சர நூல்‌ சாத்திரம்‌ -1

மனிதனுடைய நாசியிலிருந்து வரும்‌ சுவாசம்‌ இடகலை, பிங்கலை, சுழுமுனை என மூன்று வகைப்படும்‌. இவற்றுள்‌, இடகலை என்பது சந்திரகலை. இது பெண்‌. இடது
பக்கநாசியிலிருந்து வருவதாகும்‌. பிங்கலை என்பது சூரியகலை. இது ஆண்‌. வலப்பக்கத்து நாசியிலிருந்து வருவதாகும்‌.

சுழிமுனை என்பது அலி. அக்கினி என்றும்‌ பெயர்பெறும்‌. இது சுவாசம்‌ ஒரு பக்கத்திலிருந்து அடி. மூலத்தில்‌ பறந்து மறு பக்கத்திற்கு வரும்போதே இப்பெயர்‌ பெறும்‌. எருதுக்கு மூக்கணாங்‌ கயிற்றிலிருந்து இயங்குவது போல சரமும்‌ மனிதனுடைய நாசியின்‌ வழியே நின்று நல்வழிவினை, தீ வழி வினைக்குத்‌ தக்கவாறு பிறந்து, இறந்து, இயங்குமாறு செய்யும்‌. இதைக்‌ குரு முகூர்த்தத்தில்‌ அறிந்து அறநெறியில்‌ நிற்பவரே பெரியோர்‌ ஆவார்‌. அதனை அறியாதவர்‌ ஊமையாவர்‌.

எப்போதும்‌ சூரியன்‌ உதிக்கும்‌ முன்‌ ஐந்து நாழிகை தொடங்கி நாசியிலிருந்து சுவாசம்‌ வந்து பன்னிரண்டு அங்குலம்‌ வெளியே செல்லும்‌. அதிலே நான்கு அங்குலம்‌ வெளியே நின்று விட, மிஞ்சிய எட்டு அங்குலம்‌ உள்ளே போய்விடும்‌. இப்படியே அறுபது நாழிகை அதாவது 24 மணி கொண்ட ஒருநாளில்‌ இருபத்தியோராயிரத்து அறுநூறு சுவாசம்‌ விடப்படும்‌. அதிலே ஏழாயிரத்து இருநூறு சுவாசம்‌ வெளியிலே செல்ல எஞ்சிய
பதினான்காயிரத்து நானூறு சுவாசமும்‌ உள்ளே சென்று விடும்‌. இந்தச்‌ சுவாசம்‌ ஒவ்வொரு நாசியிலும்‌ ஐந்து நாழிகைக்கு ஒரு முறை மாறிமாறி ஒடும்‌.

ஞாயிறு, செவ்வாய்‌, சனி என்னும்‌ நாட்களிலே உதயத்துக்கு ஐந்து நாழிகைக்கு முன்னே தொடங்கிய பிங்கலக்கலை சூரியகலை ஓட வேண்டும்‌. திங்கள்‌, புதன்‌, வெள்ளி என்னும்‌ நாட்களிலே இடகலை என்னும்‌ சந்திரகலை அப்படியே ஓடவேண்டும்‌. வியாழக் கிழமையிலே வளர்‌பிறைக்குச்‌ சந்திரகலையும்‌, தேய்பிறைக்குச்‌ சூரியகலையும்‌
தொடங்கி ஓடவேண்டும்‌. இம்முறை தவறியோடினால்‌ துயரமும்‌, மரணமும்‌ சம்பவிக்கும்‌.

காலை 4 மணி முதல்‌ 6 மணி வரையில்‌ மேற்கூறிய தினங்களில்‌ இடதுவலது நாசிகளில்‌ சுவாசத்தை நிறுத்தி அப்பியாசம்‌ செய்து வந்தால்‌ மோட்சம்‌, வீடுபேறு, செல்வம்‌.
குறைவில்லாமல்‌ கிடைக்கும்‌. சுவாசத்தைச்‌ சூரியநாடியில்‌ நிறுத்தி எல்லாக்‌ காரியங்களையும்‌ செய்யும்போது எல்லாமே கைகூடும்‌.

சுவாசம்‌ – இது வலது, இடது நாசிகளில்‌ ரேசக பூரகமாய்‌ நடந்து கொண்டிருக்கும்‌. இதற்குச்‌ சூரியநாடி, சந்திரநாடி என்றும்‌, சிவன்‌ சத்தி என்றும்‌, இடைப்பிங்கலை என்றும்‌ பெயர்‌.
வலது நாசியிலிருந்து வரும்‌ சுவாசம்‌ சூரியநாடி சிவன்‌. இடது நாடியிலிருந்து வரும்‌ சுவாசம்‌ சந்திரநாடி சத்தி இடநாடி என்றும்‌ சொல்லுவர்‌. சுழிமுனை நாடியென்றால்‌ மூலாதாரம்‌ முதல்‌ பிரம்ம கபாலம்‌ (மஸ்தகர்‌ வரையிலும்‌ திரிந்து கொண்டிருக்கும்‌
நாடியாகும்‌.

சுவாசத்தைச்‌ சூரியநாடியில்‌ வைத்துக் கொண்டு சென்றால்‌ சகல காரியங்களும்‌ சித்தியாகும்‌. யோகியானவர்கள்‌ சிறிதும்‌ இடைவிடாமல்‌ யோக மார்க்கத்தைச்‌ செய்து கொண்டு இரவும்‌ பகலும்‌ சுவாசத்தைச்‌ சூரிய நாடியிலேயே வைத்துக்‌ கொண்டிருப்பதால்‌
அவர்களுக்கு சில காலத்திலேயே யோகம் சித்திக்கின்றது.

சுவாசத்தைச்‌ சூரிய நாடியிலேயே வைத்துக்‌ கொண்டிருந்தால்‌ ஆயுள்‌ விருத்தியாகும்‌. இதற்குக்‌ காரணம்‌ யாதெனில்‌ வலது நாசியிலிருந்து வரும்‌ மூச்சுச்‌ சுவாசம்‌ எட்டு
அங்குலமும்‌, இடது நாசியிலிருந்து வரும்‌ மூச்சுச்‌ சுவாசம்‌ பன்னிரண்டு அங்குலமும்‌ வெளியில்‌ வரும்‌. வலது நாசியில்‌ எட்டு அங்குலம்‌ சுவாசம்‌ வெளியில்‌ வருவதால்‌ ஒவ்வொரு மூச்சிலும்‌ நான்கு அங்குலம்‌ சுவாசம்‌ கூடி வருகின்றது. அதனால்‌ ஆயுள்‌ விருத்தியாகிறது.

அதாவது, நிமிடத்திற்குப்‌ பதினைந்து மூச்சாக, பிரதிதினம்‌ இருபத்து நான்கு மணி நேரத்திற்குள்‌ மூக்குத்‌ துவாரங்களின்‌ வழியாக நடந்து நடந்து கழிந்து கொண்டே
வரும்‌. இருபத்தி ஓராயிரத்து அறுநூறு மூச்சுகளும்‌ இந்தச்‌ சரீரத்திலிருந்து ஒவ்வொன்றாக அறுபட்டு இறந்து கொண்டே வந்தால்‌ உண்மைப்‌ பொருளைக்‌ கண்டறிந்து கொள்ளலாம்‌. மறவாதபடி இமைச்‌ சிமிட்டும்‌ நேரங்கூட ஓயாமல்‌ ஆடி
மூலாதாரத்தின்‌ வழியாக நடக்கும்‌ சுவாசம்‌ என்னும்‌ வாசியை முதுகெலும்பின்‌ வெள்ளை நரம்பின்‌ சிறிய துவாரத்தின்‌ வழியாகப்‌ பிரம்ம கபாலமான உச்சிக்கேற்றி உயர்வாயிருந்து தானாக நடந்து கொண்டிருக்கும்‌ மெய்ப்பொருளை அறியமுடியும்‌.

ஆதலால்‌ சுவாசம்‌ என்னும்‌ நூல்‌ நமது சரீரத்திலிருந்து அறுபடும்‌ முன்பே நாமெல்லோரும்‌ கவனமாக இருந்து யோக சித்தி பெறவேண்டும்‌.





Comments are closed.

© 2020 Spirituality