகின்றார்.

திருவைந்தெழுத்தின் ‘ம’காரத்தினால் உலக படைக்கப்பட்டது. ‘ய’காரத்தால் உடலும் உயிரும் இணைந்து விளங்குகின்றது. யோனியான உயிர் நகர அடையாளத்தால் விரிந்த உலகத்தை இயைந்து யாக்கிக் காக்கும் நடுநிலைமை விளங்கும் ‘சி’காரம் ‘வ’கார அடையாளங்களால் எல்லாமாய் அமர்ந்தமை விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அஞ்தெழுத்து உலகத்தை ஆக்க வல்லது என்பது புலணாகும். அஞ்செழுத்து பந்தத்திலிருந்து விடுலையளிக்கும் என்பதை

‘வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவர்ற்குச்
சார்ந்த வினைத்துயார் போகத் தலைவனும்’
போந்திடும் என்னும் புரிசடை யோனே‘

திருவருட் துணையால் திருவைந்தெழுத்தை முறையாக ஒதுவதனால் உலகியல் நுகர்வுடன் அதன் கண் தொடக்கின்றி வாழ்தலுமாகும். புறவிப் பெருந்துயர் நீங்கத் தம் முதல் முருவுமாய் வந்தருலுவான். புரிகடையோன் என்னும் போது புரி சடையோன் என்பது திருவாதிரை நாளை விரும்புபவன் என்றும் ஒன்றாய் வேறாய் உடனாய் விரும்பி உறையும் பண்பினேன். என்பது பொருள்.

திருவைந்தெழுத்தால் எல்லாவுலகமும் ஒழுங்காக நடைபெறுகின்றது. என்பதை

‘ஐந்தின் பெருமையே அகலிட மாவது
ஐந்தின் பெருமையே ஆலய மாவது
ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனு மாமே’

திருவைந் தெழுத்தின் சிறந்த திருக்குறிப்பே திருக்கோயிலாகும். அதில் ‘சி’காரம்; சிவலிங்கமாகும். ‘வ’காரம் அடுத்த மண்டபமாகிய மனோன்மணி நிலை. ஆனேற்று நிலை ‘ய’காரம். அம்பலவாணர் நிலை ‘ந’காரம். பலிபீடம் ‘ம’காரம் அவ்வாறு பெருமை பெற்றது திருவைந் தெழுத்து.

ஓர் எழுத்தான ஓ மிலிருந்து பஞ்ச பூதங்களானான் ஐந்தெழுத்தில் என்பதை திருமந்திரம்

‘வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரேழுத் தாயநில ந்தங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாயுயி ராமெழுத்து
ஓரெழுத் தீசனும் ஒண்சுட ராமே’

காற்றாகி ‘வ’ காரமாயும்
நீர் ‘ம’ காரமாயும்
நிலம் ‘ந’ காரமாயும்
தீ ‘சி’ காரமாயும்
விண் உயிரெழுந்து ‘ய’ காரமாயும் உள்ளவன் சிவன் ‘வமநசிய’ என்பதில் அடங்கும்.

திருவைந்தெழுத்தல் ‘ந’ காரமே உலகை உருவாக்கும் என்கின்றது திருமந்திரம்
‘நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே’

உலகம் அடங்கி அதன் ஆணைப்படி நடக்கும் ‘நமசிவாய’ என ஓதுவார்க்கு நன்நெறி செல்லும் வெல்வர்களாவர்.
‘அகாரம் உயிரே உகாரம் பரமெ
முகாரம் மலமாய் வருமுப் பதத்திற்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென் றறையலு மாமே’

உயிரெனக் குறிக்கும் உடல் மெய் இருபத்தி நான்கும் அகாரமாகும்.
புரமென குறித்து உணர்ந்து மெய் ஐந்தும் உகாரம் மாகும்.
முலமெனக் கூறிய உணர்வு மெய் ஏழும் மகாரமாகும்.

இம் முப்பத்தாறும் மெய்களுள் சிகாரம் கிவமாய் உயிருக்குயிராய் வகாரம் சிவனின் திருமேனியாய் யகாரம் திருவருளாகும். ஏனக் குறிப்பிட்டுள்ளார்.

‘நகார மகார சிகார நடுவாய்
வகாரம இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதற்கொண்டு டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்கத் தானே’

நமசிவாய என்பதில் சிகாரம் நடு இரண்டு வளி என்பது இடபால் வலபால் மூச்சு என உயிர் அடையாளமான யகாரத்தைக் குறிக்கின்றது.

ஓம் எனும் மந்திரத்துடன் சேர்த்து நமசிவாய மந்திரத்தை ஓம் நமசிவாய என ஓத சிவப்பரம் பொருள் நெஞ்சகத்தே கோயில் கொள்வான் என்கின்றது திருமந்திரம்.

சிவபெருமானின் மந்திரவுருவை கூறுகையில்
‘சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுமஞ்
சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே’

‘சிவய’ என்பதுடன் முதலாக ‘சிவ’ என்பதைச் சேர்த்து ‘சிவயசிவ’ என்பதே
சிவபெருமானின் மந்திரவுருவாகும்.

சிவ மந்திரமும் – பலன்களும் :
———————————————

நங்சிவயநம என்று உச்சரிக்க – திருமணம் நிறைவேறும்
அங்சிவயநம என்று உச்சரிக்க – தேகநோய் நீங்கும்
வங்சிவயநம என்று உச்சரிக்க – யோகசித்திகள் பெறலாம்.
அங்சிவயநம என்று உச்சரிக்க – ஆயுள் வளரும், விருத்தியாகம்.
ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க – எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலி நமசிவய என்று உச்சரிக்க – வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவய என்று உச்சரிக்க – விரும்பியது நிறைவேறும்
ஐயும் நமசிவய என்று உச்சரிக்க – புத்தி வித்தை மேம்படும்.
நம சிவய என்று உச்சரிக்க – பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவய என்று உச்சரிக்க – வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவய என்று உச்சரிக்க – நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க – கடன்கள் தீரும்.
நமசிவயவங் என்று உச்சரிக்க – பூமி கிடைக்கும்.
சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும்.
சிங்றீங் என்று உச்சரிக்க – வேதானந்த ஞானியாவார்
உங்றீம் சிவயநம என்று உச்சரிக்க – மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
அங்நங் சிவாய என்று உச்சரிக்க – தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க – சிவன் தரிசனம் காணலாம்.
ஓம் நமசிவாய என்று உச்சரிக்க – காலனை வெல்லலாம்.
லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க – தானிய விளைச்சல் மேம்படும்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க – வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க – வாழ்வு உயரும், வளம் பெருகும்.
ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க – அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க – சிரரோகம் நீங்கும்.
ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க – அக்னி குளிர்ச்சியைத் தரும்.

சிவ தீட்சை
——————-

அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளைப் பற்றி காண்போம். தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான். இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

“தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்
ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக்
காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும்
கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு
ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு
ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும்
மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத
முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே.”

“ஸ்ரீம் அம் ஓம்” என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.

“ஆம் ஓம் ஹரீம் ரீம்” என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர்.

“சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு
செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம்
பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும்
பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும்
துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு
துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று
முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி
மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே.”

“குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்” என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.

“ஸ்ரீங் அங் உங்” என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர்.

“பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு
பண்பாக யங் வங் றீங் றுந்தான்
துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி
தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும்
அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு
அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம்
குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும்
குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே.”

“யங் வங் றீங்” என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.

“சங் ரங் உம் ஆம்” என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

“தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்
சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம்
மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார்
வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள்
நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு
நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம்
ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து
அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே.”

“இங் ரங் அவ்வு” லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர்.

“மங் றீங் ரா ரா” என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.

சிவ மந்திரங்கள்
————————–
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும். துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும்.

ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும். ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.

சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும். மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.

இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.

சிங் சிங் சிவாய ஓம் எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.

ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.

லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.

சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:

மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-

அகத்திய மகரிஷி சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-

நந்தீசர் மகரிஷி ஜோதிடம்
—————————————–

சிங் நமசிவய என்று உச்சரிக்க – பயிர்களால் நன்மை.

துங் நமசிவாய என்று உச்சரிக்க – வித்துவான் ஆகலாம்.

ஓங் கங்சிவய என்று உச்சரிக்க – சக்தி அருள் உண்டாம்.

ஓம் சிங்சிவாய நம என்று உச்சரிக்க – நினைப்பது நடக்கும்.

ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க – தடைகள் நீக்கும்.

ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க – துன்பங்கள் விலகும்.
ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க – செல்வம் செழித்தோங்கும்.

ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க- கவலைகள் வற்றும்

கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க – வசிய சக்தி மிகும்

ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க – விஷங்கள் இறங்கும்.
அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க – சாதனை படைக்கலாம்.
ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க – சப்த கன்னியர் தரிசனம்.

ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க – முக்குணத்தையும் வெல்லலாம்.

ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க- அரிய பேறுகள் கிடைக்கும்.

ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க – ஆறு சாஸ்திரம் அறியலாம்.

வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க – தேவர்கள் தரிசனம் காணலாம்.

சங் சிவய நம என்று உச்சரிக்க – விஷ பாதிப்பு நீக்கும்.

ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க – முத்தொழிலும் சிறக்கும்.

ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரியபூமிகள் கொடுக்கும்.

சிங் நமசிவய என்று உச்சரிக்க – பயிர்களால் நன்மை.

வங் சிவய நம என்று உச்சரிக்க – மழை நனைக்காது.

சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க – மழை நிற்கும்.

கலியுங் சிவாய என்று உச்சரிக்க – வெள்ளம் பெருக்கெடுக்கும்.

ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க – பெரியகாரியங்களில் வெற்றி.

சங்யவ் சி மந என்று உச்சரிக்க – தண்ணீரில் நடக்கலாம்.

மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க – பிசாசு, பேய் சரணம் செய்யும்.

சிவன்மந்திர உச்சாடணங்கள்
———————————————-

மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.

அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள்.

எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.

இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்தமந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.

பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம்.

இனி மந்திரங்கள்….
—————————–

தத்புருஷ மந்திரம் … கருவூரார் இதன் மூல மந்திரம் ‘நமசிவாய’.
இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும்.

“நமசிவாயம் லங்க நமசிவாய” என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.

“அலங்கே நமசிவாய நமோ” என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.

“அங் சிவாய நம” என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.

“ஊங்கிறியும் நமசிவாய நமா” என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.

“ஓம் நமசிவாய” என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.


அகோர மந்திரம்
—————————

இதன் மூல மந்திரம் “நமசிவ”,
“சங் கங் சிவாயநமா” என உச்சரிக்கஜீவனில் சிவத்தைக் காணலாம்.
“மங் மங் மங்” என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
“வசாலல சால்ல சிவாய நமா” என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
“சரனையச் சிவாய நம” என உச்சரிக்கவானில் பறக்கலாமாம்.
“கேங் கேங் ஓம் நமசிவாயம்” என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
“ஓங் சருவ நம சிவாய” என உச்சரிக்க மழை உண்டாகும்

வாமதேவ மந்திரம்
——————————

“கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்” என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
“வங் வங் சிங் சிவாய நம”என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
“சதா சிவாய நம” என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
“ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம” என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.

சத்யோசாத மந்திரங்கள்
—————————————

“சிவாய ஓம்” என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
“ஓங் உங் சிவாய ஓம்” என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
“கிருட்டிணன் ஓம் சிவாய நம” என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்

ஈசான மந்திரங்கள்
——————————-

“சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ” என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.

“மங் நங் சிவ சிவாய ஓம்” என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.

“வங் யங் சிங் ஓம் சிவாய” என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.

“சிங் சிங் சிவாய ஓ” என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.

“மய நசிவ சுவாக” உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.

பு.தாமோதரன் — நிறுவனர்.

( பஞ்சபூதங்கள் பாதுகாப்பு இயக்கம் )

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

No photo description available.

சரகலை பயிற்சி – Sarakalai- சரவித்தை

சரகலை பயிற்சி – Sarakalai- சரவித்தை

————————————-

சித்தர் கலைகளில் உயர்நிலை கலைகளில் முதன்மையான கலையே சரகலை ஆகும். இக்கலையினை ஆதியில் எம்பெருமான் ஈசன் மகாசக்தியான அன்னை உமையவளுக்கு உபதேசித்த உன்னத கலையாகும்.

சித்தர் கலைகள் அனைத்தும் இறைவனாகிய சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டு பின் அடுத்தடுத்து குருகுல வழி உபதேசமாக சித்தர் பெருமக்களுக்கு உபதேசிக்கப் பட்டவைகள் ஆகும்.

சிவன் சக்திக்குச் சொல்ல சக்தி நந்திக்குச் சொல்ல நந்தி காளங்கிக்குச் சொல்ல காளங்கி மூலருக்குச் சொல்ல மூலர் அகத்தியருக்குச் சொல்ல என்ற சித்தர் பாடலின் படி ஆதி முதல் சித்தர் எம்பெருமான் ஈசனே ஆகும்.

சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே பட்சி தெரிந்தவனை பகை கொள்ளாதே –

சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் – இவை முன்னோர் வாக்காகும். சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன் பொருள்

சரகலையை இயக்கத் தெரிந்த வனிடம் சரசம் என்ற விளையாட்டுத் தனமாக நடந்து கொண்டால் சரம் கற்றவன் சீறி, சினந்து வாக்கு விட்டால் அது அப்படியே பலித்து விடும்.ஏனென்றால் பஞ்சபூத சக்திகள் அனைத்தும் சரகலையில் தேர்ச்சி பெற்றவனின் உடல், மனம் ,வாக்கு மூன்றிலும் ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும்.

ஆனால் தெய்வீகக் கலையான சரகலையினை முறைப்படி குருகுல முறையாக தீட்சை பெற்று இதன் இரகசியங்களை பயிற்சி செய்து சித்தி பெற்றவருக்கு மட்டுமே இது சாத்தியம். சித்தர் நூல்களை படித்து தானாகவே பயிற்சி செய்து சித்தி பெறுவது என்பது சாத்தியமாகாது. ஏனென்றால் சரகலை எனும் தெய்வீகக் கலையினை அனுபவ முறையாக சித்தி செய்யும் சூட்சும இரகசியங்கள் எந்த ஒரு சித்தர் நூல்களிலும் பகிரங்கமாக வெளியிடப்பட வில்லை. நவக்கிரகங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வல்லமையும்,

பஞ்சபூத சக்திகள் இக்கலைக்கு இணங்கி வேலை செய்வதாலும் சித்தர் பெருமக்கள் இதன் உண்மை இரகசியங்களை நூல்களில் பதிவு செய்ய வில்லை. மேலும் தனக்கு இணக்கமான சீடருக்கு மட்டும் குணம் ,தகுதி அறிந்து உபதேசமாக தீட்சை அளித்து வந்துள்ளனர்.

நாம் மேலோர் எனப் போற்றப்படும் மகான்கள்,யோகிகள், சித்தர்கள், முனிவர்கள்,ரிஷிகள்,அனைவரும் தெய்வீகக் கலையான சரகலையில் தேர்ச்சி பெற்றவர்களே. தான் இறைநிலையில் சித்தி பெற்று,தன்னை நாடி வரும் அன்பர்கள் குறையினை நீக்கி நல்வழி காட்டவும் சரகலையினை பிரயோகம் செய்துள்ளனர்.

சரகலையின் பிரயோக முறையால் மனம் சார்ந்த பிரச்சினைகள், உடற்பிணிகள்,தொழில் முன்னேற்றம்,தலைமைப் பண்பு,அனைத்து காரிய வெற்றி,தேர்வில் வெற்றி,வெளியூர் பயணங்களில் வெற்றி,நவகிரகங்களின் தீமையை அகற்றவும்,கோர்ட் வழக்குகள் வெற்றி,அனைத்து கலைகளில் தேர்ச்சி,ஜோதிடம், மாந்திரீகம், மருத்துவம், போன்ற துறைகளில் வெற்றி பெறவும்,கடன் நீங்கி பணம் வருவாய் பெறவும்,வாக்கு சித்தி பெறவும்,மேலும் தனக்கு வரும் நன்மை தீமைகளை அறிந்து தானே நிவர்த்தி செய்து கொள்ளவும்,தன்னை நாடி வரும் அன்பருக்கு உதவும் பொருட்டு அமையப்பெற்றது சரகலை சாஸ்திரம் ஆகும்.

மேலும் சரகலை கற்று தேர்ச்சி பெற்றால் இல்லறத்தில் பூரணத்துவ நிம்மதி,சந்தோசம்,மகிழ்ச்சி பெறுவதுடன் சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் என்பதற்கிணங்க ஆன்மீக இறைநிலை மெய்ஞான சித்தியும் அடையலாம்.

ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் இந்த சரவித்தையை தெரிந்துவைத்து கொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வள்ளமை கொண்டது.

நாள், கோள், நட்சத்திரம் இவை முதலான சோதிட நுட்பங்கள் எதுவுமே அறியாதவர்கள் தங்கள் மன நினைவினாலே ஐயங்களை தீர்த்துக் கொள்ள ஏதேனும் வழி உள்ளதா??

என்று உமாதேவி கேட்க!! அதற்கு சிவபெருமான் உபதேசித்த கலையே சரகலை அல்லது சரவித்தை.

கலைகளிலேயே முதன்மையானதும் சிறப்பானதும் இந்த சரகலைதான் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு. காலை எழுந்தது முதல் இரவு உறங்கப்போகும் வரை உங்களுக்கும், உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் என்ன நடக்கப் போகின்றது என்பதை இந்த சரகலையை கொண்டு 100% சரியாக கணித்துவிடலாம். உங்களிடம் ஒருவர் நல்லதுக்காக வருகிறாரா?? அவர் பேசுவது உண்மையா?? இந்த நாள் உங்களுக்கு எப்படி?? போகும் காரியம் வெற்றி பெருமா?? என அனைத்தையும் துள்ளியமாக கணித்துவிடலாம்.

சரம் என்றால் சுவாசம் என்று பொருள். பொதுவாக நமது சுவாசம் மூன்று விதமாக இயங்குகின்றது. அதாவது சுவாசம் இடது பக்கமாக ஓடினால் இடகலை அல்லது சந்திரகலை என்றும், வலது பக்கமாக ஓடினால் பின்கலை அல்லது சூரியகலை என்றும், இரண்டிலும் ஓடினால் சுழுமுனை என்று கூறுவர். இந்த சுழுமுனை சுவாசம் ஓடினால் எந்த வேலையும் செய்யாமல் தியானத்தில் மட்டும் அமர்ந்திருப்பதே நல்லது, மற்ற வேலைகள் செய்தால் நடக்காது. சுவாசம் வலது பக்கமாக ஓடினால் உடலால் செய்யும் கடினமான வேலைகளை செய்வது சிறந்தது. சுவாசம் இடது பக்கமாக ஓடினால் மனதால் செய்யும் வேலையே சிறந்தது. மேலும் சுவாசம் எந்த பக்கம் ஓடுகின்றதோ அதை பூரணம் என்றும், சுவாசம் ஓடாத பக்கம் சூனியம் என்றும் வகுத்துள்ளனர்.

உதாரணத்திற்கு உங்களுக்கு வலது பக்கம் சுவாசம் ஓடுகின்றது என்று வைத்து கொண்டால், வலது பக்கத்தை பூரணம் என்றும், சுவாசம் ஓடாத இடது பக்கத்தை சூனியம் என்று பொருள் கொள்ள வேண்டும்.

சரமாகிய சுவாசம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தில் தொடங்க வேண்டும் என்ற விதியுள்ளது. அது யாதெனில் திங்கள், புதன், வியாழன்(வளர்பிறை), வெள்ளி ஆகிய நாட்களில் சுவாசம் இடது பக்கத்திலிருந்த தொடங்க வேண்டும்.

அதே போல் செவ்வாய், வியாழன்(தேய்பிறை), சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுவாசம் வலது பக்கத்திலிருந்த தொடங்க வேண்டும். ஒரு வேலை அந்த நாளுக்குரிய சரம் ஓடாமல் வேறு சரம் ஓடினால் நோய், பொருள் இழப்பு, மனக்கஷ்டம் போன்றவை ஏற்படும்.

உதாரணதிற்கு திங்கள் அன்று சுவாசம் இடது பக்கம் தொடங்காமல் வலதில் தொடங்கினால் நோய் உண்டாகும். ஒருவருடைய சரம் சரியாக இயங்குகின்றது என்பதை எப்படி கண்டுணர்வது என்றால்,

காலையில் கண்விழித்த உடனே உங்களது சரம் (சுவாசம்) அந்நாளுக்குரிய சரத்தில் ஓடுகின்றதா?? என்று கவனியுங்கள். அப்படி ஓடினால் அந்நாள் உங்களுக்கு நன்மையான நாள். உதாரணதிற்கு திங்கள் அன்று கண்விழித்த உடனே உங்கள் சுவாசத்தை கவனித்தால் இடதுபக்கத்தில் ஓடி கொண்டிருக்க வேண்டும். அதற்கு பிறகு சுவாசம் எந்த பக்கம் வேண்டுமானாலும் மாறிக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் அப்படி ஓடாமல் திங்களன்று சூரியனுக்குரிய வலதுகலையில் தொடங்கினால் நோய் ஏற்படுவது 100% உறுதி. எழுந்த உடனே சுவாசத்தை கவனித்து சரத்தை மாற்ற கற்றுக்கொண்டால் நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

அக்காலத்தில் முனிவர்கள் கையில் தண்டம் என்ற ஒன்றை வைத்திருப்பார்கள். அது இந்த சுவாசத்தை மாற்ற உதவும் கருவியே தவிர வேறு ஒன்றுமில்லை. சுவாசத்தை எப்படி மாற்ற வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள்உண்டு. அவை

1. படுக்கையிலிருந்து எழும்போது எந்த காலை முதலில் தரையில் அழுத்தி ஊணுகின்றீர்களோ அந்த பக்கம் சுவாசம் மாறிக்கொள்ளும்.

2. படுக்கையிலிருந்து எழாமல் எந்த பக்கம் ஓடவேண்டுமோ அதற்கு எதிர் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டு சுவாத்தை கவனிக்க வேண்டும். உதாரணதிற்கு வலது பக்கம் சரம் ஓடவேண்டும் என்று வைத்துக் கொள்வோம்,

உடனே இடது பக்கமாக திரும்பி படுத்து, இடது கையை மடித்து தலைக்கு கீழே வைத்து, கால்களை நீட்டி வலது கையை வலது தொடை மீது வைத்துக்கொண்டு உங்கள் சுவாசத்தை கவனித்தால், தானாகவே சுவாசம் வலது கலைக்கு மாறிகொள்ளும்.

3. அல்லது நிமிர்ந்து உட்கார்ந்து இடது தொடை மீது வலது காலைப் போட்டு உட்கார்ந்தால் சுவாசம் வலதில் மாறியோடும். இதுவே கால்மேல் கால் போட்டு உட்காரும் முறை.

4.அல்லது உட்காரும்போது இடது கையை தரையில் அழுத்தி சற்று இடது பக்கம் சாய்ந்தவாறு உட்கார்ந்தால் சரம் வலதில் மாறியோடும்.

5. அல்லது இடது அக்குலில் ஒரு கணமான துண்டை மடித்து வைத்து கொண்டால், சுவாசம் வலதில் மாறிக்கொள்ளும். இவை அனைத்தும் சூரிய உதயத்திற்கு 20 நிமிடத்திற்கு முன்போ அல்லது உதயத்திற்கு பின் 20 நிமிடத்திற்கு உள்ளாகவோ செய்து கொண்டால் கூட போதுமானது. பிரம்ம முகுர்த்தத்தில் செய்தால் மிக்க பயன் உண்டு,

அதாவது சூரிய உதயத்திற்கு 1 1/2 (4.30 A.M)மணி நேரத்திற்கு முன் உள்ள காலம். சுவாசத்தை கவனித்தல் என்பது இயற்கையான தியான முறையாகும். எனவே இதில் தியானமும் அடக்கம். புத்தரின் விபாசான சுவாசத்தை என்னேரமும் கவனித்தலே ஆகும்.

இப்படி கவனிப்பதால் சரம் இடம்,வலம்,சுழுமுனை என மாறுவதை கவனிக்க முடிவும். மேலும் சுழுமுனை சுவாசம் ஓடும்போது கவனித்தலே தியானமுறைகளில் சிறந்தது,

இதற்கென்று வேறு எதுவும் தேவையில்லை. இப்படி கவனிக்கும் போது உங்களை சுற்றி என்ன நடக்கின்றது?? எது உண்மை?? என அனைத்தையும் துள்ளியமாக கண்டறிய முடிவும்.

அது எப்படி?? ஒருவர் உங்களிடம் பேசுகின்றார் என்றால், அவர் எந்த பக்கத்தில் வந்து நிற்கின்றார் என கவனிக்கவும். அதாவது உங்களின் வலது பக்கமாவா? அல்லது இடது பக்கமாவா? என்று கவனிக்கவும். அவர் உயரமான இடத்தில் நின்று பேசினாலோ அல்லது உங்களிடம் நேருக்கு நேர் நின்று பேசினாலோ அல்லது இடது பக்கத்தில் நின்று பேசினாலோ உங்களின் இடது நாசி சுவாசம் என கொள்ளவேண்டும். இதுவே உங்கள் வலது பக்கத்தில் நின்றாலோ அல்லது உங்களை விட தாழ்வான இடத்தில் நின்றாலோ அல்லது உங்களுக்கு பின்னாடி நின்றாலோ உங்களின் வலது நாசி சுவாசம் என கொள்ள வேண்டும்.

இப்படி வலது, இடது என்பதை வைத்தே அனைத்தையும் கணித்து விடலாம். முன்பே கண்டது போல பூரணம் என்பது சரம் ஓடும் பக்கம், அதுபோல் ஓடாத பக்கம் சூனியம். ஒருவர் சரம் ஓடும் பக்கம் நின்று எதாவது பேசினால் அல்லது கேட்டால் அது உண்மை மற்றும் நடக்கும் என்று பொருள், ஓடாத பக்கம் நின்றால் அது பொய் மற்றும் நடக்காது என்று பொருள். இது போன்று சகலத்தையும் துள்ளியமாக கணிக்கலாம்.

திசைகளில் சூரியனுக்குரிய திசை கிழக்கு மற்றும் வடக்கு ஆகும். அதுபோல் சந்திரனுக்குரிய திசை மேற்கு மற்றும் தெற்கு ஆகும். ஒருவருக்கு சரம் வலதில் ஓடும் காலத்தில் சூரியனுக்குரிய திசையில் பயணம் செய்தால் காரியம் நன்மையில் முடியும். அதுபோல் இடதில் ஓடினால் சந்திரனுக்குரிய திசையில் செல்வது நல்லது. சந்திரன் ஓடும்போது சூரியதிசையிலோ அல்லது சூரியன் ஓடும்போது சந்திரதிசையிலோ சென்றால் காரியம் சித்திக்காது.

சூரியசரம் நடக்கும்போது அதற்குரிய திசையில் செல்லாமல் மாறாக செல்லவேண்டும் என்றால் வலது காலை முன்வைத்து ஒற்றையடியாக மூன்றடி தூரம் நடந்துவிட்டுப் பயணத்தை தொடங்க வேண்டும்.இதேபோல் சந்திரசரத்திற்கு இடதுகாலை முன்வைத்து செல்ல வேண்டும். இரண்டுசரமும் ஒன்றாக நடந்தால் இரண்டு கால்களையும் ஒன்றாகக் கூட்டிவைத்து மூச்சடக்கி தத்தித்தத்தி மூன்று முறை சென்று பின் பயணம் செய்ய வேண்டும்.

அதேபோல் ஒரு நல்ல ஒழுக்கநெறியுள்ள உயர்ந்த மனிதரை சந்திக்கும் போது உங்களில் பூரண பக்கத்தில் அவர் உள்ளபடி நின்றுகொண்டால் மிக்க நன்மை தரும்.

அதேபோல் வழக்கு, தீயவர் போன்றோரை சந்திக்க நேர்ந்தால் உங்களின் சூனிய பக்கத்தில் அவர் உள்ளபடி செய்து கொண்டால் அவர் பலம் குன்றிவிடும்.

கோவிலுக்கு செல்லும்போதும் உங்கள் பூரணபக்கம் சுவாமியும், சுவாமியின் பூரணபக்கம் நிங்களும் இருந்தால் மிக்க பலன் உண்டு. அந்தந்த நாளுக்குரிய சரம் சுவாமிக்கு முழுவதுமாக ஓடுவதாக கணக்கில் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை- உலகையே ஆண்டுவந்த ராஜ வம்சத்தினர் இன்று இருந்த தடம் தெரியாமல் அழிந்து மண்ணான காரணம், இது போன்ற தெய்வ கலையை தவறாக தன் நலத்திற்காக பயன்படுத்தினதால் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

“சரம் பார்ப்பவனிடம் சரசம் கொள்ளாதே” என்பது முன்னோர் வாக்கு. ஏன்னென்றால் ” சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பவன் ஆவான்”. எனவே நல்லவழியில் இதை பயன்படுத்தினால் தெய்வத்திற்கு நிகராக கொண்டு செல்லும் என்பது உறுதி.

“சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பவன்”. குருவின் மீதும் திருவின் மீதும் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள். மற்றவை தானாகவே வந்து சேரும்.இயற்கையும் இறைவனும் கண்டிப்பாக ஒருவனுக்கு நன்மையை மட்டுமே செய்வார்கள்.

வருடத்தில் எல்லா நாட்களும் எல்லா நேரங்களிலும் சரம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இருந்தாலும், சரம் தானாகவே சரியாக நடக்க ஒரு வழி உண்டு. அதாவது சரம் பார்ப்பதில் நாள் சரம், நட்சத்திர சரம், திதி சரம், பஞ்சபூத சரம் மற்றும் அயன சரம் என்ற முறைகள் உண்டு. இதில் அயன சரத்தை தவிர மற்ற எல்லா சரங்களும் அடிக்கடி பார்த்து சரிசெய்வது. ஆனால் அயன சரம் மட்டும் வருடத்தில் இரண்டே நாட்கள் மட்டுமே பார்க்க முடியும். மேலும் இந்த இரண்டு நாட்களில் சரத்தை சரியாக நடக்கவிட்டால் போதும், வருடத்தில் எல்லா நாட்களிலும் சரம் சரியாக நடக்கும்.

ஆடி மாதம் முதல் தேதி முதல் சூரியன் தெற்கு நோக்கி நகரும் தட்சிணாயண காலம் என்றும், வடக்கு நோக்கி நகரும் காலம் தை மாதம் முதல் தேதி முதல் உத்தராயண காலம் என்றும் சொல்வர். அயனம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் பகலில் ஒருபொழுது மட்டுமே உணவு உண்டு பரிசுத்தமாக இருந்து மறுநாள் உத்தராயண மாகிய தைமாதம் முதல் தேதி பொழுது விடிவதற்கு முன் ஐந்து நாழிகை இருக்கும்பொழுது சரம் பார்க்க வேண்டும்.

அப்படி பார்க்கும் பொழுது எந்த நாளாக இருந்தாலும் கவனிக்க தேவையில்லை. சரம் இடதுபக்கமாக ஐந்து நாழிகை நேரம் சிதறாமல் ஓட வேண்டும். தட்சிணாயணம் ஆடி மாதம் முதல் தேதியானால் சரம் வலது பக்கத்தில் ஐந்து நாழிகை நேரம் சிதறாமல் ஓட வேண்டும். அவ்வாறு சரம் ஓடினால் வருடத்தில் எல்லா நாட்களும் நலமாக அமையும்.

இந்த சரவித்தையை படிப்பதோடு மட்டும் விட்டுவிடாமல் உங்கள் வாழ்க்கையில் இதை ஒரு அங்கமாக கொண்டால் அனைத்தும் நன்மையாகவே நடக்கும் என்பது உறுதி. அனைத்தையும் நன்கு புரியும் வரை ஒருமுறைக்கு பல முறை படித்து பலன் பெற வேண்டும் என்பது பணிவான வேண்டுகோள்.

சரம் பார்த்தலை அதிகாலை 4 முதல் 6 மணி வரை பார்த்து, தவறாக நடந்தால் சரிசெய்து கொள்ள வேண்டும். துள்ளியமாக கூறவேண்டும் என்றால் சூரிய உதயத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் பார்க்க வேண்டும். இதை பிரம்மமுகுர்த்த நேரம் என்றும் வள்ளலார் இதை அமுதகாற்று இறங்கும் நேரம் என்றும் கூறுவார்.

வள்ளலாரின் உபதேசத்தில் (அதிகாலை எழுந்திருந்து இறைவனை வணங்குதல்) என்பதன் காரணம் இதுதானாகும். இப்படி எழுபவர்களுக்கு அந்த நாள் முழுவதும் கிடைக்க வேண்டிய பயன் அந்த இரண்டு மணி நேரத்திலேயே கிடைத்துவிடும் என்பார்.

சொல்ல கணக்கில்லாத பல நன்மைகளை இந்த இரண்டு மணி நேரம் தன்னுல் அடக்கியுள்ளது.

வள்ளலார் உபதேசங்களை நன்கு அறிந்தவர் இந்நேரத்தை சிறப்பாக பயன்படுத்திகொள்வர். முடியாதவர்கள் இதற்காக கஷ்டபட தேவையில்லை, 4.30 மணிக்கு விழிப்பு வந்ததும் சரத்தை கவனித்து அதற்கு ஏற்றது போல் திரும்பி படுத்துக் கொண்டு உங்கள் சுவாசத்தை கவனித்தலோ, இறை பிராத்தனை செய்தலோ, அங், மோ, ஓம் போன்ற எதோ ஒரு மந்திரத்தை மனதால் தொடர்ந்து உட்சரிப்பதோ,

கண்களை மூடி உள்ளே தெரியும் இருளை கவனிப்பதோ போன்ற எதாவது ஒன்றே போதுமானது, படுக்கையிலிருந்து எழவேண்டிய அவசியமில்லை.

புறதூய்மையை விட அகதூய்மையே சிறந்தது. இந்நேரம் நீங்கள் செய்யும் செயலுக்கு பலன் ஆயிரம் மடங்கு அதிகமாக கிடைக்கும் என்பது உறுதி. முயற்சி செய்து பாருங்கள் தியானத்திற்கு என்று தனி நேரம் ஒதுக்க தேவை இருக்காது. உங்கள் உள்ளினும் உங்களை சுற்றியும் நல்ல மாற்றத்தை உணர ஆரம்பிப்பீர்கள்.

இருப்பினும் திங்கள் காலையில் எழுந்தவுடன் சரம் பார்க்க மறந்துவிட்டிர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நாளில் முதல்முதலாக நீங்கள் கவனிக்கும் சுவாசத்தையே கணக்கில் கொள்ள வேண்டும்.

அது பகலாகட்டும், மதியமாகட்டும், மாலையாகட்டும் நீங்கள் கவனிக்கும் முதல் சுவாசம் இடதில் ஓடும். அதன்பின் ஐந்து நிமிடத்திலோ அல்லது அதற்குமேல் பார்த்தால் சரம் மாறிக்கொள்ளும் அதில் தவறில்லை.

அப்படி இல்லாமல் நீங்கள் கவனிக்கும் முதல் சரம் வலது பக்கத்தில் நடந்தால், சரத்தை இடது பக்கத்தில் மாற்றி கொண்டாலே போதுமானது. சிலருக்கு காலை எழுந்தவுடன் சரம் சரியாக நடக்கும் பின் சிறிது நேரம் கழித்து சரம் மாறி நடக்கும். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. நீங்கள் கவனிக்கும் முதல் முதல் சரத்தையே கணக்கில் கொண்டு சரி செய்ய வேண்டும். அதற்கடுத்து நடக்கும் சரங்கள் மாறி நடந்தால் தவறில்லை.

நாம் சில முக்கிய காரியங்கள் செய்யும்முன், அச்செயலுக்கு ஏற்ற சர ஓட்டத்தை மாற்றிவிட்டு செய்தால் அது நிச்சயம் பலிக்கும். அல்லது சர ஓட்டத்திற்கு தக்கபடி செயல்களில் ஈடுபட்டால் செய்யும் காரியம் தோல்வியை தழுவாது, வெற்றியை கொடுக்கும்.

நமக்கு வலப்புறம் (பிங்கலை) மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட வேண்டிய காரியங்கள்:-

1. உணவு உட்கொள்வதற்கு.

2. குளிப்பதற்கு.

3. மலம் கழிப்பதற்கு.

4. முக்கியமானவரைக் காணுவதற்கு.

5. விஞ்ஞான, கணித ஆய்வு செய்வதற்கு.

6. கடினமான தொழில் செய்வதற்கு.

7. பணம் கோரி பெறுவதற்கு.

8. தன் பொருளை விற்பணை செய்வதற்கு.

9. நோய் தீருவதற்கு, மருந்து உட்கொள்வதற்கு.

10. போதனை செய்வதற்கு.

11. தீராத வழக்கு தீருவதற்கு.

12. உறங்குவதற்கு.

மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம் சூரியகலையில் இருக்கும்போது செய்ய, அவை சுபமாக முடியும். சூரியகலை ஆண்தன்மையுடையது.

நமக்கு இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட வேண்டிய காரியங்கள்:-

1. தாகம் தீர்க்க நீர் அருந்துதல்.

2. பொருள் வாங்குதல்.

3. ஜலம் (சிறுநீர்) கழிப்பதற்கு.

4. சொத்துகள் வாங்குவதற்கும், பதிவு செய்வதற்கும்.

5. வீடுகட்ட, கடகால் தோண்டுவதற்கு.

6. புதுமனை புகுதல்.

7. சிகை அலங்கரிக்க.

8. ஆடை, ஆபரணம் வாங்குவதற்கு.

9. விவசாய நாற்று நடுவதற்கு.

10. தாலுக்கு பொன் வாங்குவதற்கு.

11. தாலி கட்டுவதற்கு.

12. கிணறு வெட்டுவதற்கு.

13. புதிய படிப்பு படிக்க.

14. அரசியல் அமைச்சர்களை பார்க்க.

மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம் சந்திரகலையில் இருக்கும்போது செய்ய, அவை சுபமாக முடியும், என்று ஞான சர நூல் கூறுகிறது.

சந்திர கலை பெண் தன்மையுடையது. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் நாளை இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று கூறுகின்றார் என வைத்துக் கொள்வோம்.

தொலைக்காட்சி உங்களுக்கு இடது பக்கத்தில் உள்ளது என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு அந்நேரம் இடது பக்கத்தில் சரம் நடந்தால் முதலில் சொன்ன இந்தியாவுக்கு வெற்றி எனவும், சரம் வலது பக்கம் நடந்தால் இரண்டாவதாக சொன்ன ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி என பொருள்.

இதேபோல் உங்கள் மனைவி உங்களது வலது பக்கத்தில் நின்று கொண்டு தனக்கு வரவேண்டிய 1000 பணத்தை தன் தோழியிடம் வாங்கி வருகிறேன் என கூறும்போது உங்களுக்கு வலது பக்கம் சரம் ஓடினால் கிடைக்கும் என்றும், இடது பக்கம் ஓடினால் கிடைக்காது என்று பொருள்.

அதுபோல் கூட்டத்தில் இருக்கும் போது ஒருவர் பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் கேட்க நேர்ந்தால் அதிலும் உங்களுக்கு அவர் பக்கம் மூச்சு ஓடவில்லை என்றால் அவர் பேசுவது பொய் என பொருள்.

இவ்வாறு வழக்கு, அரசியல் என அனைத்தையும் நீங்கள் உங்களது மூச்சை கவனித்து சரியான படி நடந்தும், துஷ்டரை கண்டால் தூர விலகியும், முடிந்தவரை நன்னெறி கூறி திருத்தியும், உண்மைக்கு புறம்பாகவும் சுயநலமாகவும் நடக்காதபடி நல்வழி செல்லவும் நல்வழி காட்டியாக இந்த சரசாஸ்திரமே அமையும்.

மேலும் உங்களிடம் ஒருவர் தனது நோய் குணமாகுமா?? என கேட்டால், கேட்பவர் பக்கம் உங்கள் சரம் ஓடினால் குணமாகிவிடும் என்று பொருள். அதேபோல் உங்களுக்கு அவர் பக்கம் மூச்சோடி அவருக்கும் உங்கள் பக்கம் மூச்சோடினால் அந்நோயானது அவர் வீட்டிற்கு செல்லும் முன்பே குணமாகிவிடும்.

மேலும் இருவருக்கும் எதிர்எதிர் திசையில் மூச்சோடினால் அந்நோய் தற்போது குணமாக வாய்ப்பில்லை என்று பொருள். எதிரே உள்ளவரின் சரத்தை நாம் எப்படி கண்டுபிடிப்பது என்றால்??

அவர் உட்கார்ந்திருந்தாலோ அல்லது நின்றாலோ, அவர் உடம்பின் எப்பக்கம் அழுத்தம் கொடுத்திருக்கின்றது என கண்டு அதற்கு எதிர்திசையில் சரம் ஓடுவதாக எடுத்து கொள்ள வேண்டும். மேலும் வந்தவர் பெரும்பாலும் சரசாஸ்திரத்தை பற்றி அறிய வாய்ப்பில்லை, எனவே அக்கிழமையின்படி அவருக்கு எத்திசையில் ஓடுகின்றது என்பதை எடுத்து கொள்ளலாம்.

அவர் உங்கள் வீட்டின் உள்ளே வரும்போது எந்த காலை முதலில் வைத்து வருகின்றார் என கவனித்து அதற்கு எதிர் திசையில் ஓடுவதாக கணிக்கலாம். வருபவர் வலதுகாலை முதலடியாக வைத்தால் அவருக்கு இடதுகலை நடக்கின்றது எனவும், இடதுகாலை முதலடியாக வைத்தால் வலதுகலை நடக்கின்றது என கொள்ள வேண்டும்.

மேலும் அவர் பேசிய முதல் வார்த்தையை நன்கு கவனித்து அவ்வார்த்தையில் உள்ள எழுத்துக்களை எண்ணி, அது ஒற்றை படையாக அமைந்தால் அவர் இடதுபக்கம் அழுத்தம் கொடுக்கின்றார் என அர்த்தம், எனவே அவருக்கு சூரியகலை ஓடுகின்றது என கணிக்க வேண்டும். இதேபோல் பேசிய வார்த்தைகளின் எண்ணிக்கை இரட்டைபடை எனில் வலதுபக்க அழுத்தம் எனக்கொண்டு அவருக்கு இடதுகலை நடக்கின்றது என கொள்ளவேண்டும். மேலும் அவர் உங்களுக்கு முன்பக்கமாகவோ, இடதுபக்கமாகவோ அல்லது உயரமான இடத்திலிருந்தோ கேட்கின்றாரெனில் அவருக்கு இடது கலை ஓடுவதாக கொள்ள வேண்டும். அதேபோல் வந்தவர் உங்களுக்கு பின்பக்கமாகவோ, வலதுபக்கமாகவோ அல்லது உங்களைவிட தாழ்வான இடத்தில் இருந்து கேட்டால் அவருக்கு வலதுகலை நடப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை சரியாக புரிந்து கொண்டு பறவை, மிருகம்,. என அனைத்தும் அருகிலிருந்தாலும் சரி தூரத்திலிருந்தாலும் சரி அவருக்கு ஓடும் மூச்சானது உங்களுக்கு தெரிந்துவிடும்.

சுவாசத்தை அடக்கி ஆளும் சூட்சுமம்

சுவாசத்தை அடக்கி ஆளும் சூட்சுமம் என்ன தெரியுமா…?

நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள உண்மை புரியும். 

ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.) சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும். இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும். எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர். 

நாசியின் வழியாக சுவாசிக்கும் நேரம்: 

காலை 6-8 மணி வரை வலது நாசி

காலை 8-10 மணி வரை இடது நாசி

காலை 10-12 மணி வரை வலது நாசி

மதியம் 12-2 மணி வரை இடது நாசி

மதியம் 2-4 மணி வரை வலது நாசி

மாலை 4-6 மணி வரை இடது நாசி

மாலை 6-8 மணி வரை வலது நாசி

இரவு 8-10 மணி வரை இடது நாசி

இரவு 10-12 மணி வரை வலது நாசி

இரவு 12-2 மணி வரை இடது நாசி

இரவு 2-4 மணி வரை வலது நாசி

அதிகாலை 4-6 மணி வரை இடது நாசி 

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன. 

வலது நாசிக் காற்று (சூரிய கலை) 

* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே. வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும். 

* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும். உடலின் வலிமை அதிகரிக்கும். மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும். 

* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும். 

இடது நாசிக் காற்று (சந்திர கலை) 

* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது. சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும். 

* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும். 

* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும். மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும். 

இந்த இரண்டு வகையான மூச்சுகளையும் (குதிரைகளையும்) அடக்கி ஆளக் கற்றுக் கொண்டால், மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

சர சாஸ்திரம்

#சர_சாஸ்திரம்#சாஸ்திரம்

மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. இதற்கு “சந்திரகலை” என்றொரு பெயரும் உண்டு. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது. இதற்கு சூரிய கலை என்றொரு பெயரும் உண்டு.

இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்.

இதையே சர ஓட்டம் என்பர். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மூக்கின் நடுத் தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில் மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம்.

இந்த சுவாச நடை தொடர் இடைவெளிகளில் மாறும் தன்மை உடையது என சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். அதாவது ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் சூரியகலை அல்லது பிங்கலை அல்லது வலது நாசியில் சுவாசம் நடைபெற வேண்டுமாம். அதைப் போலவே திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் சந்திரகலை அல்லது இடகலை அல்லது இடது நாசியில் சுவாசம் நடை வேண்டுமாம்.

வளர் பிறையில் வரும் வியாழக் கிழமைகளில் இடகலையும், தேய் பிறையில் வரும் வியாழக் கிழமைகளில் பிங்கலை சுவாசமும் நடக்க வேண்டும் என்கின்றனர். இதன்படி சுவாசம் நடைபெற்று வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்குமாம். இதில் ஏதேனும் மாறுதல் வரும் போது உடல்நலம் கெடுகிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.

திங்கள், புதன், வெள்ளிக் கிழமையில் ஓடவேண்டிய இடகலை சுவாசத்திற்கு பதிலாக பிங் கலை சுவாசம் ஓடினால் முறையே ஜலதோஷம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகுமாம்.

ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் ஓட வேண்டிய பிங்கலை சுவாசத்திற்கு பதில் இடகலை சுவாசம் ஓடினால் முறையே இருமல், காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு உண்டாகுமாம்.

இதன் அடிப்படையில்தான் வைத்தியர்கள் மருந்தினை தீர்மானிக்கும் முறை கூட இருந்தது. மருத்துவம் என்றில்லாமல் வாழ்வின் பிற செயல்களும் இந்த சர ஓட்டத்தினை வைத்தே தீர்மானிக்கப் பட்டது. இதனையே சரம் பார்த்தல் என கூறுவர். சரம் பார்த்தல் என்பது முற்காலத்தில் ஒரு வாழ்வியல் கூறாகவே இருந்திருக்கிறது. காலவோட்டத்தில் நாம் மறந்தே விட்டோம் என்பது வருத்தமான ஒன்று.

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.

ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும் ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும் ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே. இந்த அண்ட பிண்டமென அனைத்தும் உருவாக நமசிவய என்ற ஐந்தெழுத்தாகிய பஞ்சபூதங்களே காரணமாகும். இந்த ஐந்தின் பெருமையை பற்றி திருமூலர், சிவவாக்கியர்,

காகபுஜண்டர், வள்ளலார்.,., என அனைவருமே எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்த வண்ணம் என்பது அவரவர்கள் சுவாசத்தை கொண்டுதானாகும். அண்டத்தில் உள்ளதெள்ளாம் பிண்டத்தில் என்றும், அண்டமாகிய இப்பிரபஞ்சத்தை விட
பிண்டமாகிய இவ்வுடலே விசாலமானது என்றனர் நம் முன்னோர்கள். இப்படிப்பட்ட
உடலை ஆராய்ச்சி கூடமாகவும் சுவாசத்தை கருவியாக கொண்டே அனைத்தையும்
அறிந்தனர்.

“ஆச்சப்பா இந்தமுறை பதினெண் பேரும்
அயன்மாலும் அரனோடுத் தேவரெல்லாம்
மூச்சப்பா தெய்வமென்ற யறியச் சொன்னார்
முனியோர்கள் இருடியரிப்படியே சொன்னார்கள்
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்து பேரான
பூரணத்தைத் நினைவாய்க் காரு வாச்சப்பா
பூரணத்தைக் காக்கும் பேர்கள் வாசிநடு
மையத்துள் வாழ்வார் தானே”

அதாவது சுவாசத்தை பற்றிய சித்தர்கள் பாடல்கள் கணக்கில்லாமல் இருந்தாலும், சித்தர்களுக்கு முதன்மையானவரான அகத்தியர் சுவாசத்தை தெய்வம் என்று கொண்டே
பதிஎண் சித்தர்கள் முதல் அயன், மால், ஈசன், தேவர்கள் என அனைவரும் பயன்பெற்றனர் என தனது ஞானத்தில் கூறியுள்ளார். நூலாகிய சுவாசத்தை பிடித்தால் சேலையாகிய
இறைவனை பிடிக்கலாம்.

தன்னையறிய தலைவனையறியும் முறையாகும். மேலும் இந்த உடலை யந்திரம் எனவும், சுவாசத்தை மந்திரம் எனவும், இவற்றை இயக்கும் விதம் தந்திரம் எனவும் கூறலாம். காரணம் மகா மேரு பீடம் என்று கூறப்படும் ஸ்ரீ சக்கரத்தின் அடுக்கு யந்திரம் என்பது நம் முதுகுதண்டையே குறிக்கும்.

அதேபோல் எண்ணற்ற யந்திரங்கள் நம் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகங்களையோ அல்லது முக்கிய இடங்களையோ அல்லது தலை மற்றும் மூளையின் சிறு பகுதியோ அல்லது முழுவதுமான வடிவத்தை கொண்டே வடிவமைக்கப்பட்டது. இதில் மந்திரங்களான பீஜங்களை சில குறிப்பிட்ட தந்திரமுறைகளை
கொண்டு உட்சரிக்கும் போது சுவாமாகிய காற்று வெட்டப்பட்டு துள்ளியமான ஒலி ஒளி
அதிர்வுகள் உள்ளும் வெளியிலும் பரவி யந்திரம் சக்தி பெருகின்றது.

எப்பொழுது எல்லாம் ஒருவன் அந்த யந்திரத்திற்கு பக்கத்தில் செல்கிறானோ, அப்போதெல்லாம் அவன் உடலில் உள்ள அந்த யந்திர வடிவ பகுதி சக்தி பெரும். சரி இதில் சுவாசத்திற்கும் பஞ்சபூதத்திற்கும் என்ன சம்பந்தம்??

நாம் சுவாசிக்கும் காற்று பஞ்சபூத தன்மையை கொண்டே செயல்படுகின்றது. அதாவது நம் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றத்திற்கு இப்பஞ்சபூத சரமே காரணம்.
பூதசரத்தில் எந்த பூதத்தின் சரம் ஓடுகின்றது என கண்டுபிடிப்பதில் பல வழிகள் உண்டு.

அவைகளில் சுவையை கொண்டு அறிவது, கண்ணாடியில் சுவாசத்தை ஊதி, அதில்
தெரியும் வடிவத்தை கொண்டு அறிவது, நிறத்தை கொண்டு அறிவது என பலவழிகள்
உண்டு.

” பாராப்பா பிருதிவியிற் கவிழ்ந்தேயோடும்
பரிவான அப்புதனில் வலத்தே யோடும்
சேரப்பா தேய்வுதனில் இடத்தே யோடும்
திறமான வாயுதனில் நேரா யோடும் ஒரப்பா
அந்தரத்தில் மேலே யோடும் ஒன்றேனும்
குறைவுப்படாது உற்றுநோக்கி ஆரப்பா
இந்நூலைப் பார்பார் கேட்பார் அறிவான
மூமின்கட்கருள் செய்தோமே”.

இதில் மிக சுலபமாக சரத்தை கண்டுபிடிக்க மேற்கண்ட பாடலே சிறந்தது. அதாவது
மூச்சானது கீழ்நோக்கி(பூமியை நோக்கி) கவிழ்ந்து ஓடினால் அச்சரமானது பிருதிவி
(நிலம்) சரமாகும்.

அதுபோல் மூச்சானது இடகலையில் அல்லது பிங்கலையில் என
எப்படி நடந்தாலும், மூச்சானது சாய்ந்து இடது பக்கமாக ஓடினால் அப்பு(நீர்) சரமாகும்.

அதே போல் வலது பக்கமாக சாய்ந்து ஓடினால் தேயு(தீ) சரமாகும்.

மூச்சானது ஒடிந்து நமக்கு முன்னால் நேராக ஓடினால் வாயு(காற்று) சரமாகும்.

வெளிவரும் மூச்சானது நாசி வழி வடிந்து நமக்கு முன்பாக மேல் நோக்கி சென்றாலும்,
உள்ளுக்குள்ளேயே ஓடினாலும் ஆகாய சரமாகும்.

இப்படி நம் மூச்சானது எந்த பூதத்தை சார்ந்து ஓடுகின்றது என்பதை சுலபமாக கண்டுபிடிக்கலாம்.

1.) நாம் அசையா வேளையில் பிருதிவியும்,
2.) அசையும் வேளையில் அப்புவும்,
3.) கஷ்ட வேளையில் தீயும்,
4.) நம்மில் ஏதேனும் சலிப்பு ஏற்பட்டு அதனால் ஏற்படும் துறவு வேளையில் காற்று சரமோடும்.
5.) அதிக நேர தியானம், வாசி மற்றும் பூசை வேளையில் ஆகாய சரமோடும்.

மேலும்

அ) பூர்வபட்ச வியாழனில் பூமி சரமும்,
ஆ) அமரபட்ச வியாழனில் நெருப்பும்,
இ) வெள்ளி நீரும்,
ஈ) புதன் காற்றும்,
உ) சனிக்கிழமை ஆகாய சரமும்
மேற்கண்ட நாட்களில் முதலில் ஓட அதிக வாய்ப்புகள் உள்ளன.

மேலும்
அ) ஞாயிறு நீர் சரமும்,
ஆ) திங்கள், செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் தீ சரமும்,
இ) புதன் பூமியும்,
ஈ) வெள்ளி காற்றும்,
உ) சனி ஆகாய சார்ந்த சரம் நடப்பது மிக்க நல்லது.

பொதுவாக
1.) ஒருவருக்கு மண் மற்றும் நீருக்குண்டான சரம் நடந்தால், அவர் சத்துவ
குணமுடையவராவார்.

மேலும்
2.) ஒருவருக்கு கோபம், அகங்காரம், ஆணவம், காமம் போன்ற எண்ணங்கள் தீ சரம் நடக்கும் போது உண்டாகும்.

3.) எனவே அதை கவனித்து பக்தியில் மனதை செலுத்தினால் நல்லது. காற்று சரம்
நடந்தால் அவன் ஞானியை நெருங்கியவன்.

4.) ஆகாய சரம் நடந்தால் அவன் கடவுளை நெருங்கியவன்.

5.) (அ) தீ சரம் பக்தியில் தீவிரமாயிருப்பவனுக்கும், (ஆ) நீர் சரம் தானதர்ம
செய்பவனுக்கும், (இ) மண் சரம் ஓடினால் அவன் உபதேசம் செய்பவனாகவும் இருப்பான்.

மேலும் காலையில் படுக்கையிலிருந்து எழும்போது கொட்டாவி விடாமல் மூச்சை உள்ளிழுத்து கொண்டு எழுந்திருந்தல் மிக்க நலமாய் அமையும்.

சூரியகலையில் மண்சரமோ, நீர்சரமோ ஓடும்போது அந்நிலையில் எக்காரியம் ஆகவேண்டியிருப்பினும் அக்காரியத்தினை செயலில் நோக்க விரைவில் அது எளிதாக முடியும்.

மண்ணும் நீரும் கலந்தேயிருப்பது போல உடலில் மாமிசமும் உதிரமும் கலந்தேயுள்ளன.

ஆகாயமும் காற்றும் கலந்தேயிருப்பது போல சரமாகிய மூச்சு காற்று ஆகாய பந்தத்தில்
கலந்தேயுள்ளது. அக்கினி மட்டும் பூமியிலும், பிரபஞ்சத்திலும், உடலிலும்
அனைத்திலும் பொது நிலையாய் மத்தியில் உள்ளது.

இதுவரை சரசாஸ்திரம் ஓரளவு நிறைவடைகின்றது. இதில் இன்னும் பழகப்
பழகப் இப்பூத சரமானது எப்பூத சரத்தில் போய் முடிகின்றது என்பதை கண்டு இந்த
பஞ்சபூத சரத்தையும் இடகலையில் 25 ஆகவும், பிங்கலையில் 25 ஆகவும் பிரிக்கலாம்.

அதாவது நமது மூச்சு பிருதவியினை பூமிசர மூச்சில் தொடங்கி எப்பூத சரத்தில் முடிகின்றது என காண வேண்டும். காண முடியும். இந்த அளவு துள்ளியமாக பார்க்கும் முறையில் நம்மற்றில் உலகின் ஆதி அந்த செயலின் முக்காலங்களையும் நன்கு அறிந்துணர முடியும்.

மேலும் இடது 25யும், வலது 25யும் மற்றும் சுழுமுனையாகிய 1யும் சேர்ந்த கூட்டுதொகையே 51 அட்சரமாகிய சிதம்பர சக்கரமாகும். இதை விளக்க விளங்கி
கொள்ள தெரிந்தவன் பரத்தை தெரிந்தவன் ஆவான்.

சிதம்பர சக்கரத்தை தெரிந்து கொள்வதற்கு முன், நமசிவய மந்திரத்தில்
ந – நிலமாகவும், ம – நீராகவும், சி – நெருப்பாகவும், வ – காற்றாகவும், ய – ஆகாயமாகவும் உள்ளன.

இவற்றின் நிறம், சுவை, வடிவம், தூரம் ஆகியன
அ) ந – நிலம் – பொன் – சதுரம் – தித்திப்பு – 12 அங்குலம்,
ஆ) ம – நீர் – வெண்மை – பிறை வடிவம் – துவர்ப்பு – 16 அங்குலம்,
இ) சி – தீ – சிகப்பு – முக்கோணம் – உவர்ப்பு – 8 அங்குலம்,
ஈ) வ – காற்று – கருப்பு – அறுகோணம் – புளிப்பு – 4 அங்குலம்,
உ) ஆகாயம் – பச்சை – வட்டம் – கார்ப்பு – 1 அங்குலமாகும்.

இவற்றில்
அ) நிலத் தத்துவத்தில் நிலத்தில் நிலம், நிலத்தில் நீர், நிலத்தில் தீ, நிலத்தில் காற்று, நிலத்தில் ஆகாயம் என ஐந்து பிரிவுகளாக உள்ளும் வெளியும் இயங்கும்.
இதேபோல்
ஆ) நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் என மொத்தம் 25 பிரிவுகளாக இயங்கும் விதத்தை 25
கட்டத்திற்குள் வைத்து ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தை குறிப்பிடுவதே சிதம்பர
சக்கரமாகும்.

ஆடி 1
——–

சரவித்தை என்ற சுவாசக் கலையில் இந்நாள் மிகவும் முக்கியமான நாள்.

நாள் உதயம் என்பது இந்திய மரபில் சூரிய உதயத்தைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது, இரவு 12 மணி என்பதை அல்ல. இந்நாளில் உங்கள் சுவாசத்தை சூரியகலையான வலது கலையில் தொடங்கினால் வருடத்தில் எல்லா நாட்களும் சரமாகிய சுவாசம் சரியாக ஓடி வாழ்க்கையில் எல்லா நலங்களையும் தரும்.

இந்நாளில் சூரிய உதயத்திற்குமுன் எழுந்து, உங்கள் சுவாசம் எந்த பக்கம் ஓடுகின்றது
என்பதை கவனியுங்கள். ஒரு வேலை வலது பக்கம் ஓடவில்லை என்றால், இடது பக்கமாக திரும்பி படுத்து, இடது கையை மடித்து தலைக்கு கீழே வைத்து, கால்களை நீட்டி வலது கையை வலது தொடை மீது வைத்துக்கொண்டு உங்கள் சுவாசத்தை
கவனித்தால், தானாகவே சுவாசம் வலது கலைக்கு மாறி கொள்ளும் அல்லது நிமிர்ந்து
உட்கார்ந்து இடது தொடை மீது வலது காலைப் போட்டு உட்கார்ந்தால் போதுமானது.

இந்நாளில் உங்கள் சுவாசத்தை காலை 6 முதல் மாலை 6 வரை வலதுகலையில்
ஓடசெய்தால் மிக்க பலன் தரும் (இடது மூக்கில் சுத்தமான பஞ்சை வைத்து அடைத்துக் கொள்ள வேண்டும்). அப்படி முடியாத பட்சத்தில் சுவாசக் கலையை சூரிய கலையான வலதில் தொடங்கினால் நல்லது.

இந்த ஒரு நாள் இதை கடைபிடித்தால் வருடத்தில் எல்லா நாட்களும் பல நன்மை
உண்டு என்பது நிச்சயம். இதை படிப்பதோடு விட்டுவிடாமல் செயலிலும்,செயலோடு
விட்டுவிடாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து அனைவரும் நன்மை அடைய உதவுங்கள்.
சரவித்தை தெரிந்தவர்கள் யாரும் இதை வெளியே சொல்வது இல்லை.

– சித்தர்கள் தபோவனம்

© 2020 Spirituality