பத்து வித நாத சப்தங்கள்‌ – சரவித்தை – 5

கேளப்பா கேசரமே அண்டஉச்சி
கெட்டியாய்க்‌ கண்டவர்க்கே மெளனம்‌ ஆகும்‌
ஆளப்பா பரப்பிரம்மம்‌ யோகமென்று
அடுக்கையிலே போதமுந்தான்‌ உயரத்‌ தூக்கும்‌
வாளப்பா கெவுனமணிவிந்து நாதம்‌
வலுத்திதடா கெட்டியாய்‌ திரண்டுபோகும்‌
நாளப்பா அண்டமெல்லாம்‌ சித்தியோடும்‌
நடனமிடும்‌ சிலம்பொலியும்‌ காணலாமே

(இ. எள்‌) பிராணவாயு சுவாசத்தை ஓம்‌ என்னும்‌ மந்திரத்துடன்‌ மூக்குத்‌ துவாரங்களின்‌ வழியாய்‌ உள்ளுக்குள்‌ இழுத்து நிறுத்தவேண்டும்‌. பிராணயாமம்‌ செய்யும்‌ போது ஒம்‌ ஓம்‌
ஓம்‌ ஓம்‌ ஓம்‌ என்னும்‌ பிரணவ மந்திரத்தைச்‌ சேர்த்து உள்ளுக்கு இழுத்து மறுபடியும்‌ சுவாசத்தை வெளிவராத படிக்‌ கண்டத்தில்‌ நிறுத்தி விடவேண்டும்‌.

அப்போது அந்தச்‌ சுவாசம்‌ நுரையீரலில்‌ சிலநேரம்‌ தங்கியிருக்கும்‌. பிறகு அந்தச்‌ சுவாசம்‌ நுரையீரலிருந்து வெளிவரும்‌. அப்போது யோகியானவன்‌ கண்டத்திடம்‌ மூடி விடுவதால்‌ அந்தச்‌ சுவாசம்‌ மூக்குத்‌ துவாரத்தின்‌ வழியே வெளிவராமல்‌ தொண்டைக்குப்‌ பின்புறமாய்‌ இருக்கும்‌ இரப்பைக்‌ குழியின்‌ வழியாக 22 அடி நீளமுள்ள குடல்‌
முழுமையும்‌ அந்தச்‌ சுவாசம்‌ செல்லும்‌.

பிறகு அவ்விடத்திலிருந்து மூலாதாரம்‌ என்னும்‌ குதத்தினிடம்‌ போய்‌ அச்சுவாசம்‌ அபானவாயுவாய்‌ வெளியே போக ஆரம்பிக்கும்‌. அப்போது யோகியானவன்‌ அந்தச்‌
சுவாசத்தை அபானவாயுவாகப்‌ போகவிடாமல்‌ இரண்டு பிண்டங்களையும்‌ கெட்டியாய்‌ இடுக்கிப்பிடியாக இழுத்துப்‌ பிடிக்கவேண்டும்‌. பின்‌ அது வெளியே போகாமல்‌ பின்புறமாக
இருக்கும்‌ முதுகெலும்பின்‌ வழியாகப்‌ போகும்‌.

முதுகெலும்பில்‌ 33 எலும்புக்‌ கூட்டுக்குள்‌ படிப்படியாய்‌ அமைக்கப்பட்டி ருக்கும்‌ துவாரத்தின்‌ மத்தியில்‌ வெள்ளை நரம்பு ஒன்று இருக்கும்‌. இந்நரம்பிற்கு முதுகுத்தண்டு (ஸ்பைனல்‌ கார்டு) என்று ஆங்கிலத்தில்‌ கூறுவர்‌.

அது தாமரைச்‌ செடியிலுள்ள சிறிய நூல்களைப்‌ போன்று சிறு துவாடிங்களால்‌ மேற்படி மூக்குத்துவாரங்களின்‌ வழியாக உள்ளிழுத்து நிறுத்திய சுவாசமானது அப்பியாச முதிர்ச்சியினால்‌ மெதுவாக அவ்வெள்ளை நரம்பில்‌ ஏறிச்‌ செல்ல வேண்டும்‌. பிராணயாமம்‌ செய்பவர்களுக்கு மட்டுமே முதுகெலும்பில்‌ இருக்கும்‌ வெள்ளை நரம்பிலுள்ள சிறிய துவாரங்களின்‌ வழியாகச்‌ சுவாசம்‌ மேலேறிச்‌ செல்லும்‌. இதற்குக்‌ காகப்புசாண்டர்‌ பாடலில்‌,

போமடாமுன்‌ சொன்ன நரம்பினூடே
பூரித்து ஆவி மதியும்சுடர்தாக்க மூன்றாம்‌
ஆமடாபின்னையுந்தான்‌ கீழே பாயும்‌
அந்தரங்கந்தன்னைப்‌ பார்க்க அடங்கிப்போகும்‌
நாமடா வெளியில்‌ திறந்து சொல்லி விட்டோம்‌
நாதாந்த பரப்பிரம்மநாட்டந்தன்னை சன
ஓம்சுடா விந்துந்தான்‌ அண்ட உச்சி
உறுதியுடன்‌ சித்தமதை ஊன்றிப்‌ பாரே

என விவரிக்கின்றார்‌. அதாவது, பூரித்த இரவி மதியும்‌ சுடர்‌ தான்‌. மூன்றாம்‌ என்றால்‌ வலதுநாசி, இடதுநாசி இரண்டு நாசிகளிலும்‌ உள்ளிழுத்து நிறுத்திய மூன்று சுவாசத்திற்கும்‌ அதிகளவுக்‌ கோபமுண்டாகும்‌. அக்கினி சுவாலையைப்‌ போல்‌ கிளம்பி
தஸ்தானத்திற்கு கீழ்நோக்கிச்‌ சிங்கக்‌ குட்டியைப்‌ போல்‌ அதிகவேகமாகப்‌ பாய்ந்து முதுகெலும்பின்‌ வழியாக மேலேறி மூலதானத்தைச்‌ சேர்ந்து அங்குள்ள “விந்து: – என்று சொல்லும்‌ அமிர்தத்தைத்‌ தமது வெப்பத்தினால்‌ உருக்கிக்‌ கண்டத்தில்‌
விழச்‌ செய்து, தான்‌ நாதாநந்தத்தில்‌ ஐக்கியமாகி விடும்‌.

இதையடைய வேண்டுமாயின்‌ திடச்‌ சித்தம்‌ உடையவனாக இருந்து பிராண யாமம்‌ செய்து வரவேண்டும்‌. யோகத்‌ தன்மையினால்‌ சுவாசம்‌ முதுகெலும்பின்‌ பின்‌ வழியாக
மேலேற்றிச்‌ சகல நாடிகளையும்‌ கிளப்பியவுடன்‌ நாத சப்தங்கள்‌ உண்டாகும்‌.

அப்போது சுவாசமானது, முன்‌ சொல்லிய சுழிமுனை நாடியின்‌ வழியாகச்‌ சென்று பிரம்ம கபாலாத்தைத்‌ தாக்கி அவ்விடத்திலிருந்து இச்சரீரத்திலிருக்கும்‌ எழுபத்தி ஆறாயிரம்‌ நாடிகளிலும்‌ சென்று அந்தந்த நாடிகளை அவ்வவ்விடத்தில்‌ தங்கவிடாமல்‌ அந்தந்த இடங்களைக்‌ கிளப்பி விடுவதால்‌ நாடிகள்‌ யாவும்‌ தத்தம்‌ இடத்தைவிட்டுக்‌ கிளம்பி சர்ப்பம்‌ சீறிக்‌ கொண்டு ஓங்காரத்துடன்‌ கிண்கிணி, சங்கு, வீணை, தாளம்‌,
கண்டா, பேரி, மிருதங்கம்‌, மேளநாதங்கள்‌ முதலான பத்து வகையான வாத்தியங்களும்‌ நாடியின்‌ வழியாகத்‌ தொனித்துக்‌ கொண்டு காதின்‌ வழியாகச்‌ சதாகாலமும்‌ கேட்டுக்‌ கொண்டே இருக்கும்‌.

ஒரு கிழ அரசன்‌, வேற்றரசன்‌ போர்க்களத்திற்கு வந்தபோது கிழ அரசன்‌ தன்‌ குமாரனை அழைத்து அப்பா, குழந்தாய்‌! வேற்றரசன்‌ நம்‌ மீது படையெடுத்து வந்திருக்கின்றான்‌. நீ சென்று அந்த வேற்றரசனை வெற்றி கொள்வாய்‌ என அனுப்பினான்‌. அக்குமாரனும்‌ சென்று வேற்றரசனை வெற்றி கொண்டு திரும்ப வருகையில்‌, அவன்‌ தந்தையாகிய கிழவரசன்‌ கேள்விப்பட்டுத்‌ தன்னிடமுள்ள இராச்சியத்தை முன்கூட்டியே அனுப்பி அக்குமாரனை எதிர்கொள்வது போலாகும்‌.

நமது கடவுளானவர்‌ அவனின்‌ கடினத்தன்மையால்‌ “பிராணாயாமம்‌” செய்து சம்சாரம்‌ என்னும்‌ சமுத்திரத்தைக்‌ கடந்து கரையேற்றி விட்டது போல்‌ ஆனந்தமடைந்து மேற்கூறிய பத்து வித நாதங்களையும்‌ காதில்‌ கேட்கும்படி முன்னால்‌ அனுபவித்துத்‌ தந்து பிறகு காட்சியைத்‌ தருகின்றார்‌.

இந்தத்‌ தேகமென்னும்‌ ஆலயத்தில்‌ மேற்கூறிய பத்துவித நாதங்களையும்‌ கேட்டுக்‌ கொண்டிருந்து, பிறகு அதைக் கடந்து பிரம்மக்‌ கபாலத்திலிருக்கும்‌ ஆகாச வடிவத்தில்‌ மனம்‌ ஐக்கியமாகி விடும்‌.

இவ்வாறு மனம்‌ ஐக்கியமாகி விடுவதால்‌, தன்னுடைய உண்மை வடிவம்‌ தானாகவே நின்று கொண்டிருக்கும்‌. அதாவது தானே தானாவான்‌. முப்பத்தாறு தத்துவங்களுக்கும்‌
அதிகப்பட்சம்‌ இந்த ஓசையை யார்‌ கேட்கின்றார்களோ? அவர்களே முக்தர்கள்‌, அவர்களே பிரம்மஞானிகள்‌. யார்‌?

ஒருவர்‌ சகல எண்ணங்களையும்‌ விட்டுச்‌ சித்த விருத்தியடைந்து அந்நிய சாத்திரங்களிலும்‌ சமத்த போகங்களிலும்‌ இச்சை இல்லாதவர்களாய்‌, “மாயை” – என்னும்‌
பிரம்மவலையில்‌ அகப்படாமல்‌ சுயம்பிரகாசமான பிரம்ம ஞானத்தினால்‌ “நிர்விகல்பச்‌ சமாதியிலிருப்பவர்கள்‌” அதாவது உயிருடன்‌ இருந்து கொண்டு அடக்கமடைவதைக்‌ குறிக்கும்‌ – இவ்வாறு இருப்பவர்களே சீவன்‌ முக்தர்கள்‌ ஆவார்கள்‌.

சுவாசம்‌ மூக்கின்‌ வழியாய்‌ இழுத்து நிறுத்தியபோது, வெகுநாட்களின்‌ பழக்கத்தால்‌ அந்தப்‌ பின்புறமாக மேலேறி தலையின்‌ உச்சிக்குப்‌ போய்‌ அவ்விடத்தில்‌ இருக்கும்‌ “நாபி” – என்னும்‌ தொப்புளுக்குச்‌ சென்று அங்குள்ள குண்டலி சத்தியைக்‌ கிளப்பிவிடும்‌. அப்போது நெற்றியில்‌ ஒளி காணப்படும்‌.

இவ்விரண்டையும்‌ முடித்த யோகி, சுவாசம்‌ அடக்கி அமைதியாக அமர்ந்திருந்தால்‌ அந்தச்‌ சுவாசம்‌ தேகமெல்லாம்‌ சுற்றித்‌ திரிந்து சரீரத்தில்‌ இருக்கும்‌ எழுபத்தி ஆறாயிரம்‌ நாடிகளையும்‌ கிளப்பி விடுவதால்‌ அவற்றுக்குக்‌ கோபமுண்டாகி “ஓம்‌” என்னும்‌ சப்தம்‌ சதா ரீங்காரம்‌ செய்து கொண்டிருக்கும்‌.

அப்போது அந்த ஓங்காரத்தில்‌ மனத்தை நாட்டிக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்தால்‌ முன்‌ சொல்லியபடி பத்து நாத சத்தங்களையும்‌ கேட்கலாம்‌. நாத சப்தங்களை ஆனந்தமாய்க்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கும்‌ தறுவாயில்‌ சிரசிலிருந்து அமிர்தமானது “யோகாக்கினி” சுவாலையினால்‌ கரைந்து மண்டையிலிருந்து கண்டத்தின்‌ வழியாகச்‌ சொட்டுச்‌ சொட்டாய்‌ இருந்தாற்‌ போலிருந்து குபீரென்று தொண்டையில்‌ விழுந்து வயிற்றிற்குள்‌
செல்லும்‌. அமிர்தம்‌ மண்டையிலிருந்து வரும்‌ பொழுது நன்றாகத்‌ தெரியம்‌.

யோகியானவன்‌ மேற்‌ சொல்லிய நாதசப்தங்களைக்‌ கேட்டு அமிர்தபானம்‌ செய்து கொண்டிருந்து கடைசியில்‌ சூனியமாய்ப்‌ பிரம்மானந்தப்‌ பதவியை அடைவான்‌. யோகாப்‌
பியாசம்‌ செய்து சித்தியடைந்த மகான்களுக்கு நாபியிலிருந்து யோகா அக்கினி உண்டாகும்‌. இந்த யோகா அக்கினி, “சஞ்சிதம்‌” – என்னும்‌ புண்ணிய பாப இருவினைகளைச்‌ சாம்பலாய்‌ எரித்துவிடும்‌. அத்தோடு சூரியமண்டலம்‌,
சந்திரமண்டலம்‌, நட்சத்திரமண்டலம்‌ யாவும்‌ நம்மில்‌ அடங்கியிருக்கின்றது. சிரத்தை பக்தி, தியானத்தில்‌ இருப்பவர்களுக்குத்‌ தப்பாமல்‌ யோகம்‌ சித்திக்கும்‌.











Comments are closed.

© 2020 Spirituality