நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள் 01

சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் ‘காலம்’…
=========================================================

தவறு எல்லாம் சமூகம் வகுத்ததே…

மற்றவருக்கு நாம்
செய்யும் செயலினால் துன்பம் இல்லையெனில் எல்லாம் சரியே…!!!

=======================================================

தேடல்களை தெளிவுப்படுதிக் கொள்ளாதவரை பயணங்கள் யாவும் குழப்பங்குளுடன் நீடிக்கும்…

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றுவதில்லை,

யாரிடம் எதிர் பார்க்க வேண்டும் என்பதில் தான் ஏமாந்து விடுகிறோம்…!!

=======================================================

கற்றுத்தெளிவது கல்வி
பட்டு தெளிவது அனுபவம்,

கற்றது மறந்தாலும் பட்டது மறக்காது…

=======================================================

ஆயிரம் எண்ணம் உலகில் இருந்தாலும்…

உங்கள் மனதில் தோன்றும் நல் எண்ணமே உலகில் சிறந்த எண்ணம்..!!!

=======================================================

தோல்வியும், துன்பமும் தனியே வருவதில்லை..

கூடவே ‘வலிமையையும்’ அழைத்து வருகிறது..!!

=======================================================

துன்பத்தில் விழுந்து எழுபவன்…

வாழ்க்கையின் எல்லை வரை இன்பம் காண்பான்…!!

=======================================================

நிம்மதி என்பது இருப்பதில் திருப்திபடுவது தானே தவிர,இல்லாததலிலும் இழந்ததிலும் தேடுவதல்ல…!!

=======================================================

உன்னை நீ நம்பத் தொடங்கிவிட்டால்..

உலகில் நீ வெற்றியுடன் வாழக் கற்றுக் கொண்டுவிட்டாய் என்று பொருள்..!!

=======================================================

பெரிய பெரிய வலிகள் இருந்தாலும்,

அதை ஜெயிக்க சிறிய சிறிய வழிகள் இருக்கும்..!!

=======================================================

வல்லமை பேசுவதும்,

வஞ்சிகரிடம் நட்பு கொள்வதும் தீராத துன்பம் தரும்…

=======================================================

மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் நிலையானது,அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் திறனே…

வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கிறது..!!!

=======================================================

நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது,

அறிவில்லாத நற்பண்பு பயணற்றது..!!

மகிழ்ச்சிக்கு வெற்றி திறவு கோலல்ல…
மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல்…

நாம் செய்வதை நாம் நேசித்தோமானால் வெற்றி அடையலாம்…

=======================================================

அனுபவங்களை சேகரித்து வையுங்கள்…

இனி வரும் நாட்களில் எச்சரிக்கையோடு செயல் அதுவே உதவும்…!!

=======================================================

கலங்காத உள்ளம் படைத்தவனே…

கடைசியில் மகத்தான வெற்றிக்கு உரியவன் ஆகிறான்..!!

=======================================================

அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரையை கேட்டு கொள்…

அது உன்னை வெற்றி அடைய செய்யாவிட்டாலும் தோல்வி அடையாமல் தடுக்கும்!!

=======================================================

முடியும் என்று
தெரிந்தால் முயற்சி எடு…

முடியாது என்று
தெரிந்தால் பயிற்சி எடு…

‘வெற்றி நமதே’

=======================================================

தவறாகி விடுமோ என்ற
நம் எண்ணம் தான்,

பல வாய்ப்புகளை
தவற விட வைக்கிறது….

=======================================================

மாற்றம் முதலில் கடினமாக இருக்கும்,

நடுவில் குழப்பமாக இருக்கும்,

இறுதியில் அழகாக இருக்கும்…

=======================================================

முயற்சி உடையவனின் வளர்ச்சியை தடுக்க முடியாது..
புதைத்தாலும் மரமாக எழுந்து நிற்பான்…!!

=======================================================

வெற்றி மகிழ்ச்சிக்கு முக்கியமல்ல…மகிழ்ச்சியே முக்கியம்!!

நீங்கள் செய்வதை நீங்களே விரும்பினால் வெற்றி நிச்சயம்…!!
=======================================================

அழகான நாட்கள் உங்களை தேடி வருவதில்லை…

நீங்கள் தான் அவற்றை நோக்கி நகர வேண்டும்..!!

=======================================================

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடரதே,

உனக்கானே பாதையை நீயே தேர்ந்தெடு..!!

=======================================================

எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக பயன்படுத்தினால்,
திறக்காத கதவுகளும் திறக்கும்…

=======================================================

நேரங்கள் நேர்மையானவை, அதனால் தான் யாருக்கும் காத்திருப்பதில்லை…

=======================================================

இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை…

=======================================================

வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது…

நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது..!!

=======================================================

எண்ணங்களில் நீ அழகாய் இரு, தோற்றம் எப்படி இருந்தாலும் கவலைக் கொள்ளாதே…

=======================================================

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மட்டுமே எப்போதும் வெற்றியின் அடித்தளமாக இருக்கும்…

=======================================================

பறவை பறக்க வானம் தேவை, வசிக்க சிறு கூடு போதும்..

நம் ஆசைக்கும் தேவைக்குமான வித்தியாசமும் அதுவே…

=======================================================

சில சமயங்களில் அறிவு நமக்கு வழிகாட்டுவதில்லை. அப்போது நமது நம்பிக்கையே வழிகாட்டுகின்றது.

=======================================================

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது..

முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

=======================================================

வாழ்க்கையில் மன மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தான் பெரிய சொத்து…

=======================================================

எதையும் எதிர்கொண்டு வாழ்வோம் என்ற இன்றைய துணிச்சல்,

நாளை வரும் துன்பங்களைக்கூட துரத்தி அடிக்கும், மறவாதீர்…

=======================================================

நிறை குறை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை… அதில் நிறையை மட்டும் நினை..

வாழ்க்கையை வென்று விடலாம்…

=======================================================

மகிழ்ச்சி என்பது நம்மிடம் தான் என்பதை உணர்ந்தால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழலாம்….

=======================================================

எண்ணம் போல் வாழ்க்கை.,

நாம் முடியும்னு நினைச்ச எல்லாமே முடியும்.முடியாதுனு நினைச்ச எதுவுமே முடியாது…

அனைத்துமே நம் எண்ணத்தை பொறுத்தே…

=======================================================

என்ன நடந்து விடுமோ என்று யோசித்து இருப்பதைவிட,

மோதி பாருங்கள் எழுந்தால் வெற்றி விழுந்தால் அனுபவம்…

=======================================================

முயற்சியின் பாதைகள் கடினமானவை… ஆனால் முடிவுகள் இனிமையானவை,

தொடர்ந்து முயலுங்கள் முயற்சி நனவாகும் வரை…

=======================================================

“பறக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், முதலில் உங்கள் சுமையைத் தூக்கியெறியுங்கள்!”- புத்தர்

=======================================================

உங்களின் கோபம், உங்களின் நியாயமான வேண்டுகோள்களைக் கூட புறக்கணிப்புக்கு உள்ளாக்கும்!” – புத்தர்

=======================================================

புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை…

முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை…!!

=======================================================

‘புகழ்’ தகுதில்லாதவனுக்கு கூட கிடைத்து விடும்…

‘பெருமை’ சாதனையாளனுக்கு மட்டுமே கிடைக்கும்…

=======================================================

எதுவும் கையில் கிடைப்பதற்கு முன்பே கனவுகளை வளர்த்து கொள்ளாதே…

கையில் கிடைத்தவையே இந்த உலகத்தில் நிரந்தரம் இல்லை…!!

=======================================================

உங்களின் மிகப்பெரிய செல்வம் ‘உடல் நலன்’

மிகப்பெரிய சொத்து ‘அறிவு’

மிகவும் அவசியமானது ‘தன்னம்பிக்கை’

மிகச்சிறந்த ஆயுதம் ‘பொறுமை’

மிகச்சிறந்த மருந்து ‘சிரிப்பு’

=======================================================

தவறாகி விடுமோ என்ற
நம் எண்ணம் தான்
பல வாய்ப்புகளை
தவற விட வைக்கிறது….

=======================================================

நீ எதை வேண்டுமானாலும் இழக்கலாம் வலி கொடியது…

தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே வாழ்க்கை பெரியது…!

=======================================================

வாழ்க்கையைப் பாரமென்று நினைத்தால், நம் சந்தோசங்களும் தூரம் தான்….

=======================================================

இல்லாதவன் சொல்லும் உண்மையை விட இருப்பவன் கூறும் பொய்க்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகம்….

=======================================================

உனக்காக படைக்கப்பட்ட எதுவும் உன்னை விட்டு சென்று விடாது…

உனக்கான பாதையை அறிந்து வென்று காட்டு..!!

=======================================================

வாழ்க்கை என்பது நீ எதிர்பார்ப்பது போல் இல்லை,

ஆனால் நீ நினைத்தப்படி மாற்றலாம் நீ முயற்சித்தால் மட்டுமே…

=======================================================

வானுக்கு எல்லை இல்லை,
காற்றுக்கு வேலி இல்லை,
மண்ணுக்கு அளவு இல்லை,
உங்கள் முயற்சிக்கு என்றும் தோல்வி இல்லை…

=======================================================

கோபம் இல்லாத மனமே
இறைவன் வாழும் இடம்

கோபம் உள்ள இடமே
இறைவன் வரப் போகின்ற இடம்!

=======================================================

எண்ணங்கள் அழகானால், எல்லாமே அழகாக மாறும்…

=======================================================

தன்னைத்தானே சரி செய்துகொள்ள முயலுங்கள்…

அதை விட சிறந்த மாற்றம் வேறொன்றுமில்லை..!!

=======================================================

வெற்றி என்பது ஒரு சதவிகித குறிக்கோள், 99 சதவிகித உழைப்பால் உருவாக்கக்கூடியது!

=======================================================

வாழ்க்கை அது உள்ளங்கையின் ரேகையில் இல்லை, உங்களின் நம்பிக்கையில் உள்ளது.

=======================================================

முடியும் என்று நினைத்தால் பல வழிகள் உண்டு…

முடியாது என்று நினைத்தால் பல காரணங்கள் உண்டு…

=======================================================

வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக நேரம் எதுவும் இல்லை…

விடா முயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்…!!

=======================================================

எவன் ஒருவன் பொறுமைசாலியாக இருக்கிறானோ…
அவன் தான் நினைத்தத்தை கட்டாயம் அடைவான்..!!

=======================================================

கடமையில் கவனம் செலுத்துவது ஒன்றே…

மன அமைதிக்கான சிறந்த வழி…!!

=======================================================

வலி என்பது நாம் மேன்மையடைவதற்கான பயிற்சியின் ஒரு பகுதி…

=======================================================

செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்…!

=======================================================

மௌனமாக இருந்துபார் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்…

மகிழ்ச்சியாக இருந்துபார் பல பிரச்சினைகள் காணாமல் போய்விடும்…!!

=======================================================

எந்த சூழ்நிலையில் நீ வீழ்ந்தாலும், பிறர் உன்னை வீழ்த்தினாலும்…
எழுந்து நிற்க கற்றுக்கொள்..!!

=======================================================

உன்னில் நம்பிக்கை கொள்!
விழித்திரு, உழைத்திரு!
அறிவின் ஆதிவரை சிந்தித்திரு..!!

=======================================================

நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல ‘துரோகம்’

=======================================================

தடைகளை தட்டிக்கழிப்பதை விடத்,

தகர்த்து விடுவது தான் புத்திசாலித்தனம்…

=======================================================

ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று முதலடி எடுத்து வை!

வெற்றி உன்வசம்!

=======================================================

கடிகாரத்துக்குச் சரியான நேரத்தை மட்டுமே காட்டத் தெரியும். அதை நல்ல நேரமாகவோ, கெட்ட நேரமாகவோ மாற்ற நம்மால் மட்டுமே முடியும்!” – மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.

=======================================================

வாழ்க்கை’
நேர்மையாக உள்ளவனை அழ வைக்கிறது…

நேரத்திற்கு ஏற்ப மாற்றி பேசுபவனை வாழ வைக்கிறது..!

=======================================================

ஒருவரிடம் பல மணி நேரம் பேசுவது நட்பல்ல…

அவரைப் பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசாமல் இருப்பதே நட்பு…!!

=======================================================

மனதால் வலிமை கொள்…

உன்னை வீழ்த்த யாரும் இல்லை…!!

=======================================================

கவலைகள் நாளைய துயரங்களை அளிப்பதில்லை..

இன்றைய வலிமையை அழித்து விடும்..!!

=======================================================

நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்…

ஆனால், வெற்றி என்பது நம்பிக்கை உடையோரிடமே வரும்..!

=======================================================

நேற்றைப் பற்றிய கவலைகளை மறந்து புதிய நாளையை உருவாக்க இன்றே முன்னெடுங்கள்!!

=======================================================

எடுத்து வைப்பது சிறிய அடியாக இருந்தாலும்..

எட்டுவது சிகரமாக இருக்க வேண்டும்..!!

=======================================================

கடமையில் கவனம் செலுத்துவது ஒன்றே…

மன அமைதிக்கான சிறந்த வழி..!!

=======================================================

தேங்கி கிடக்கும் நீரில் தான் குப்பைகள் அதிகளவில் குவியும்..

நாம் தேங்கி நிற்காமல் ஆற்று நீரைப் போல் ஓடிக் கொண்டிருப்போம்..!!

=======================================================

ஒருவரின் தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்…

=======================================================

எதுவும் சுலபமில்லை, ஆனால் எல்லாமே சாத்தியம் தான்…

=======================================================

கோபத்தில் மௌனத்தை காக்கும் எவரும் தங்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை…

=======================================================

நதி போல் ஓடிக் கொண்டே இரு…

வெற்றி ஓரிடத்தில் காத்திருக்கும் கடலாக..!!

=======================================================

தவறுகள் அனுபவங்களை கொடுக்கும்..!!

அனுபவங்கள் தவறுகளை குறைக்கும்..!!

=======================================================

தோல்விகள் இல்லாத வாழ்க்கை பயனற்றது..

போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையற்றது..!!

=======================================================

நம்பிக்கை என்பது மரத்தின் நிழல் போன்றது. எதை நினைக்கிறோமோ அதையே பிரதிபலிக்கும்!” – ஆபிரகாம் லிங்கன்.

=======================================================

சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவர் பெரும்பாலும் அடிமையாகவே இருப்பர்…

=======================================================

எதையும் எதிர் பார்த்து ஏமாந்து போகாதே…

உழைப்பை உறுதிப்படுத்து, நம்பு உயர்வு நிச்சயம் வரும்…!!

=======================================================

அதிர்ஷ்டத்தை நம்பி வாழாதே,

துரதிர்ஷ்டதத்தை கண்டு கலங்காதே,

உன் கஷ்டத்தின் பலனை அடைந்தே தீருவாய்…

=======================================================

நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது “நம்பிக்கை “

மாறவில்லை என்றாலும் சமாளித்து விடலாம் என்பது “தன்னம்பிக்கை”

=======================================================

பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். அவை ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம்!”- விவேகானந்தர்

=======================================================

உங்களின் வலிமையை வெற்றியைக்கொண்டு அளவிடாதீர்கள், உங்களின் போராட்டங்களைக்கொண்டு அளவிடுங்கள்!”

=======================================================

துன்பங்களே மனிதனின் உண்மையான குணங்களை விளக்கும்…

=======================================================

தன்னுடைய குறிக்கோளில் உறுதியாக இருப்பவன் உலகத்தை வென்றவனாகிறான்…

=======================================================

எந்த செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்…

வெற்றி நம்மை தேடி வரும்…

=======================================================

இன்றைய உழைப்பின் வலி…
நாளைய வாழ்க்கையின் ஒளி..!

=======================================================

நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது,

அறிவில்லாத நற்பண்பு பயணற்றது..!!

=======================================================

வெற்றி ஒருபோதும் இறுதி அல்ல…

தோல்வி ஒருபோதும் உறுதி அல்ல..!!

=======================================================

“கோபத்தை அன்பினாலும் தீமையை நன்மையினாலும் வெல்!” – புத்தர்.

=======================================================

முடிந்துவிட்டான் என்று நினைக்கும் போது எழுந்து நில்…

எதிரியும் சிலிர்த்து போவான்…!!

=======================================================

உன் இலக்கில் மட்டும் கவனம் செலுத்து மாபெரும் வெற்றிக்கு உரியவன் நீயாவாய்…

=======================================================

எங்கே தொடங்குகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல, எவ்வளவு உயரத்தில் உங்கள் இலக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதே முக்கியம்..!!

=======================================================

எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம்-சேகுவாரா

=======================================================

பிரச்சனைகளுக்காக போராடுவதை விட, முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது..!!

=======================================================

நல்ல எண்ணமும், செயலும் எப்போதும் நம் வெற்றிக்கு துணை நிற்கும்..!!

=======================================================

உங்கள் குறைகளை, நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்!” – காமராஜர்.

=======================================================

மகிழ்ச்சி நாம் சேர்த்து வைக்கும் பொருட்களில் இல்லை..!

நல்ல மனிதர்களை சேமிப்பதில் உள்ளது..!!

=======================================================

ஒருவரின் வாழ்வில் திறமையை விட சந்தர்ப்பமே பெரிது..

அதைவிட பெரிது அந்த சந்தர்ப்பத்தை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வது..!!!

=======================================================

அளவில்லா அன்பு இருந்தாலும்,அளவோடு கொடுத்தால் தான் அதற்கு மதிப்பு..!!

=======================================================

தேடல்களை தெளிவுப்படுதிக் கொள்ளாதவரை பயணங்கள் யாவும் குழப்பங்குளுடன் நீடிக்கும்…

=======================================================

Leave a Reply

© 2020 Spirituality