முள்ளைக் கையால் மடக்க
காலால் மிதிக்க முடியாது!
காற்றை கண்ணால் பார்க்க
கையால் பிடிக்க முடியாது!
விண்ணையும் மண்ணையும்
ஒன்றாய் இணைக்க முடியாது!
மீனால் கண்மூடி உறங்கவும்
மனிதனால் கண்திறந்து உறங்கவும் முடியாது!
நிழலை கையால் தொடவும்
நிஜத்தை நிழல்போல் மாற்றவும் முடியாது!
இதையெல்லாம் போல் மனிதனால்
பணம் இல்லாமல் வாழ முடியாது!