ஏழு சக்கரங்களிலும்‌ சுவாசம்‌ நடந்து – சரவித்தை – 4

ஆயுள்‌ பாகம்‌ காட்டுதல்‌ நாம்‌ உள்ளுக்குள்‌ இழுக்கும்‌ சுவாசம்‌ நிசுவாசம்‌ என்றும்‌,
வெளியில்‌ விடும்‌ சுவாசம்‌ உசுவாசம்‌ என்றும்‌ கூறப்படுகிறது. இந்த நிசுவாசம்‌, உசுவாசங்கள்‌ குறைவுபடாமல்‌ இருந்தால்‌ சப்தாதி விசயங்களும்‌, சரீர வியாபாரங்களும்‌ எந்த விகாரத்திலும்‌ மனம்‌, புத்தி, சித்தம்‌ அகங்காரத்தின்‌ செயல்களும்‌ குறைவுபடாமல்‌ இருக்கும்‌. இதுவே ‘லயம்‌” எனப்படும்‌. இந்த லயமே யோகிகளுக்குப்‌ பயனடையும்‌ விதமாக அமையும்‌. இந்த நிசுவாச, உசுவாசங்களே “அம்ச” – என்பர்‌. இந்தச்‌ சுவாசமானது,
மூலாதாரம்‌, சுவாதிட்டானம்‌, மணிப்பூரகம்‌, அனாகதம்‌, விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம்‌ என்னும்‌ ஏழு சக்கரங்களிலும்‌ திரிந்து கொண்டு நம்முடைய ஆயுள்‌ பாகத்தைக்‌ காட்டுகின்றது.

1. மூலாதாரத்திற்கும்‌ அதாவது, குதஸ்தானத்திற்கு அதிதேவதை கணபதி. அவருக்கு காலை 6 மணி முதல்‌ 6. 40 நிமிடங்கள்‌ வரையில்‌ 600 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌
அதற்கு வயது நிறைந்து சுவாதிட்டானத்திற்குள்‌ பிரவேசிக்கும்‌.

2. சுவாதிட்டானத்திற்கு அதாவது குய்ய ஸ்தானத்திற்கு அதிதேவதை பிரமன்‌. அவருக்குக்‌ காலை 6. 40 மணி முதல்‌ 1. 20 மணி வரையில்‌ 6000 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌
அதற்கு வயது நிறைந்து மணிப்பூரக நாபியான தொப்புளுக்குள்‌ பிரவேசிக்கும்‌.

3. மணிப்பூரகத்திற்கு அதிதேவதை விஷ்ணு. அவருக்கு பகல்‌ 1. 20 மணி முதல்‌ இரவு 8 மணி வரையில்‌ 6000 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌ அதற்கு வயது நிறைந்து அனாகத்திற்குள்‌ அதாவது இருதயத்திற்குள்‌ பிரவேசிக்கும்‌.

4. அனாகதத்திற்கு அதிதேவதை ருத்திரன்‌. அவருக்கு இரவு 8 மணி முதல்‌ காலை 2. 40 மணி வரையில்‌ 6000 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌ அடிநாக்குகான நெஞ்சுக்‌
குழிக்குள்‌ பிரவேசிக்கும்‌.

5. விசுத்திக்கு அதிதேவதை மகேசுவரன்‌. அவருக்கு காலை 2. 40 மணி முதல்‌ 3. 46 மணி வரையில்‌ 1000 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌ அதற்கு வயது நிறைந்து ஆக்ஞையுள்‌ அதாவது நெற்றிக்குள்‌ தோன்றும்‌.

6. ஆக்ஜஞைக்கு அதிதேவதை ஜீவன்‌. அவருக்குக்‌ காலை 3. 46 மணி முதல்‌ 4. 53 மணி வரையில்‌ 1000 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌ அதற்கு வயது நிறைந்து சகஸ்ராரம்‌
என்னும்‌ பிரம்ம கபாலத்திற்குள்‌ (தலை உச்சிக்குள்‌) பிரவேசிக்கும்‌.

7. சகஸ்ராரத்திற்கு அதிதேவதை பரமாத்மா. அவருக்குக்‌ காலை 4. 53 மணி முதல்‌ 6 மணி வரையில்‌ 1000 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌ அதற்கு வயது நிறைந்து மறுபடியும்‌ மறுநாள்‌ காலை 6 மணிக்கு மூலாதாரத்திற்குள்‌ பிரவேசிக்கும்‌.

கடிகாரத்திற்குள்‌ இருக்கும்‌ முள்ளானது ஆடிக்‌ கொண்டே மணியைக்‌ காட்டுவது போல, இந்தச்‌ சுவாசமானது முன்‌ கூறிய ஏழு சக்கரங்களிலும்‌ மேற்காட்டிய கணக்கைப்‌
போல்‌ நிமிடத்திற்கு 15 சுவாசங்கள்‌ நடக்கும்‌. ஒரு மணிக்கு அறுபது நிமிடங்கள்‌ என்பதால்‌ அறுபதையும்‌ பதினைந்தையும்‌ பெருக்கினால்‌ தொள்ளாயிரம்‌ சுவாசங்கள்‌ நடந்து, நாள்‌ ஒன்றுக்கு 24 மணிநேரத்திற்குள்‌ அதாவது (900 ர 24 = 21, 600) இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாசங்கள்‌ நடந்து கொண்டு நம்முடைய ஆயுள்‌ பாகத்தைக்‌ காட்டுகின்றது.

கடிகாரத்திற்கு மணிக்காட்டும்‌ தொழிலும்‌, சூரிய சந்திராதிகளுக்கு நாள்கள்‌, வாரங்கள்‌, மாதங்கள்‌, வருடங்கள்‌, யுகங்கள்‌ காட்டும்‌ தொழிலும்‌ உயிர்க்கோடிகளுக்கும்‌ சுவாசம்‌
ஆயுள்‌ பாகத்தைக்‌ காட்டும்‌ தொழிலாகின்றது.

இறந்திடும்‌ இருபத்தி ஒராயிரத்தி அறுநூறு பேரும்‌ பிரதிதினம்‌, நிமிடத்திற்கு 15 சுவாசங்களாய்‌ நடந்து நாள்‌ ஒன்றுக்கு இருபத்தி ஒராயிரத்தி அறுநூறு சுவாசங்கள்‌ நடந்து நடந்து இறக்கின்றனர்‌. கடவுளைக்‌ காண மூலவாசியை மேலே . ஏற்றிச்‌ சற்று நேரமும்‌ ஓய்வில்லாமல்‌ மூலாதாரத்தின்‌ வழியாக நடந்து கொண்டிருக்கும்‌ சுவாசத்தை முதுகெலும்பிலுள்ள வெள்ளை நரம்பின்‌ துவாரங்களின்‌ வழியாக மேலேயேற்றி
உயர்வாகவும்‌, தனக்குத்தானே பரமாகவுள்ள “சிதாகாசம்‌” என்னும்‌ வெளியைத்‌ தரிசிக்கவேண்டும்‌.

பிரதிதினம்‌ நிமிடத்திற்கு 15 சுவாசங்களாக நடந்து நாள்‌ ஒன்றுக்கு இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாசங்கள்‌ நடந்து நடந்து இவர்கள்‌ எல்லாரும்‌ மூக்குத்‌ துவாரங்களின்‌ வழியாய்‌ ஆடி ஒவ்வொருவராய்‌ இறந்து கொண்டே வந்து கடைசியில்‌ இத்தேகத்தை விட்டு நீங்கினால்‌ கடவுளைக்‌ காண நம்முடைய ஆயுள்‌ பாகம்‌ இந்தச்‌ சுவாசமே ஒழிய சூரிய சந்திரர்கள்‌ நடக்கும்‌ நாட்களல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும்‌ இத்தனைக்‌ கோடி
சுவாசங்கள்‌ என்று பிறப்பின்‌ காலத்திலேயே பஞ்ச பூதங்களினால்‌ உண்டான சரீரத்தில்‌ சேர்க்கப்‌ பட்டிருக்கின்றன. இப்பேர்ப்பட்ட மகா ரகசியமாகிய சுவாசத்தைத்‌ தெரிந்து
கொள்ளாமல்‌ மனிதர்கள்‌ சாதாரணமாகப்‌ பேசும்பொழுது 12 அங்குலம்‌ சுவாசம்‌ வெளி வந்து 8 அங்குல சுவாசம்‌ உள்சென்று 4 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

நடக்கும்‌ போது 16 அங்குலம்‌ சுவாசம்‌ வெளிவந்து 8 அங்குல சுவாசம்‌ உள்சென்று 8 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

கைத்தொழில்‌ செய்யும்‌ போது 20 அங்குலம்‌ சுவாசம்‌ வெளிவந்து 10 அங்குல சுவாசம்‌ உள்சென்று 10 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

சண்டையில்‌ 24 அங்குலம்‌ சுவாசம்‌ வெளிவந்து 12 அங்குல சுவாசம்‌ உள்சென்று 12 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

நித்திரையில்‌ 48 அங்குலம்‌ சுவாசம்‌ வெளிவந்து 30 அங்குல சுவாசம்‌ உள்சென்று 18 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

ஒடும் பொழுது 54 அங்குலம்‌ சுவாசம்‌ வெளிவந்து 27 அங்குல சுவாசம்‌ உள்சென்று 27 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

சம்போகக்‌ காலத்தில்‌ 64 அங்குலம்‌ சுவாசம்‌ வெளிவந்து 24 அங்குலசுவாசம்‌ உள்சென்று 40 அங்குலசுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

இவ்விதமாக ஒவ்வொருவரும்‌ நாள்‌ ஒன்றுக்கு 30, 40 ஆயிரக்கணக்கான சுவாசத்தைச்‌ செலவழித்து விட்டு 60, 70, வருடத்திற்குள்‌ மரணமடைகின்றார்கள்‌. சகல பிறப்பு
உயிரினங்களும்‌ நாள்‌ ஒன்றுக்கு 21,600 சுவாசங்கள்‌ கணக்குக்கு இப்படியாக வைக்கப்பட்டிருக்கின்றது.

மனிதர்களுக்கு கடவுளால்‌ கொடுக்கப்பட்ட வயது நூறாக இருந்த போதிலும்‌, மேலே கூறப்பட்டது போல்‌ சுவாசத்தை மனிதர்கள்‌ விசேடங்களாகச்‌ செலவழித்து விடுவதால்‌ 80
வயதிற்கு மேல்‌ உயிருடன்‌ இருக்கமாட்டார்கள்‌.

குழந்தையானது பிறந்த மூன்றாம்‌ மாதம்‌ இறந்து விட்டால்‌ அக்குழந்தைக்கு 19, 44, 000 பத்தொன்பது இலட்சத்து நாலாயிரம்‌ சுவாசமே இருப்பதால்‌ அவை செலவழிந்தவுடன்‌
உயிர்‌ போய்விட்டது என்று அறியலாம்‌.

ஒவ்வொரு சீவராசிகளும்‌ எந்நாள்‌ வரையில்‌ பிழைத்திருக்க வேண்டுமோ அந்நாட்களுக்கு வேண்டிய சுவாசத்தைக்‌ கடவுள்‌ கணக்கெடுத்து அதற்குத்‌ தக்கவாறு சுவாசத்தை ஏற்படுத்திச்‌ சீவன்களைப்‌ பிறக்கச்‌ செய்து அனுப்பிவிடுகின்றான்‌.

இந்தச்‌ சீவன்களைப்‌ பரிட்சை செய்வதற்காகவே கடவுள்‌ ஆயிரம்‌ வருடங்களுக்கு வேண்டிய சுவாசத்தைச்‌ சீவராசிகளுக்குக்‌ கொடுத்துப்‌ பிழைத்திருக்க அனுப்பிய போதிலும்‌ இவர்கள்‌ ஒவ்வொரு தினமும்‌ ஒரு நிமிடமாவது ஓய்வில்லாமல்‌ ஆயிரம்‌ வருடங்கள்‌ வரையிலும்‌ மாயை சம்சார வாழ்க்கையில்‌ வேண்டிய வேலைகளை மட்டும்‌
செய்து கொண்டு வருகிறார்கள்‌. ஆனால்‌ மோட்சம்‌ அடைவதற்கான மார்க்கத்தை அடைய அரை நிமிடமே கடவுளை நினைத்து வணங்குகிறார்கள்‌.

ஆனால்‌ இவர்கள்‌ கடவுளிடம்‌ எதை நினைத்து வேண்டுகிறார்கள்‌ என்றால்‌ நான்‌ செய்யும்‌ வியாபாரத்தில்‌ நல்ல இலாபம்‌ வரவேண்டுமென்றோ, என்‌ வழக்கில்‌ வெற்றியடைய
வேண்டும்‌ என்றோ, நான்‌ கொடுத்த பணம்‌ வட்டி முதலுடன்‌ சரியாக வர வேண்டும்‌ என்றோ, எனக்கு நல்ல சம்பவங்கள்‌ நடைபெற வேண்டும்‌ என்றோ, வாரிசுகள்‌ பிறக்க வேண்டும்‌ என்றோ, என்‌ குடும்பத்திலுள்ளவர்களுக்கு யாதொரு வியாதியும்‌ அணுகாமல்‌ இருக்க வேண்டும்‌ என்றோ இவ்வாறு அவரவருக்கு வேண்டியபடி வரங்களைக்‌ கேட்கிறார்கள்‌.

ஆனால்‌ மாயை சம்சாரத்தைக்‌ கடந்து கடைத்தேறும்‌ படியான வரத்தைக்‌ கேட்கமாட்டார்கள்‌. சம்சாரத்திலிருந்து கடைத்தேற வேண்டுமென்று கடவுளைக்‌ கேட்பவர்கள்‌ நூற்றில்‌ ஒருவர்‌ இருப்பது கூட மிகவும்‌ அரிதாக இருக்கின்றது.

இப்படிப்பட்டவர்களின்‌ கூத்துகள்‌ யாவும்‌ கடவுளுக்கு ஒரு வேடிக்கையாதலால்‌ மனிதர்களுக்குள்‌ மாயமான மக்களுக்கு விசேடமான ஆசைகளை உண்டாக்கி அந்த
ஆசையால்‌ அவர்களை மோகவலையில்‌ ஆட்படுத்துகின்றார்‌. தான்‌ எல்லாருடைய பலவிதமான கூத்துகளைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கின்றான்‌.

இவற்றை எல்லாம்‌ பெண்களும்‌, ஆண்களும்‌ புரிந்து கொண்டு நாம்‌ தினந்தோறும்‌ என்ன கடமைகளைச்‌ செய்கின்றோம்‌ ? என யோசித்துச்‌ செயல்பட வேண்டும்‌. பின்‌ இதற்காகவா பிறப்பெடுத்தோம்‌? என ஆழ்ந்த மனத்தில்‌ யாரொருவன்‌ யோசிக்கின்றானோ அப்படிப்‌ பட்டவனைக்‌ கடவுள்‌ கருணை கொண்டு நினைக்கின்றான்‌.

நமதுகாலம்‌ இதுவரை எதுவுமில்லாமல்‌ போய்விட்டன என நினைத்து அவனது மனம்‌ துடிதுடித்து மறுபடியும்‌ தாயின்‌ கர்ப்பத்தில்‌ உதிக்காமல்‌ இருப்பதற்காக என்ன செய்ய
வேண்டுமோ? அதற்கு உரியனவற்றைச்‌ செய்யத்‌ தொடங்குவான்‌. ஆதலால்‌ நாம்‌ உலகத்தில்‌ .ஏன்‌ பிறந்தோம்‌, பிறந்ததற்காக எதனை. அடைய வேண்டும்‌ – என்று
பெண்களும்‌, ஆண்களும்‌ யோசிப்பார்களே ஆனால்‌ அவர்களுக்கு நல்ல அறிவு உண்டாகி மறுபிறப்பு வராதபடி அதற்கு வேண்டிய வழியைத்‌ தேடிக்‌ கொள்வார்கள்‌. இதனை
ஆலோசித்து உண்மைப்பொருளை உணர்ந்து அதுவாகவே மனத்திற்குப்‌ புலப்படும்‌.















    Comments are closed.

    © 2020 Spirituality