நீங்கள் இரவிலும், பகலிலும், சாப்பிட்டு முடித்துப் படுக்கும் போதும், சாப்பிடாமல் படுக்கும் போதும் இடது கைப் புறமாக வைத்துப் படுக்கவேண்டும். ஏனென்றால் நமது உணவுப் பையானது வயிற்றின் இடதுபுறத்தில் இருப்பதால் இடது பக்கம் சாய்ந்து படுக்க வேண்டும். அவ்வாறு படுப்பதனால் சாப்பிட்ட ஆகாரமெல்லாம் சரியாகச் செரிமானமாகி வயிற்றுக்கு யாதொரு சங்கடமில்லாமல் இருப்பதோடு சுவாசமும் வலது நாசியில் ஓடிக் கொண்டிருக்கும். அதனால் ஆயுள் விருத்தியாகும்.
இதற்குக் காரணம் என்னவெனில் வலது நாசியில் இருக்கும் சுவாசம் 8 அங்குலமும், இடதுநாசியில் வரும் சுவாசம் 12 அங்குலமும் வெளியில் வரும். வலதுநாசியில் 8 அங்குல சுவாசம் வெளியில் வருவதால் ஒவ்வொரு சுவாசத்திலும் 4 அங்குலச் சுவாசம் கூடி வருகின்றது. அதனால் ஆயுள் விருத்தி அடைகிறது. இடதுபக்கம் சாய்ந்து படுப்பதால் சீரண சக்தியும், ஆயுள் விருத்தியும் உண்டாகிறது. சாப்பிட்டவுடன் வலது பக்கமாகக் கைவைத்துச் சாய்ந்து படுப்பதால் இரைப்பை வலதுகை ஓரமாய்ப் புரளும். அப்படிப் புரளுவதால் சாப்பிட்ட ஆகாரம் சீரணமாகாமல் உடலுக்குக் கெடுதியை உண்டாக்கும்.
அத்துடன் சுவாசம் 12 அங்குலம் நீளம் வெளியில் இடது நாசியில் ஓடும். அதனால் நீண்ட ஆயுளுக்கும் வாய்ப்புண்டு. சாப்பிட்டவுடன் வலது கையை அழுந்த ஒரு பக்கமாகப்
படுக்கும்போது இவ்விரண்டு விதமான துன்பங்களும் ஏற்படும். இதனை ஒவ்வொரு மங்கையரும் அறிந்து கணவர்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியமாகக் கவனிக்க
வேண்டிய விவரமாகும்.