தசாம்சமும் தொழிலும்
பத்தாமிடாதிபதியின் வலுவை தெரிந்துகொள்ள நவாம்ச சக்கரத்தோடு தசாம்ச சக்கரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். தசாம்சமானது ஒருவரது சுய முயற்சியால் வேலையில் பெறும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் ஜாதகரது செயலையும் கர்மாவையும் குறிப்பிடும்.
தசாம்ச சக்கரத்தின் சிறப்பான பலன்கள்:
- தசாம்ச சக்கரத்தில் 3வது பாவமும் அதன் கேந்திரங்களான 6,9,12ம் பாவங்களும் முயற்சியைக் குறிக்க உதவக் கூடியதாகும். இவைகளின் அதிபதிகளும் இந்த பாவங்களில் அமையும் ராசிக்கட்டத்தின் 3 மற்றும் 10ம் அதிபதிகளும் அதிக நன்மையைக் கொடுக்கும்.
- தசாம்சக் கட்டத்தில் 10ம் இடத்தில் உள்ள கிரகங்கள் சுபகிரகங்கள் ஆனாலும் பாவக்கிரகங்களானாலும் நன்மையே செய்யும்.
- கேந்திர ஸ்தானம் எனப்படும் நன்மை செய்யும் 4ம் இடம் சுகஸ்தானம் ஆகும். இது தொழிலைப் பொறுத்தவரை தடைகளையும் தாமத்தையும் உருவாக்குவதாகும். அதாவது நான்காமிடம் சுகத்தைக் தரும் 10ம் இடம் செயலைக் குறிக்கும். ஒருவர் செயல்படாமல் சுகமாக அமர்ந்துவிட்டால் அங்கு அவரது செயல்படும் தன்மை நின்று விடும். ஆகவே தசாம்ச சக்கரத்தில் நான்காமிடத்தில் அமரும் பாவக் கிரகங்கள் தீமையையே செய்யும்.
எந்த சக்கரத்திலிருந்து எதை அறிவது என்பதை 16 வகை சோடச வர்க்கச் சக்கரங்களிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் :
1. ராசி – மெய், நிறம், தோற்றம்
2. ஹோரா – செல்வநிலை
3. திரேக்காணம் – சகோதரன், சகோதரி
4. சப்தாம்சம் – குழந்தைகள்
5. நவாம்சம் – கணவன் அல்லது மனைவி
6. தசாம்சம் – தொழில்
7. துவாதசாம்சம் – பெற்றோர்
8. திரிம்சாம்சம் – விதி
9. சோடசாம்சம் – வாகனம்
10. சஷ்டியாம்சம் – பொதுப்பலன் (தசாபுக்தி பலன்)
11. சதுர்த்தாம்சம் – அதிர்ஷ்டம்
12. விம்சாம்சம் – கடவுள் நம்பிக்கை, குலதெய்வம் பக்தி
13. சதுர்விம்சாம்சம் – கல்வி
14. பம்சாம்சம் – உடல் வலிமை
15. சுவேதாம்சம் – சுகம்
16. அக்ஷவேதாம்சம் – குணம்