நாவல் பழம்

நாவல் பழத்தின் மருத்துவ குணம்..! நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். ——————————————————————————————————————————–

நாவல் பழத்தின் நன்மைகள் (Benefits Of Jamun Fruits)

1. ஹீமோகுளோபின் எண்ணிக்கை மேம்படும்
2. ஆரோக்கியமான சருமம் …
3. நீரிழிவு மேலாண்மை …
4. இதய ஆரோக்கியம் மேம்படும் …
5. எடை குறையும் …
6. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் …
7. வாய் ஆரோக்கியம் மேம்படும்

பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது.

நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு  தடுக்கப்படுகிறது. 

நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்போக்குக் குறையும். 

நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.

நாவல்பழம் வெறும் பழமல்ல… 6 நன்மைகளை அள்ளித்தரும் அற்புத பொக்கிஷம்!

நாவல்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா என்று நீங்கள் வியக்கக் கூடும். ஆனால் உண்மையில் ஏழைகளின் வரப்பிரசாதம் என்று கூறலாம்.

நாவல்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா என்று நீங்கள் வியக்கக் கூடும். ஆனால் உண்மையில் ஏழைகளின் வரப்பிரசாதம் என்று கூறலாம். ஆடி மாதம் தொடங்கிவிட்டால் நாவல் பழம் கைக்குக் கிடைக்க ஆரம்பித்துவிடும். அடுத்த மாதம் ஆடியும் வந்துவிடும் நாவல் பழமும் வந்துவிடும்.

நாவல் பழம் மட்டுமல்ல அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது நல்லது. இயற்கை நமக்குக் கொடுக்கும் வரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாவல் பழத்தை சாப்பிடுவதால் இதயநோய், புற்றுநோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா, ஆர்திரிட்டிஸ் என பல நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். வயிறு உப்புசத்தை இந்தப் பழம் தவிர்க்கிறது. 

நாவல் பழத்தின் 6 மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:

சிவப்பு அணுக்களை அதிகரிக்கும்:
ரத்தசோகை இருக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் தவறாமல் நாவல் பழத்தை சாப்பிடுங்கள். நாவல்பழத்தில் இரும்புச்சத்தும், வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகமாகிறது. இது உங்களின் உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் செல்வதை சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஈறுகளை பலப்படுத்தும்:
ஈறுகளின் ரத்தக் கசிவு இருந்தால் நாவல் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வாங்கள். அதுமட்டுமல்ல நாவல் மர இலைகளையும் மென்று துப்பலாம். அந்தச்சாறில் இருந்து ஆன்ட்டிபாக்டீரியல் தன்மை பல் ஈறு பிரச்சனையை சரி செய்யும்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நாவல் பழம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இவை ஆண்ட்டி ஆக்சிடன்டுகளின் உறைவிடம் எனலாம். மேலும் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகியன உள்ளன. கண்ணுக்கு நல்லது. தோலில் உள்ள சுருக்கங்கள், பருக்கள், கரும்புள்ளிகளை நீக்கும். சருமத்தை மிருதுவாக்கும்.

ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்
நாவல் பழம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும். இதில் குறிப்பிட்ட அளவு பொட்டாசியம் இருக்கிறது. இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

நாவல்பழம் வெறும் பழமல்ல...  6 நன்மைகளை அள்ளித்தரும் அற்புத பொக்கிஷம்!

உடல் எடையைக் குறைக்க உதவும்:
உடல் பருமன், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை உடல் பருமன் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறையும் அதற்கு ஒரு காரணம். இந்நிலையில் நாவல் பழத்தை உட்கொண்டு வந்தால் அது உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கிறது.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
உலகளவில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உள்ளனர். பதின்ம வயதில் உள்ளவர்களுக்குக் கூட சர்க்கரை நோய் வருகிறது.. சர்க்கரை நோயாளிகள் தாராளமாக உட்கொள்ளக் கூடிய பழம் நாவல் பழம். நாவல் பழ விதைகளில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காரணிகள் உள்ளன. அவை இன்சுலின் சுரப்பை அதிகரிக்கின்றன. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த சீசனில் நாவல் பழத்தை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.

நாவல் பழத்தின் மருத்துவ குணம்..!

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது. 

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க  வல்லது. 

Comments are closed.

© 2020 Spirituality