எவருக்கு எண்ணமெல்லாம் நசிந்து விடுகின்றனவோ, அவர்களுக்கு மோட்சம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருக்கும். எப்பொழுதும் சகல எண்ணங்களையும் நசிக்கச் செய்கின்றார்களோ . . – அப்பொழுதே பிரம்ம சொரூபர்களாய்
முத்தியை அடைகி றொர்கள். சகல எண்ணங்களையும் நசிக்கச் செய்ய ஓர் உபாயம் உண்டு.
அதைக் கவனமுடன் கவனித்து அதுபோல் அப்பியாசம் செய்து வந்தால் சகல எண்ணங்களும் ஒழிந்து பிரம்மானந்தப் பதவியை அடையலாம். எண்ணங்களிலேயே பிறவிகள் உண்டாகின்றன. எண்ணங்கள் இல்லாவிடில் பிறவியில்லை என்று உபநிடதங்களில் கூறப்பட்டிருக்கின்றன.
ஆதலால், சகல எண்ணங்களையும் தலையெடுக்க விடாமல் செய்வதே மனோநாசத்திற்கு முக்கியமான உபாயம். எவ்வாறெனில் நமக்கு எண்ணமெல்லாம் பிரம்ம தானத்திலிருந்து உண்டாகின்றன. இந்த நாபியான பிரம்மதானத்தை
வெட்டவெளியாகப் பார்த்தபோது எண்ணங்களெல்லாம் உதித்த
இடத்திலேயே ஒடுங்கும்.
எப்படியெனில் சென்னையை என மனம் நினைத்த உடனே “செ’ என்னும் எழுத்து நாபியிலிருந்து புறப்படும். அதி நாபியிலிருந்து வெளியே வரவிடாமல் உள்முகமாய் அந்த நாபியின் இடத்தை ஆகாய ரூபமாய் பார்த்தபோது வெட்டவெளியாய், அதாவது வெற்றிடமாய் இருந்தால் “செ” என்னும் எழுத்து உதித்த இடத்திலேயே ஒடுங்கும். முதல் எழுத்து ஒடுங்குவதால் அதன் பின் வரும் எழுத்துக்கெல்லாம் (எண்ணங்களெல்லாம்) ஒடுங்கிவிடும்.
சுவாசமும், மனமும் ஒன்றுவதால் மனம் நின்றால் சுவாசமும் நின்றுவிடும். மனத்தின் சுபாவகுணம் எண்ணங்களே ஆகும். சுவாசம் என்னும் காற்று நாபியில் பிறந்து, மூக்குத்
துவாரங்களின் வழியாக ஓயாமல் வெளிவந்து, ஒவ்வொரு சுவாசமாய் இறந்து கொண்டேவரும். அப்போது சிறிய சிறிய உதவியற்றதும், ஞாபகமில்லாததுமாகிய அனைத்து எண்ணங்களும் நாபியிலிருந்து வெளியேவரும். சுவாசம் என்னும் காற்றில் மனதென்னும் எண்ணங்கள் அடிக்கடிப் பிறந்து பிறந்து மறைந்து நசிந்து கொண்டே வரும். இப்படிக் காற்று உருவகமாகயிருக்கும் மனத்தை நிறுத்த உபாயத்தைக் காண்போம்.
ஒரு புற்றிலிருந்து பாம்பானது, வெளிவரும் சமயத்தில் அப்புற்றின் அருகில் ஒரு மனிதன் நின்றிருந்தால் அவனைப் பாம்பு பார்த்தவுடன் பயந்து வெளிவராமல் புற்றுக்குள்
போய்விடும். மறுபடியும் பத்து நிமிடங்கள் சென்ற பிறகு பாம்பானது புற்றிலிருந்து மறுபடியும் வெளியே வந்து எட்டிப் பார்க்கும். அம்மனிதன் விலகிப் போகாமல் நின்றிருந்தால், அப்பாம்பானது மீண்டும் புற்றுக்குள் போய்விடும். அம்மனிதன்
புற்றுக்கருகிலிருந்து விலகிப்போய் விட்டால் பாம்பு வெளியே போய்விடும். அதுபோல நாபி புற்றென்றும், சுவாசம் (மூச்சு) பாம்பென்றும் கொண்டால், அந்தச் சுவாசம் என்னும் பாம்பில் அனைத்து வகையான எண்ணங்களும் அடிக்கடி உதித்து உதித்து இறந்துவிடும். இந்த எண்ணங்களையே மனம் என்று சொல்லுவார்கள். இந்த மனம் காற்றின் உருவமாக இருந்த போதிலும் அதன் குணத்தைக் காண்போம்.
எந்த எண்ணங்களும் இல்லாமல் வெற்று வெளியாக இருக்கும்பொழுது, கடைக்குப் போக வேண்டும். இன்னென்ன பொருட்களை வாங்க வேண்டுமென்றும், இப்படிப்பட்ட
பலவிதமான எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதித்து உதித்து, நீர் அலைகளிலிருந்து உண்டாகிய நீர்க்குமிழிகள், திவாலைகள், நுரைகள், உடனுக்குடன் மறைந்து விடுவது போல், யிரக்கணக்கான உதித்த எண்ணங்கள் யாவும் மனம் என்னும் நீர்க்குமிழிகள் சுவாசம் என்னும் அலையில் பிறந்து, “சுவாசம்’ – என்னும் அலையிலேயே மறைந்து போகும்.
ப்பொழுது என்ன செய்யவேண்டுமென்றால் முன் சொல்லிய புற்றுக்குள் இருந்த பாம்பானது, வெளிவராமல் எப்படிப் புற்றுக்குள் அடங்கியிருக்கிறதோ அதுபோல், நாபி என்னும் புற்றிலிருந்து சுவாசம் என்னும் பாம்பு புறப்படும்போது அதிலிருந்து
கடைக்குப் போக வேண்டும். இன்னென்ன பொருட்களை வாங்கவேண்டும் என்று எண்ணம் உதிக்கும்.
அப்போது முதல் எழுத்தாகிய க” என்னும் எழுத்துப் புறப்பட்ட உடனே நில் ? நீ எங்கே புறப்படுகிறாய் மனமே, புறப்படுப் பார்ப்போம் என்று கண்களை மூடி நாபியிடம்
அகத்தினுள்ளே வெற்று வெளியாகப் பார்த்தோம் என்றால் எந்த எழுத்து நாபியிலிருந்து முதலில் பிறக்கின்றதோ, அவ்வெழுத்தைப் புறப்படாதவாறு நாபியினிடம் வெளிவெளியாகப் பார்க்க வேண்டும். அப்போது உலகத்தை எல்லாம் ஆளும் சக்கரவர்த்தி அரசர்களையெல்லாம் தம் ஆக்ஞுக்குள் நிறுத்துவது போல், இந்திரிய வியாபாரங்கள்
யாவும் நின்றுவிடும்.
ஆதலால், அசுத்தமான மனத்தை ஆத்ம ஞானத்தினால் நாசம் செய்வதோடு மனம் வெளி விகாரங்களில் ஓடாமல் நின்று விடும். மனம் எப்பொழுது நின்று விடுகின்றதோ அப்போதே மூச்சு ஆடாமல் நின்றுவிடும். மூச்சு நின்றவுடன் காதினால் கேட்பது, மூக்கினால் வாசனை அறிவது, வாயினால் பேசுவது, கண்களால் பார்ப்பது, சீதோசணங்களால் அறிவது முதலாகிய இந்திரிய வியாபாரங்கள் ஓடுங்கி, தான்தானாய் கல் பொம்மையைப் போல் சமாதி நிலையில் நின்று பிரம்மானந்தத்தில் ஒருவிதமான சுகத்தில் உறைந்து இருப்பார். மூச்சு நாபியிலிருந்து பிறக்கின்றது. அதாவது தொப்புளிலிருந்து மூச்சு புறப்படுகின்றது. அந்தத் தொப்புளிலிருக்கும் இடமே
சிதாகாசம்’ – என்றால் சிறிய ஆகாசம் வெளி என்று சொல்லப்படுகின்றது.
மேலே சொல்லிய மனத்தின் சொரூப உண்மை நிலைகளையெல்லாம் முன்னுள்ள பெரியோர்கள், பரம இராசர்களும், மற்றவர்களும் தெளிவாய் அறியும்படி எளிய
வசனநடையில் கவிகளாகவும், பாடல்களாகவும், சுலோகங்களாகவும், சுருதிகளாகவும், மறைபொருளாகப் பாடிச் சென்றார்கள்.
மலிதர்கள் பெரும்பாலும் சாதாரண உரை தெரிந்து கொள்வார்களே ஒழிய, உள் இரகசியமான ஆழ்ந்த கருத்துகளை அறியமாட்டார்கள். மேற்கூறிய கவிகள்,
பாடல்கள், சுலோகங்கள், சுருதிகள் முதலானவற்றுக்கு எல்லாம் உள் கருத்தும், இரகசியங்களும் இந்நூலில் விரிவாகவும், தெளிவாகவும் சுலபமான வசனநடையில் எழுதி வெளியிடப்பட்டிருகின்றன. ஆதலால் இந்நூலில் சொல்லியது
போல் பயிற்சி செய்து வரவேண்டும்.