எண்ணெய், உப்பு போன்றவற்றை பிறந்த வீட்டில் இருந்து பெண்கள் வாங்கக் கூடாது எனக் கூறுவது ஏன்?

உப்பு, எண்ணெய் ஆகியவை ஈமச் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. உடலை அடக்கம் செய்யும் போது புதை குழிக்குள் உப்பு, விபூதி ஆகியவை அதிகளவில் தூவப்படும்.

உறவு முறைகளை அறுக்கக் கூடிய பொருட்களாக கல் உப்பு, நல்லெண்ணெய் ஆகியவை கருதப்படுவதால், இவற்றை பிறந்த வீட்டில் இருந்து வாங்குவதை திருமணமான பெண்கள் தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற பொருட்களை தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு பெண்கள் கொண்டு சென்றால் இரு குடும்பத்தினர் இடையே வாய் வார்த்தையாக துவங்கும் சண்டை நாளடைவில் கருத்து வேறுபாடு, கைகலப்பாக மாறவும் வாய்ப்புள்ளது. எனவே இந்தப் பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்ப்பது நல்லது.

Comments are closed.

© 2020 Spirituality