பொன்வானிலே வண்ண மேகங்கள்
வட்டமேடை கட்டி ஆட!
அதைப் பார்த்துதான் தரைமீதினிலே
வண்ண தாமரைகள் பூத்துக் குலுங்கி ஆட!
நடு இரவில் தென்றல்
வந்து ஜாதகங்கள் பார்த்து
அல்லி மலரையும் வெண்நிலவையும்
ஜோடி சேர்த்து பார்க்க
முத்து முத்து விண்மீன்கள்
ஆடி ஒடி விளையாட
வண்ண வானவில் பூமாழையாக
எழுந்து நின்றாட
இத்திருவிளையாடலே இயற்கையின்
அழகு குறிப்போ?
-ஜெய்கணேஷ்