உ – குருவே துணைஹரி ஓம்‌ நன்றாக வாழ்ககுரு மொழி விவரம்‌ ? – சரவித்தை – 9

பரமேசுவரரைத்‌ திருமுகம்‌ நோக்கிப்‌ பார்வதியம்மன்‌ கேட்கும்‌ விதம்‌
சுவாமி வாக்கினாலே நான்கு வேதம்‌, ஆறு சாத்திரம்‌, பதினெண்‌ புராணம்‌, பஞ்சாங்கம்‌ மற்ற பல சாத்திரத்தினால்‌ விவரித்து சொல்லாமல்‌ நினைத்தப்படி ஒரு காரியம்‌ சொல்ல
சாத்திரம்‌ உண்டோ ? என்று பரமேசுவரரைப்‌ பார்த்துப்‌ பார்வதி கேட்க, பரமேசுவரர்‌ திருவாய்மொழிந்து சொல்லுதல்‌.

கேள்‌ பெண்ணே ! பரம இரகசியமான சர சாத்திரம்‌ உண்டு. அந்தச்‌ சாத்திரம்‌ நினைத்தபோது சகல காரியமும்‌ சொல்லலாம்‌. அந்தச்‌ சாத்திரத்தைச்‌ சொல்கிறேன்‌ கேள்‌. சரம்‌ பார்ப்பது சிவத்‌ தியானம்‌ இடைவிடாமல்‌ குரு பாதத்தில்‌ நினைவையும்‌, மனத்தையும்‌ வைத்துச்‌ சர நிலையறிந்து பார்த்தால்‌ இடகலையாவது, இடது புறமாகும்‌. இது சந்திரன்‌. இது பெண்‌. இது அமிர்தம்‌. இதன்‌ நிறம்‌ கறுப்பு. இதன்‌ இராசி திரராசி என்றும்‌ பேராகும்‌.

பின்‌ கலையாவது வலப்புறம்‌. அதன்‌ குறியன்‌ ஆண்‌. இதன்‌ நிறம்‌ வெள்ளை. இது சரராசிஎன்று பேராகும்‌. உபயம்‌ இரண்டிலும்‌ ஓடுகிறது. சுழிமுனை என்பர்‌. இது அக்கினி. நிறம்‌ சிவப்பு, இதனை உபயராசி என்று அறியவும்‌. சுழிமுனை அறிதல்‌ சுழிமுனையாவது இடகலைக்கும்‌, பின்‌ கலைக்கும்‌ நடுவே நிற்கும்‌. இது மூலநாடி என்றும்‌, இது பிராணவாயு மூலாதாரம்‌ தொடங்கி, பிரமாந்திரம்‌ மட்டும்‌ ஊடுருவி, அஞ்சுரு வாணி போல்‌ இயங்கும்‌. எழுபத்தாறாயிரம்‌ நாடி நரம்பிலும்‌ 96 தத்துவத்திலும்‌ தட்டாமல்‌ சூட்சாதி சூட்சமாய்‌ இயங்கும்‌.

மனம்‌, நினைவு அறிவினால்‌ குருவருளைப்‌ பற்றி அறியவேண்டும்‌. இவற்றுக்கெல்லாம்‌ ரேசகமான வாயுவை விடுவதாகும்‌. பூரகமாவது வாயுவை உள்ளே வாங்குவதாகும்‌. கும்பகமாவது வாயுவைப்‌ பரிபூரணத்தில்‌ அறிவினால்‌ உள்ளே நிறுத்துவதாகும்‌. தடாகமாவது வாயுவைப்‌ பரிபூரணத்தில்‌ அறிவினால்‌ சமதானம்‌ செய்வதாகும்‌.

இந்த நான்கு வகைப்‌ பிரமாணம்‌ சதிராய்‌ கைவந்த சிவஞான யோகிகளுக்குத்‌ தெரிவதோடு அல்லாமல்‌ மற்ற தேவர்கள்‌, மானிடர்களாலேயும்‌ விளக்கமுடியாது. அந்தப்‌
பரப்பிரம்ம மார்க்க சிவத்தின்‌ விவரம்‌ சொல்லக்‌ கேள்‌.

சந்திர பலன்‌
சந்திரன்‌ பலன்‌ உதயமாகையில்‌ ஆடை உடுக்கவும்‌, ஆபரணம்‌ தரிக்கவும்‌, விவாகம்‌ செய்யவும்‌, அடிமைக்‌ கொள்ளவும்‌, கிணறு வெட்டவும்‌, மனை கட்டவும்‌ குடிபுகுவதும்‌,
வித்துக்‌ கட்டவும்‌, வேலை செய்யவும்‌, மன்னரைக்‌ காணவும்‌, உண்மை சொல்லவும்‌, சாந்தி பண்ணவும்‌, பிரதிஷ்டை செய்யவும்‌, சரம்‌ தவிர்க்கவும்‌, வெப்புத்‌ தீர்க்கவும்‌, வித்தைக்‌ கற்கவும்‌, தனம்‌ புதைக்கவும்‌, கடன்‌ கொடுக்கவும்‌ முதலானவை நன்மையான காரியம்‌ சந்திரனில்‌ செய்து முடிக்க வெற்றியாகும்‌.

சூரியபலன்‌
சூரியன்‌ உதயமாகும்போது, உபதேசம்‌ கேட்கவும்‌, கொடுக்கல்‌ வாங்கல்‌ செய்யவும்‌, படையெடுக்கவும்‌, பலிக்‌ கொடுக்கவும்‌, பண்ட பாத்திரங்கள்‌ செய்யவும்‌ – வாங்கவும்‌, சூதாடவும்‌, வழக்குத்‌ தொடுக்கவும்‌, கீதம்‌ பாடவும்‌ எழுதவும்‌, கரி பரியில்‌ ஏறவும்‌, தேன்கலந்த சொற்களைச்‌ சொல்லவும்‌, பகை முடிக்கவும்‌, பேய்‌ பிசாசு தீர்க்கவும்‌, மந்திரங்கள்‌ உச்சரிக்கவும்‌, மருந்துண்ணவும்‌, உறங்க, குளிக்க, குலவையிட அவை போன்ற கூறுகளைத்‌ தீர்க்கவும்‌, முப்போகம்‌ செய்யவும்‌, ஜலத்‌ தர்ப்பணம்‌ செய்யவும்‌, வெள்ளாமை செய்யவும்‌ நன்றாக அமையும்‌.

உபயசரம்‌ இயங்கும்‌ பலன்‌
உபயசரமாவது, இரண்டு புறத்திலும்‌ இயங்குவதாகும்‌. இதில்‌ ஒரு காரியமும்‌ செய்யக்‌ கூடாது. சூனியகாலமாகத்‌ திகழும்‌. ஆகையால்‌ ஒன்றும்‌ செய்யாமல்‌ இருக்கவேண்டும்‌.
ஒரு காரியம்‌ பலிக்குமோ, பலிக்காதோ என்றால்‌ சந்திரனில்‌ பலிக்கும்‌. சூரியனில்‌ பலிக்காது. சந்திரனில்‌ சிதறி ஓடினால்‌ நாள்‌ செல்லும்‌. சந்திரன்‌ அடைப்பட்டால்‌ பலிக்காது என்பதை அறியவேண்டும்‌.

சந்திரக்காலம்‌
யாத்திரை போவதற்குச்‌ சந்திரலுக்குக்‌ கிழக்கும்‌, வடக்கும்‌ போகக்‌ கூடாது. சூரியனுக்குத்‌ தெற்கும்‌ மேற்கும்‌ போகக்‌ கூடாது. அதனை மீறிப்‌ போகும்‌ போது பயமுண்டாகும்‌.
இதற்குச்‌ சந்திரன்‌ என்றால்‌ தெற்கில்‌ மேற்கில்‌ போகவும்‌.

சூரியன்‌ என்றால்‌ கிழக்கும்‌ வடக்கும்‌ போகவும்‌. இது தவிர, அவசரமான காரியங்களுக்குப்‌ போக வேண்டுமானால்‌ சந்திரனில்‌ அந்தச்‌ சரமேற வாங்கி மூன்றடி முன்னே வைத்துப்‌ போகவும்‌. யாத்திரைப்‌ போகவும்‌, தீர்ப்புக்குப்‌ போகவும்‌ தெற்குப்‌ போகலாம்‌. சனிக்கும்‌, வியாழனுக்கும்‌ ஒடுகின்ற பாகத்தில்‌ கால்‌ முன்னால்‌ மூன்றடி வைத்துச்‌ சரம்‌ ஏற
வாங்கித்‌ தெற்கே போகவும்‌.

சூரியக்‌ காலம்‌
திங்கள்‌, வெள்ளி காலங்களில்‌ பாகத்துக்‌ கால்‌ முன்பட நான்கு அடி வைத்துச்‌ சரமேற வாங்கி வடக்கே செல்லவும்‌. புதன்‌ செவ்வாய்க்கு முன்போன்று ஏற வாங்கி இரண்டடி வைத்துக்‌ கிழக்கே செல்லவும்‌.

போர்‌ புரிய சரம்‌ பார்த்தல்‌
சந்திரனில்‌ கச்சைக்‌ கட்டிச்‌ சூரியனில்‌ போருக்குப்‌ புறப்பட வெற்றியாகும்‌. இயங்கும்‌ திசையில்‌ தானின்று கொண்டு இயங்காத திசையில்‌ மற்றவனை நிறுத்தி வெட்ட வெல்லும்‌. மாறாக, இயங்கும்‌ திசையில்‌ நின்று வெட்டத்‌ தனக்கு வெட்டப்படும்‌ என அறியவும்‌. தான்‌ இயங்காத திசையில்‌ நின்று வெட்ட பக்கவெட்டுப்படும்‌.

வைத்தியம்‌ செய்யக்‌ குறிஉபயசரம்‌ இயங்கும்‌ பலன்‌ உபயசரமாவது, இரண்டு புறத்திலும்‌ இயங்குவதாகும்‌. இதில்‌ ஒரு காரியமும்‌ செய்யக்‌ கூடாது. சூனியகாலமாகத்‌ திகழும்‌. ஆகையால்‌ ஒன்றும்‌ செய்யாமல்‌ இருக்கவேண்டும்‌.

ஒரு காரியம்‌ பலிக்குமோ, பலிக்காதோ என்றால்‌ சந்திரனில்‌ பலிக்கும்‌. சூரியனில்‌ பலிக்காது. சந்திரனில்‌ சிதறி ஓடினால்‌ நாள்‌ செல்லும்‌. சந்திரன்‌ அடைப்பட்டால்‌ பலிக்காது என்பதை அறியவேண்டும்‌.

சந்திரக்காலம்‌
யாத்திரை போவதற்குச்‌ சந்திரலுக்குக்‌ கிழக்கும்‌, வடக்கும்‌ போகக்‌ கூடாது. சூரியனுக்குத்‌ தெற்கும்‌ மேற்கும்‌ போகக்‌ கூடாது. அதனை மீறிப்‌ போகும்‌ போது பயமுண்டாகும்‌.
இதற்குச்‌ சந்திரன்‌ என்றால்‌ தெற்கில்‌ மேற்கில்‌ போகவும்‌. சூரியன்‌ என்றால்‌ கிழக்கும்‌ வடக்கும்‌ போகவும்‌. இது தவிர, அவசரமான காரியங்களுக்குப்‌ போக வேண்டுமானால்‌ சந்திரனில்‌ அந்தச்‌ சரமேற வாங்கி மூன்றடி முன்னே வைத்துப்‌ போகவும்‌. யாத்திரைப்‌ போகவும்‌, தீர்ப்புக்குப்‌ போகவும்‌ தெற்குப்‌ போகலாம்‌. சனிக்கும்‌, வியாழனுக்கும்‌
ஒடுகின்ற பாகத்தில்‌ கால்‌ முன்னால்‌ மூன்றடி வைத்துச்‌ சரம்‌ ஏற வாங்கித்‌ தெற்கே போகவும்‌.

சூரியக்‌ காலம்‌
திங்கள்‌, வெள்ளி காலங்களில்‌ பாகத்துக்‌ கால்‌ முன்பட நான்கு அடி வைத்துச்‌ சரமேற வாங்கி வடக்கே செல்லவும்‌. புதன்‌ செவ்வாய்க்கு முன்போன்று ஏற வாங்கி இரண்டடி வைத்துக்‌ கிழக்கே செல்லவும்‌.

போர்‌ புரிய சரம்‌ பார்த்தல்‌
சந்திரனில்‌ கச்சைக்‌ கட்டிச்‌ சூரியனில்‌ போருக்குப்‌ புறப்பட வெற்றியாகும்‌. இயங்கும்‌ திசையில்‌ தானின்று கொண்டு இயங்காத திசையில்‌ மற்றவனை நிறுத்தி வெட்ட வெல்லும்‌. மாறாக, இயங்கும்‌ திசையில்‌ நின்று வெட்டத்‌ தனக்கு வெட்டப்படும்‌ என அறியவும்‌. தான்‌ இயங்காத திசையில்‌ நின்று வெட்ட பக்கவெட்டுப்படும்‌.

வைத்தியம்‌ செய்யக்‌ குறி
வைத்தியம்‌ செய்பவர்‌ போகும்‌ போது காயம்‌, படுகுறி சொல்வது. பிரதிவிக்கு முதுகு, அப்புவுக்குக்‌ கால்‌, அக்கினிக்கு மார்பி, வாய்வுக்குக்‌ கை, ஆகாயத்துக்குத்‌ தலை. இப்படி ஐந்து பூதமும்‌ நிற்பதை அறிந்து செல்லவும்‌. கெட்டவனுக்கு இன்னவிடத்தில்‌ காயம்‌ படுமென்றும்‌ கூறலாம்‌. இவற்றிற்கு மேல்‌ பிரதானம்‌ சந்திரனுக்கு இடப்புறம்‌ என்றும்‌, சூரியனுக்கு வலப்புறம்‌ என்றும்‌, ஆகாயத்துக்குப்‌ படுவான்‌ என்றும்‌ சொல்லலாம்‌.

யாரொருவன்‌ கெட்டவனெனக்‌ குறிப்பறிதல்‌
ஒருவன்‌ கெட்டவன்‌ என்றும்‌, நஞ்சுத்‌ தின்றான்‌ என்றும்‌, சொன்னபடி நடந்தால்‌ சூனியமாகில்‌ பலிக்கும்‌. பூரணமாகில்‌ பலிக்காது. பஞ்ச பூதங்கள்‌ இயங்கும்‌ வகையறியும்‌ முறை பிரதிவியோடும்‌ போது மூக்குத்‌ தண்டைத்‌ தட்டியோடும்‌, தேய்வு ஒடும்‌ போது மேல்‌ விழும்பைத்‌ தட்டியோடும்‌, வாய்வு ஒடும்‌ போது பக்கத்து விழும்பைத்‌ தட்டி ஓடும்‌. ஆகாசம்‌ ஓடும்‌ போது ஒன்றிலும்‌ தட்டாமல்‌ ஓடும்‌ என அறியலாம்‌.

பஞ்ச பூத நிறமறிதல்‌
பிரதிவி – பொன்‌ நிறம்‌. இதன்‌ கோணம்‌ நான்குச்‌ சதுரம்‌. நீளம்‌ 12 விரல்‌ கடையோடும்‌.
அப்புவு – வெண்மை நிறம்‌. பிறை போலிருக்கும்‌. துவர்ப்புண்டு. இதன்‌ நீளம்‌ 16 விரல்‌ கடையோடும்‌.

அக்கினி – சிவப்பு நிறம்‌. முக்கோண வடிவம்‌.
காரத்தன்மை உடையது. 8 விரல்‌ கடையோடும்‌.
வாய்வு – நீல நிறம்‌. புளிப்புத்‌ தன்மையுடையது.
அறுகோண வடிவம்‌. 6 விரல்‌ கடையோடும்‌.
ஆகாசம்‌ – புகை நிறம்‌. வட்ட வடிவம்‌. நாரதமில்லை. ஒரு விரல்‌ கடையோடும்‌. அப்படி ஐந்து பிரதானமும்‌ இயங்கும்‌ என அறியவும்‌. இதில்‌ பிரதிவியின்‌ நிறம்‌ நல்லது. அக்கினி, வாய்வு ஆகாசமும்‌ தீதாகும்‌.

ஆண்‌, பெண்‌ கொண்ட பிணி தீருமோ?, தீராதோ?
என்று ஆண்‌ கொண்ட பிணிக்கு ஆண்‌ வந்து ஆண்களிடத்தில்‌ கேட்டால்‌ தீருமெனவும்‌, பெண்‌ கொண்ட பிணிக்குப்‌ பெண்‌ வந்து பெண்ணிடத்தில்‌ கேட்டால்‌ தீரும்‌ என்றும்‌, இவை
இயங்கும்‌, இயங்காத திசையில்‌ வந்து நின்றால்‌ நடந்தாலும்‌, கிடந்தாலும்‌ பெண்‌ கேட்டப்‌ பிணிக்கு ஆண்திசை இயங்குகின்ற திசையில்‌ பெண்‌ வந்து நின்றால்‌ சிறிது நாட்கள்‌
சென்று தீரும்‌ எனவும்‌, ஆரம்பத்தில்‌ பெண்‌ திசையில்‌ வந்த ஆணுக்கு
முன்போல்‌ சொல்லவும்‌. இதுக்குப்‌ பெண்ணுக்குப்‌ பெண்ணிடத்திலும்‌, ஆணுக்கு ஆணிடத்திலும்‌ சுத்தாங்கமாகத்‌ தீரும்‌.

பிள்ளை நிறமறிதல்‌
ஐந்து பூதமும்‌ இயங்குவது அறிந்து பூபோகம்‌ செய்யும்‌ போது எந்தப்‌ பூதம்‌ இயங்குமோ, அந்தப்‌ பூதநிறமே கர்ப்ப காலத்தில்‌ விந்து தரிக்கும்‌. அந்தப்‌ பிள்ளைக்கு மந்த நிறம்‌
அந்தக்‌ குணமே உண்டாகுமென அறியவும்‌.

பிணி கொண்ட பேருக்குப்‌ பஞ்ச பூதம்‌
இயங்கும்‌ குறிப்பறிதல்‌ பிரதிவிக்கு நாள்‌ சென்று தீரும்‌. அப்புக்குச்‌ சீக்கீரமாகத்‌
தீரும்‌. தேயுவுக்கு மூன்று நாட்களில்‌ தீரும்‌. இதில்‌ மீறினால்‌ மூன்று நாட்களில்‌ மரணம்‌. வாய்வாகில்‌ இரண்டு நாட்களில்‌ தீரும்‌. இதில்‌ மீறினால்‌ மரணம்‌ ஆகாசமாகில்‌ ஏழு நாட்களில்‌ மரணம்‌. உபயமானால்‌ ஐந்து நாட்களில்‌ மரணம்‌. இது தப்பினால்‌
மரணமில்லை என்று கேட்ட பேருக்கு வந்தறிந்து சொல்லவும்‌.

கர்ப்ப சோதனை
கற்பம்‌ ஆணோ ?, பெண்ணோ ?- என்று கேட்டால்‌ கேட்பவருக்கு இயங்கும்‌ திசையாகில்‌ பிள்ளையில்லை எனலாம்‌. இதில்‌ சிதறி ஓடினால்‌ பிறந்தழியும்‌ எனலாம்‌. சந்திரன்‌ என்றால்‌ பெண்‌, சூரியன்‌ என்றால்‌ ஆண்‌ என்று சொல்லவும்‌. பிறந்த பிள்ளை பிழைக்குமா ? என்று கேட்டால்‌, பிள்ளைப்‌ பிறந்த செய்தி யாரொருவன்‌ வந்து கேட்கின்றானோ ? ஆண்‌, பெண்‌ பிறந்த செய்தியறிந்து ஆணுக்குச்‌ சூரியனும்‌, பெண்ணுக்குச்‌ சந்திரனும்‌ இயங்கும்‌ போது ஸ்ரீ போகம்‌ செய்யவேண்டும்‌. இதில்‌ ஆணுக்குச்‌ சூரியனோடினால்‌ ஆண்‌ என்றும்‌, சந்திரன்‌ ஓடினால்‌ பெண்‌ என்றும்‌ சொல்லவும்‌.

விசமறிதல்‌
_ விசமுண்டோ இல்லையோ ?என்றால்‌ சூரியனாகில்‌ விசம்‌ என்றும்‌, சந்திரனாகில்‌ விசம்‌ தீராது என்றும்‌, இயங்கும்‌ திசையில்‌ வந்து இயங்காத்‌ திசையில்‌ வந்து கேட்டால்‌ விசம்‌ கடினம்‌ என்றும்‌ அறிந்து கூறவும்‌.

சர இயக்கம்‌ அறிதல்‌
வெள்ளி, திங்கள்‌, புதன்‌ மூன்று நாட்களிலும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. வியாழனுக்கு அமரபட்சம்‌, பூர்வபட்சம்‌ இரண்டிலும்‌ இயங்கும்‌ வகையறிதல்‌ அமரபட்சத்தில்‌ சூரியன்‌ இயங்கவேண்டும்‌. பூர்வ பட்சத்தில்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. இவ்வாறு இயங்காவிட்டால்‌ சரீரத்துக்குப்‌ பயமும்‌, வியாதியும்‌ உண்டாகும்‌. இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்குச்‌ சந்திரனும்‌, திங்களுக்குச்‌ சூரியனும்‌ ஓடினால்‌ பயமுண்டாகும்‌. இதன்படி ஏழு வாரமும்‌ மாறி ஒடினால்‌ மரணமுண்டாகும்‌. இவ்வாறு இல்லாமல்‌ ஞாயிற்றுக்குச்‌ சூரியனும்‌, திங்களுக்குச்‌ சந்திரனும்‌ ஓடினால்‌ மிகவும்‌ நல்லது. இப்படி ஏழு நாட்களும்‌ தவறாமல்‌ ஓடினால்‌ ஆயுசுக்‌ கூடும்‌. நல்ல சிவயோகி சிவ ஞானியாக இருப்பான்‌ என்று அறியவும்‌.

சரம்‌ பார்த்து கிரிகை அறிதல்‌
சந்திரன்‌ வீடாக இருந்து போசனம்‌ செய்தால்‌ உணவானது துவத்தல்‌, காரத்தன்மையிலும்‌ இருக்கும்‌. சூரிய வீடாக இருந்தால்‌ உணவானது நெய்‌, பால்‌, புளி, கரிப்பு முதலானவற்றை விட்டு விடவும்‌. இப்படி சாப்பிடும்‌ முன்‌ முதலில்‌ தண்ணீர்‌ குடிக்காமல்‌ பாதி வயிற்றுக்குச்‌ சாதமும்‌, கால்‌ வயிற்றுக்குத்‌ தண்ணீரும்‌, கால்‌ வயிற்றுக்கு வாயுப்‌ பட்சணமும்‌ மாறியோடும்‌ போது இடக்கைக்‌ கீழும்‌ படுத்திருந்து சரீர சுத்தி செய்து கொண்டு ஒட்டியாணமும்‌ தரித்துக்கொண்டு சரம்‌ பார்த்தால்‌ சிதறாமல்‌ ஓடும்‌. இப்படி நான்கு வகைக்‌ காலமும்‌ சிதறாமல்‌ ஓடும்‌.

வயதை அறிதல்‌
ஒவ்வொரு கலையிலும்‌ ஐந்து நாழிகைச்‌ சரம்‌ இயங்கும்‌. இதில்‌ ஒரு நாழிகைக்‌ குறைந்தாலும்‌ இருபது வயது குறையும்‌. ச–6

இதுமட்டும்‌ அல்லாமல்‌ சரம்‌ உதிக்கும்‌ போது ஸ்ரீபோகம்‌ செய்தால்‌ அந்த வேளையில்‌ கர்ப்பம்‌ தரிக்கும்‌. பிள்ளைக்கு வயது குறையாது என்று அறியவும்‌. கெடுதி வருமோ ? வராதோ? என்றால்‌ சந்திரன்‌ எனில்‌ வரும்‌. சூரியன்‌ எனில்‌ வராது. சந்திரனில்‌ இருந்து ஓடினால்‌ கொஞ்சம்‌ வந்து போகும்‌. அடைப்பட்டால்‌ வராது எனவும்‌ அறியலாம்‌.
பக்கம்‌ பதினைந்திற்கும்‌ காலம்‌ அறிதல்‌ அமரபட்சம்‌ சூரிய உதயம்‌ தொடங்கிப்‌ பிரதமை முதல்‌ பதினைந்து நாளும்‌ சூரியன்‌ இயங்க வேண்டும்‌.

பூர்வபட்சம்‌
சூரிய உதயம்‌ தொடங்கிப்‌ பிரதிமை முதல்‌ காலம்‌ பதினைந்து நாட்களும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. இவ்வாறு இயங்கினால்‌ வியாதியும்‌, கேடும்‌ விளையும்‌. மழை நாளிலும்‌
அகப்படுவர்‌ எனவும்‌ அறியலாம்‌.

பஞ்சபூதம்‌ சந்திரன்‌ சூரியனில்‌ இயங்கும்‌ வகையறிதல்‌
பிரதிவிக்கு 1 1/, நாழிகை (நிமிடம்‌)
அப்புவுக்கு 1 1/, நாழிகை மிடம்‌)
தேய்வுக்கு 1 நாழிகை இமிடம்‌)
வாய்வுக்கு 1 5/, நாழிகை மிடம்‌
ஆகாசத்துக்கு 1 நாழிகை மிடம்‌
ஆக நாழிகையின்‌ படி பிரதானத்தில்‌ ஐந்து நாழிகையாகச்‌ சந்திரன்‌ கலையில்‌ மூன்று மூன்று பிரகாரமாகப்‌ பிரவேசிக்கும்‌.|

பகலில்‌ 6 பிரகாரமும்‌, இரவில்‌ 6 பிரகாரமும்‌ ஓடும்‌. இவ்வாறு இரவுபகலாக 12 பிரகாரமும்‌ ஓடுவதற்கு ஐந்து நாழிகைக்கு ஒர்‌ இராசியாகப்‌ பனிரெண்டு இராசியிலும்‌
பனிரெண்டு இராசியும்‌ பனிரெண்டு பிரகாரம்‌ ஒடும்‌. ஆக இரவுபகலாகக்‌ கணக்கிட்டு 60 நாழிகையும்‌ வெற்றி, தோல்விக்‌ கணக்கிட்டுக்‌ கூறமுடியும்‌. வெல்வது யாரென்று கேட்டு
வருபவர்களுக்கு இருவர்‌ பேரின்‌ எழுத்தைக்‌ கணக்கிட்டுக்‌ கொண்டு, குறைந்த எழுத்துப்‌ போக உயர்ந்த எழுத்தை உடையவன்‌ வெல்வான்‌ என்று கூறமுடியும்‌.

நாளுக்கு ராசி இயங்கும்‌ விதம்‌
மேசம்‌ – 41, நாழிகை, ரிசபம்‌ – 4 1/, நாழிகை, மிதுனம்‌ –
5 1, நாழிகை, கற்கடகம்‌ — 5 1/, நாழிகை, சிம்மம்‌ – 5 17, நாழிகை,
கன்னி – 5 நாழிகை, துலாம்‌ – 5 நாழிகை, விருச்சிகம்‌ – 5 1,
நாழிகை, தனுசு – 5 1, நாழிகை, மகரம்‌ – 5 7, நாழிகை, கும்பம்‌ 44, நாழிகை, மீனம்‌ – 4 17, நாழிகை, இராபகம்‌ 50 நாழிகையும்‌ சரியாக இயங்கும்‌ என்று அறியவேண்டும்‌.

யாத்திரை வேளை அறியும்‌ முறை
செவ்வாய்‌, வெள்ளி – காலமே இரசித வேளை. ஞாயிறு, புதன்‌, சனி – இம்‌ மூன்று நாட்களும்‌ தாமித காலம்‌. திங்கள்‌, வியாழன்‌ – இரண்டு நாட்களும்‌ சாந்தமான வேளை.
மற்ற நாட்களும்‌, நாழிகையும்‌ சாந்தமான வேளை. இப்படி மாறிமாறி வரும்‌ என்பதை அறியவேண்டும்‌.

ஓருவன்‌ எங்கே என்று கேட்பவர்கள்‌ வந்தால்‌
பிரதிவியாகில்‌ வீற்றிருப்பான்‌. அப்புவாகில்‌ முற்றத்தில்‌ இருப்பான்‌.
தேயுவாகில்‌ வருவான்‌. வாயுவாகில்‌ வீற்றிருப்பான்‌. ஆகாயமாகில்‌ மலை கடலுக்கு அப்பால்‌ இருப்பான்‌.

வருவானோ ? வரமாட்டானோ ? என்று கேட்பவர்களுக்கு
பிரதிவியாகில்‌ நிற்கிறான்‌. அப்புவாகில்‌ மீண்டும்‌ வருவான்‌. தேயுவாகில்‌ வழிப்‌ புறப்பட்டான்‌. வாயுவாகில்‌ ஊரில்‌ இருப்பான்‌. ஆகாயமாகில்‌ ஒரு நாழிகைக்குள்ளே
வருவானென்று சொல்லவும்‌.

மூவகை இராசியை அறியும்‌ முறை
சூரியன்‌ – சரராசி, சந்திரன்‌ – இராசியின்‌ இருபுறமும்‌ ஒடும்‌. அக்கினி – உபயராசி என்பதாகும்‌. பஞ்ச பூதங்களும்‌ இயங்கும்‌ விதம்‌ பிரதிவி பிரதிவி இயங்கும்‌ போது கோவில்‌ கட்ட, பிரதிட்டை செய்ய, வீடுப்புக, ஆபரணம்‌ வாங்க, பட்டம்‌ கட்ட, முடிச்‌ சூட்ட
முதலான காரியம்‌ மேற்கொள்ளவும்‌ மாமரம்‌ வைக்கவும்‌ நன்றாகும்‌.

அப்பு
அப்பு இயங்கும்‌ போது மலரி, வாவி, குளம்‌, கிணறு, சோலை, யாத்திரை, உழுதல்‌, கவி உரைக்க, மணம்‌ செய்ய மிகவும்‌ நன்றாகும்‌.

தேயு
கொடியது செய்ய, பிணி தீர்க்க நன்று.

வாய்வு
ஆனை, குதிரை தேரேறுதல்‌ நன்று.

ஆகாயம்‌
அமைதியாக இருப்பது நன்று. இப்படி ஐந்து பிரதானமும்‌’ இயங்கும்‌ வழியறிந்து செய்யவும்‌.

சரம்‌ இயங்குவதை அறிதல்‌
ஆராதாரத்தை ஊடுருவினால்‌ பிராண நாடியில்‌ நாளொன்றுக்கு வாசி 21600 சுவாசமோடும்‌. இதில்‌ 16400 சுவாசம்‌ உள்ளேயும்‌, இதில்‌ 7200 சுவாசம்‌ வெளியேயும்‌ இயங்கும்‌. 16100 சுவாசம்‌ சரீரத்தில்‌ நின்று உபத்திரம்‌ செய்து 12 அங்குலம்‌ மாறுப்பட்டு 4 அங்குலம்‌ புறம்பாகப்‌ போகும்‌.

வாரப்‌ பலன்‌ அறிதல்‌
ஞாயிறு தப்பில்‌ வியாதி திங்கள்‌ தப்பில்‌ வலி, போக்குண்டாகும்‌. செவ்வாய்த்‌ தப்பில்‌ சாவு நிகழும்‌. புதன்‌ தப்பில்‌ கலகம்‌ வியாழன்‌ தப்பில்‌ இராசாவுக்குத்‌ துன்பம்‌. வெள்ளி தப்பில்‌ ஊர்‌ விட்டுப்‌ போகும்‌ நிலை ஏற்படும்‌. சனி தப்பில்‌ பஞ்சம்‌ உண்டாகும்‌.

ஒரு காரியம்‌ பொய்யா அல்லது உண்மையா என அறிதல்‌
சந்திரன்‌ என்றால்‌ பொய்‌, சூரியன்‌ என்றால்‌ மெய்‌ என்று அறியவும்‌.
காலமறிதல்‌ சூரியன்‌ ஒரு நாள்‌ ஓடினால்‌ மூன்று வருடத்தில்‌ மரணம்‌. இருபுறத்திலும்‌ மாறாமல்‌ பத்து நாழிகை இரவும்‌ பகலும்‌ ஓடினால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌. மூன்று நாட்கள்‌ ஒரே பக்கமாக ஒடினால்‌ ஒரு வருடத்தில்‌ மரணம்‌, வாயினால்‌ ஓடினால்‌ இரண்டு
நாட்களில்‌ மரணம்‌. எக்காலமும்‌ இரவு முப்பதும்‌ சந்திரனிலும்‌ இயங்கினால்‌, பகல்‌ முப்பதும்‌ சூரியனிலும்‌ மாறாமல்‌ இயங்கினால்‌ நல்ல சிவயோகியாவான்‌. ஒரு புறத்தில்‌ ஆறு நாட்கள்‌ ஓடினால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌, பத்து நாள்‌ ஓடினால்‌ முப்பத்து இரணடு நாளில்‌ மரணம்‌.

சூரிய தரிசனம்‌
காற்று அடிக்காத போது மதியத்தில்‌ சூரியனை நோக்கிப்‌ பார்த்து நிலத்திலே குழிவெட்டி குழியில்‌ உமிழ்ந்து அதைப்‌ பார்த்தால்‌ “பஞ்ச வர்ணம்‌” – தோன்றி வில்‌ போல்‌ கண்டால்‌ வியாதியும்‌ சாவும்‌ அவ்வாண்டிலிருந்து மூன்று வருடத்திற்கும்‌ இல்லை. முறிந்து வில்லாய்‌ தோன்றினால்‌ பத்தாண்டில்‌ சாவு. அந்த முறிந்த வில்லில்‌ ஒரு பெண்‌ சொரூபம்‌ தோன்றினால்‌ ஆறாம்‌ பிறையில்‌ சாவு உண்டாகும்‌.

சந்திர தரிசனம்‌
பூர்ண சந்திரனில்‌ காற்றடிக்காத வேளையில்‌ செப்பு சட்டியில்‌ பசுவின்‌ நெய்‌ விட்டு அதனுள்‌ சந்திரனைப்‌ பார்த்தால்‌ சாதாரணமாகத்‌ தெரிந்தால்‌ ஆயுசு உண்டு. சிவப்பாகில்‌ வாழ்வு உண்டு. பச்சையாகில்‌ வியாதியுண்டு. பொன்‌ நிறமாக இருந்தால்‌ கேடு உண்டு. கறுப்பாகில்‌ சாவு உண்டு.

இதுபோல்‌ இன்னொரு முறையும்‌ உண்டு. மதியும்‌ குறைந்தால்‌ ஆறு பிறையில்‌ மரணம்‌. வடக்கு, தெற்கு மதியானத்தில்‌ குறைந்தால்‌ மூன்று பிறையில்‌ மரணம்‌. தெற்கு மதியத்தில்‌ குறைந்தால்‌ ஆறு பிறையில்‌ மரணம்‌.

கிழக்கு மதியத்தில்‌ குறைந்தால்‌ இரண்டு பிறையில்‌ மரணம்‌. நடுவில்‌ குறைந்து பள்ளமாக இருந்தால்‌ ஒரு பிறையில்‌ மரணம்‌, சர சாத்திரம்‌ உச்சித்‌ துடிக்கும்‌ போது அவ்வாண்டில்‌ மரணம்‌. கண்டம்‌ துடிக்கும்‌ போது இரண்டாண்டில்‌ மரணம்‌. புயந்துடிக்கும்‌ போது ஆறு திங்களில்‌ மரணம்‌. கன்னம்‌ விடாமல்‌ துடிக்கும்‌ போது மூன்று திங்களில்‌ மரணம்‌.

இடக்‌ கன்னம்‌ துடிக்கும்‌ போது தூரத்திலிருந்து வருவார்‌. வலக்‌ கன்னம்‌ துடிக்கும்‌ போது விருந்து வரும்‌. உருத்‌ தெரியாமல்‌ கண்ணொளி மயங்கில்‌ மூன்று நாளில்‌ மரணம்‌.

கனவின்‌ குறி
தென்திசையிலிருந்து இரதம்‌ வரக்‌ கண்டால்‌ மூன்றாண்டில்‌ மரணம்‌. அருந்ததி தெரியாமல்‌ இருந்தாலும்‌, தன்‌ மூக்கின்‌ முனைத்‌ தெரியாமல்‌ இருந்தாலும்‌ ஒரு மண்டலத்தில்‌ மரணம்‌.

இதழ்‌ நாக்கிற்கு இடப்புறம்‌ எரிச்சல்‌ கண்டால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌. உதடு, நாக்கு, பல்‌, தாது இவை கருத்துப்போனால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌.

சிறுத்த இடைப்‌ பருத்து, மார்பும்‌ பருத்தால்‌ சிறிது நாட்களில்‌ மரணம்‌. தண்ணீர்‌, கண்ணாடி, நெய்‌ இதில்‌ தன்‌ சிரசு தெரியாமல்‌ இருந்தால்‌ சிற்சில நாளில்‌ மரணம்‌.

மகுடம்‌ கையினால்‌ செவியை மூடி வாக்கியங்கள்‌ உரைத்தாலும்‌ கேட்காமல்‌ இருந்தாலும்‌, பருத்த உடல்‌ சிறுத்தாலும்‌ ஒரு மாதத்தில்‌ மரணம்‌ அடைவான்‌. தன்‌ நிழல்‌
தெற்குச்‌ சாய்ந்தாலும்‌, தன்‌ நிழல்‌ தெரியாமல்‌ இருந்தாலும்‌ ஒரு மண்டலமான 48 நாட்களில்‌ மரணம்‌.

குருபுத்திரனுக்குச்‌ சித்தியாவும்‌ கனவின்‌ குறி பேய்‌, பூதம்‌, இராட்சதர்‌, கருங்காகம்‌, குரங்கு, புலி, கரடி, செந்நாய்‌ இவை கனவில்‌ தினசரி வந்தால்‌ நல்ல பக்குவமான
60, 70, 80 தில்‌ மரணம்‌. எண்ணெய்த்‌ தேய்க்கவும்‌, முடிக்‌ கத்தரிக்கவும்‌, தென்‌ திசையிலிருந்து ஒருவன்‌ ஓலைக்‌ கொண்டு வந்து அழைத்துப்‌ போகக்‌ கண்டால்‌ ஒரு திங்களில்‌ மரணம்‌.

கல்யாணம்‌ செய்யவும்‌, கருமேனி உடையவனாகவும்‌, கருங்காவி, தடி வைத்திருத்தல்‌, கரம்‌ கூப்பிட, தலையில்‌ முண்டாசுக்‌ கட்டியிருத்தாலும்‌ இவர்கள்‌ யாரேனும்‌ வந்து
அழைத்தால்‌ ஒரு மண்டலத்தில்‌ மரணம்‌ உண்டாகும்‌.

கைக்கொண்டு தன்‌ தலையில்‌ கைவைத்து ஒருவர்‌ பேசுவதைக்‌ கேட்காமல்‌ போனால்‌ அந்த மாதத்தில்‌ மரணம்‌.

வாரப்பலன்‌
திங்கள்‌, புதன்‌, வெள்ளி ஆகிய மூன்று நாளும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. சனி, செவ்வாய்‌, ஞாயிறு ஆகிய மூன்று நாளும்‌ காலையில்‌ சூரியன்‌ இயங்க வேண்டும்‌. வியாழனுக்கும்‌, பூர்வ பட்சத்திற்கும்‌, அமரபட்சத்திற்கும்‌ சந்திரன்‌ சூரியன்‌
இரண்டிலும்‌ இயங்கவேண்டும்‌. பூர்வ பட்சத்திற்குச்‌ சந்திரன்‌ இயங்கவேண்டும்‌. அமரபட்சத்திற்குச்‌ சந்திரன்‌ இயங்கவேண்டும்‌.


Comments are closed.

© 2020 Spirituality