சிவகாமங்களின் பங்களிப்பு வாசியில் பயணித்து சரத்தை உருவாக்குகிறது – சரபயிற்ச்சி – 1

கீழே கொடுக்கப்படும் தகவல்கள் சரநூலிருந்து நான் படித்து மகிழ்ந்ததை பகிர்ந்துள்ளேன். தாங்கள் சரநூலை பெற்று நீங்களும் படித்து மகிழுங்கள். சரநூல் ஆன்லைன் புத்தகத்தை தேடினீர்கள் என்றால் கிடைக்கும். நன்றி சர நூல் எழுதி என்னைப் படிக்க வைத்து உணர வைத்த அனைத்து குருமார்களுக்கும் நன்றி! (பதிப்பாசிரியர்‌ : முனைவர்‌ ஜெ.ஜெயவாணிஸ்ரீ, வெளியிடுபவர்‌ : இயக்குநர்‌, சரசுவதி மகால்‌ நூலகம்‌)

சிவாகமங்களில்‌ விதித்துள்ள சரியை, கிரியை, யோகம்‌, ஞானம்‌ என்னும்‌ நான்கு பாதங்களை அடைவதற்கான மார்க்கமாக இந்நூல்கள்‌ வழங்கப்பட்டுள்ளன.

அதிலும்‌ யோகமே ஞானம்‌ அடைவதற்கான சிறந்த வழியாகும்‌. யோகமின்றி ஞானத்தை
அடையமுடியாது. இத்தகைய யோகசாதனையை அடைவதற்கு வாசி(மூச்சு)யை வயப்படுத்தவேண்டும்‌. பொதுவாக நாசியை, வாமகதியான இடைநாசி சந்திரன்‌ அதுவே யமுனாநதியாகவும்‌, தட்சிணகதிய2ன பிங்களநாடி சூரியன்‌ அதுவே கங்காநதியாகவும்‌,.
மத்திமகதியான சுழிமுனைநாடி அக்கினி அதுவே சரசுவதி நதியாகவும்‌ ஒப்பிடுவர்‌.

இந்த மூன்றும்‌ கூடிய சங்கமமே திரிவேணி சங்கமம்‌ என்றும்‌, திரிகூடம்‌ என்றும்‌ அழைப்பர்‌. உசுவாச, நிசுவாச, ரூபவாயுவும்‌ மனத்தோடு கூடி திரிகூட தேசத்திலே செறிந்து திடப்படுத்தி அதன்‌ மேல்‌ திரிகோண வழியாகின்ற சுழிமுனை நாடி
மார்க்கத்திலே பிரவேசிக்க வேண்டும்‌.

வாமகதி என்றால் வலமிருந்து இடமாக எழுதுவது என்று பொருள். அதாவது இடகலை நாசியை வாமகதி என்று அழைப்பார்கள். வாமகதி என்பது உற்பத்தியாவது வலப்பக்கம். அது வலமிருந்து இடமாக ஓடும். யமுனை நதி வடக்கு பக்கத்திலிருந்து உருவாகிறது.

ஒரு கதை வழங்குகிறது. சில காலங்களுக்கு முன்‌ பாண்டிய நாட்டில்‌ ஒரு வேளாளன்‌ தன்‌ சிறுவயதிலேயே தன்‌ தாய்தந்தையரால்‌ கல்விக்‌ கற்க அனுப்பப்பட்டான்‌. கல்வியில்‌ போதிய அறிவுத்திறன்‌ பெறாமல்‌ இருப்பதைக்‌ கண்ட அவனின்‌ தந்தையார்‌ ‘அட துட்டனே!

பள்ளிக்குப்‌ போவது பிள்ளைக்கு அழகு” என்பது அறிந்த உனக்கு ஆசிரியரின்‌ ஒரு மொழியேனும்‌ மனத்தில்‌ பதியவில்லையா ?” என மன சஞ்சலித்துக் கொண்டார். இவனும் மன உறுதியுடன் தந்தையின் இசைவிற்காகப்‌ பள்ளிக்குச்‌ சென்று குருவின்‌ துணையால்‌ அவர்‌ உபதேசிக்கும்‌ அனைத்தையும்‌ கைவிடாமல்‌ கற்று அதனைச்‌ சாதிக்க வேண்டுமென்று தனக்குள்‌ தீர்மானித்தான்‌.

அப்போது ஆசிரியர்‌ எப்போதும் போல்‌ பிள்ளைகளை வாசிக்கச்‌ செய்வார்‌. அத்தினம்‌ இப்பிள்ளையைப்‌ பார்த்துக்‌ கொண்டே கணேசா! என்று கூறி தன்‌ ஆசனத்தில்‌ அமர்ந்தார்‌.

அவ்வாக்கியத்தையே தனக்கு உபதேசமாகக்‌ கொண்டு இரவும்‌, பகலும்‌, நினைவிலும்‌, கனவிலும்‌, வைராக்கியமான மனத்தால்‌ தியானித்து வந்தான்‌. ஸ்ரீ விநாயகப்‌ பெருமான்‌ மனமிரங்கி சன்னியாசி வேடம்‌ தரித்து இப்பிள்ளையைத்‌ தன்னருகில்‌ அழைத்து,
“பிள்ளாய்‌! உனக்கு என்னவேண்டு”*மென்று வினவினார்‌.

அப்பிள்ளை நீ யார்‌? உமக்கு என்‌ மீது இவ்வளவு கருணை உண்டாவதற்குக்‌ காரணம்‌ யாதென வினவினான்‌. அதற்கு ஸ்ரீ விநாயகப்‌ பெருமான்‌ தன்‌ உருவம்‌ பூண்டு யான்‌ கணநாதன்‌. என்னையே உன்‌ திருவாக்கினால்‌ அருளினாய்‌ என்றார்‌. அப்படியானால்‌ எனக்கு, ‘அழியாக்கலை” வேண்டுமெனக்‌ கேட்ட கணநாதனும்‌ மிகுந்த அன்புகூர்ந்து, உமையை நோக்கி தியானித்துக்‌ கொண்டிருந்ததால்‌ உனக்கு அருளுவார்‌! எனஉரைத்து மறைந்தார்‌.

அதுமுதல்‌ அப்பிள்ளையார்‌ உமையம்மையை நோக்கி அரிய தவம்‌ புரிய, அப்பிள்ளைக்கு முன்தோன்றி, வேண்டுவதைக்‌ கேள்‌ என உரைத்தார்‌. தனக்கு ஞானக்கலையை அருளுமாறு கேட்க, அக்கணமே யான்‌ சொல்லும்‌ நூல்‌ முழுவதும்‌ கேட்பாயாயின்‌ நீ
விரும்பிய ஞானக்கலை கிடைக்கும்‌ என உபதேசித்து அருளினார்‌. அதனைத்‌ திருவுளம்‌ பற்றக்‌. கேட்டு நின்றார்‌. இவ்வடிப்படையில்‌ சரநூல் ஆக்கம்‌ பெற்றள்ளது என்ற வழக்குமுள்ளது என்பதை இந்தக் கதையின் (இந்தக் கதை ஒரு சுவடியில் இருந்ததாக கூறுவர்) குறிப்பினால்‌ அறியமுடிகிறது.

சர நூல்‌ சாத்திரத்துடன்‌ (சுவடி எண்‌ 1684)
அகத்தியர்‌ ஞான சரநூல்‌, (சுவடி எண்‌ 1879)
ஒளவையார்‌ திருவாய்‌ மலர்ந்தருளிய உயர்ஞான சரநூல்‌, பீர்முகம்மது அருளிய. “திரு மெய்ஞ்ஞான சரதநால்‌, இதனுடன்‌ சென்னையைச்‌ சேர்ந்த டாக்டர்‌ வீ. இராமலிங்க
தேவரவர்கள்‌ அருளிய ‘தினக்கிரமாலங்காரச்‌ சுருக்கம்‌”என்னும்‌ சாத்திரங்கள்‌ அதிகளவில்‌ பயன்படும்‌ என்பதால்‌ இந்நூலில்‌ அதனையும்‌ இணைத்துள்ளேன்‌.

அவனி என்றால் பூமி என்று பொருள். சரியை என்பது அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும்.

கிரியை என்பது மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். இந்நெறி சிவனுக்கு அருகில் இருக்கும் சற்புத்திர மார்க்கமாகும். இந்நெறி நின்றோர் சாமீபமுத்தியைப் பெறுவர்.

யோகக் கலை, அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி. யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது சீவாத்மாபரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.

சரியைத் தொண்டுகள் :
ஆலயங்களில் இறைவனை வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், பூசைத் திரவியம் கொடுத்தல், பூசைக்குரிய பொருட்களைத் துலக்கிச்சுத்தம் செய்தல், தீவர்த்தி, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், வாகனம் துடைத்தல், கழுவுதல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவை சரியைத் தொண்டுகளாகும்.

சரியையின் வகைகள்
சரியையில் ஞானம் – சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுவது.
சரியையிற் சரியை – சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.
சரியையிற் கிரியை – ஒருமூர்த்தியை வழிபடல்.
சரியையில் யோகம் – வழிபடும் கடவுளையும் சிவனையும் தியானித்தல்.

கிரியைத் தொண்டுகள்
கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். மந்திரங்களை ஓதுவது கிரியை என்று முரு பழ இரத்தினம் செட்டியார் குறிப்பிடுகிறார் [1]

திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல்(பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும்.

கிரியையின் வகைகள்

கிரியையிற் சரியை – பூசைப் பொருட்களைத் திரட்டல்.
கிரியையிற் கிரியை – புறத்தில் பூசித்தல்.
கிரியையில் யோகம் – அகத்தில் பூசித்தல்.
கிரியையில் ஞானம் – மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.

யோகத்தின் எட்டு அங்கங்கள் : அட்டாங்க யோகம்
1. சமாதி (பதஞ்சலி) (விட்டு விடுதலை ஆதல்) உணர்வுகளை தியானிக்கும் பொருளுடன் இணைத்துவிடுதல்
2. இயமம் ( 5′ பின்பற்றவேண்டியவை /எடுத்துக்கொள்ளத் தக்கவை) மிதவாதம், சாராதிருத்தல், பேராசை அற்ற தன்மை ,விவேக மற்ற தன்மை மற்றும் உரிமை கொண்டாடாதிருத்தல் .
3. நியமம் (5 கவனிக்கவேண்டியவை) புனிதம், போதுமென்ற மனம் / திருப்தி, கண்டிப்பு/ எளிமை, கற்றல் மற்றும் கடவுளிடம் சரணாகதி.
4. ஆசனம், இதன் பொருள் அமர்தல் அல்லது உடலின் நிலை.
5. பிராணாயாமம் (மூச்சை அடக்குதல்)ப்ராணா , மூச்சு, அயமா, அடக்குதல் அல்லது நிறுத்துதல்.மேலும் வாழ்க்கை ஓட்டத்தைக் கட்டுபடுத்துதல் எனவும் பொருள்படும்.
6. ப்ரத்யாஹரம்(தனியாக நீக்குதல்) புற உலக பொருள்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல்.
7. தாரானை( மன ஒருமைப்பாடு/மனதை ஒரு நிலைப் படுத்துதல்) ஒரே பொருளின் மீது கவனத்தை நிலைப் படுத்துதல்.
8. தியானம்(தியானம்) தியானதிற்கு எடுத்துக்கொண்ட பொருளின் உண்மைத்தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்.

யோகாவும் பகவத் கீதையும் :
கர்ம யோகம் : செயல்களின் யோகம்.
பக்தி யோகம்: அர்ப்பணித்தல் யோகம்
ஞான யோகம்: அறிவு யோகம்

கீதையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து , முதல் 6 பாகங்ககள் கர்ம யோகமாகவும், நடுவில் 6 பக்தி யோகமாகவும், மற்றும் கடைசி 6 ஞானமாகவும் வகைப்படுத்தியுள்ளார்.
ஆசனம் என்றால் உடலின் நிலை அல்லது தோரணை என்று பொருள். அஷ்டாங்க யோகாசனா செய்ய நான்கு வகையான நிலைகள் உள்ளன.

ஞானம் 
ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.

ஞானம் கைகூடுவதற்குச் சற்குருவின் அருள் இன்றியமையாதது. ஆன்மாவின் பரிபக்குவ நிலையிற் சிவனே மானுட வடிவிற் குருவாக வந்து தீட்சை கொடுத்து முத்தி அருளுவான். இவ்வாறு சற்குருவின் அருள் பெற்ற சாதகன், அக்குருவைச் சிவனாகவே காணுவான்; சற்குரு வழிபாடே சன்மார்க்கம் என்று திருமந்திரம் கூறுகிறது.

குருவைக் காணலும், பூசித்தலும், நினைத்தலும், தொட்டுக் கும்பிடுதலும், குருவின் புகழ் பாடுதலும், திருவடிகளைச் சிரத்திற் சூடுதலும் ஆகிய குருபக்தி செய்யும் நெறியே சன்மார்கம். இது உலகத்தவர்க்கு உலகச் சார்பினை ஒழித்து முத்திச் சார்பினைத் தந்து பேரின்பத்தை ஊட்டும் என்பது இப்பாடலின் பொருள்.

ஆன்மா சாந்ததன் வண்ணமாவது; பாசத்தோடு சார்ந்திருக்கும் நிலையிலே அசத்தைச் சார்ந்து அசத்தையே காணும். தன்னையும் அசத்தாகவே காணும். இந்தச் சரீரமே தான் என்று எண்ணும். இவ்வாறிருந்த ஆன்மா முத்தி நிலையிலே சத்தைச் சார்ந்து, சத்தையே காணும். அது இந்த உயிர்நிலையடைந்து, உடலோடு கூடியிருக்கும் நிலை ‘சீவன் முத்தி்’ எனப்படும். ‘சீவன்முத்தர்’ உடம்பு பிரியும் போது சிவத்துடன் இரண்டறக் கலந்து பேரின்பம் அனுபவிப்பர்.

ஞானத்தின் வகைகள்
ஞானத்தில் ஞானம் – ஞான நிட்டை கூடல்.
ஞானத்திற் சரியை – ஞானநூல்களைக் கேட்டல்.
ஞானத்திற் கிரியை – ஞானநூல்களைச் சிந்தித்தல்.
ஞானத்தில் யோகம் – ஞானநூல்களைத் தெளிதல்.

Comments are closed.

© 2020 Spirituality